என் மலர்
நீங்கள் தேடியது "Eye Donation"
- விழிப்புணர்வு மனிதச் சங்கிலியை டவுன் சரக உதவி போலீஸ் கமிஷனர் சுப்பையா தொடங்கி வைத்தார்.
- கண்தானம் குறித்து அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.
நெல்லை:
நெல்லை டாக்டர் அகர்வால் கண் வங்கி மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா கடந்த 25-ந்தேதி முதல் வருகிற 8-ந் தேதி வரை கடைபிடித்து வருகிறது. அதன்படி கண்தானம் பற்றிய விழிப்புணர்வு மனிதச் சங்கிலியை கடந்த 25-ந்தேதி டவுன் சரக உதவி போலீஸ் கமிஷனர் சுப்பையா தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு
இதில் நெல்லை அண்ணா பல்கலைக்கழகம், பாளை சாராள் தக்கர் பெண்கள் கல்லூரி, வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரி, ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரி, டாக்டர் அகர்வால் ஆப்டோமெட்ரி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் கண்தானம் குறித்து அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டியும் கல்லூரி மாணவ, மாணவி களுக்கு கவிதைப் போட்டியும் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாநகரில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மூலம் கண்தானம் குறித்தான பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
கண்தானம்
நேற்று நிறைவு நாள் நிகழ்ச்சியில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ராணி லட்சுமி வரவேற்று பேசினார். டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மண்டல மருத்துவ இயக்குனர் டாக்டர் டி. லயனல்ராஜ் கருவிழி மாற்று அறுவை சிகிச்சையில் உலகிலேயே நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஆற்றிய சாதனைகள் பற்றியும் கண் தானத்தின் பயன்கள், கண் தானத்தின் அவசியத்தைக் குறித்து பேசினார்.
விழாவில் தலைமை விருந்தினராக ரோட்டரி கவர்னர் முத்தையா பிள்ளை மற்றும் சிறப்பு விருந்தினராக நெல்லை இந்திய மருத்துவ சங்க நிதிச்செயலாளர் டாக்டர் பிரபுராஜ், ரோட்டரி மாவட்ட பொதுச் செயலாளர் ஆறுமுக பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு கண் தானம் அளித்த குடும்பத்தி னர் மற்றும் கண்தானம் நடை பெறுவதற்கு உறுதுணையாக இருக்கும் இயக்கத்தின் தலைவர்கள், உறுப்பினர்கள், தன்னார்வ லர்கள் மற்றும் போட்டி களில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவித்தனர்.
நிகழ்ச்சியில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கண்தான இயக்க உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டுனர். முடிவில் மேலாளர் கோமதிநாயகம் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை கருவிழிப் பிரிவு மருத்துவர் டாக்டர் ராணிலட்சுமி, கண்வங்கி மேலாளர் ஜெகதீஷ் மற்றும் மருத்து வமனை மருத்து வர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.






