என் மலர்
திருநெல்வேலி
+2
- 1,062 மூத்த முன்னோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழிகளை வழங்கினார்.
- தமிழகத்தில் சிறந்த ஆட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
நெல்லை:
நெல்லையில் தி.மு.க மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி பாளை கே.டி.சி நகரில் உள்ள மாதா மாளிகையில் இன்று நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1,062 மூத்த முன்னோடிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்பில் பொற்கிழிகளை வழங்கினார்.
தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
கடந்த 2½ ஆண்டுகளில் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். தேர்தல் வாக்குறுதியில் சொன்னதையும், சொல்லாததையும் அவர் செய்துவருகிறார். ஆட்சி பொறுப்பேற்றவுடன் முத்தான பல திட்டங்கள் முதல்-அமைச்சரால் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து திட்டங்களுக்கும் முத்தாய்ப்பான திட்டமாக கலைஞர் நூற்றாண்டில் அண்ணா பிறந்த நாளில் மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மிசா சட்டத்தால் பலர் கைது செய்யப்பட்ட நடவடிக்கையின்போது முன்னாள் முதல்-அமைச்சரை சந்திக்க காவல்துறையினரால் தடுக்கப்பட்ட போதும் அனைத்தையும் மீறி சுற்றுலா செல்வதாக கூறி நேரில் வந்து கருணாநிதியை சந்தித்தவர்கள் இப்போது உள்ள தி.மு.க மூத்த முன்னோடிகள். கழகத்தின் வரலாறு தொண்டர்கள் தான். பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் மறு உருவங்களை உங்களில் பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பட்டர்புரம் விலக்கில் நின்று கொண்டிருந்த லாரியை போலீசார் சோதனையிட்டனர்.
- கஞ்சா விற்பனை செய்த ரீகன், உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரம் விலக்கில் ஒரு கும்பல் லாரியில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக நாங்குநேரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆதம் அலி, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று நின்று கொண்டிருந்த லாரியை சோதனையிட்டனர். அதில் லாரியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும் கஞ்சா விற்பனை செய்த ஆரல்வாய்மொழியை சேர்ந்த ரீகன், தூத்துக்குடி ஆரோக்கியநாதபுரத்தை சேர்ந்த ராஜதுரை, மறுகால்குறிச்சியை சேர்ந்த செல்வம் என்ற லெப்ட் செல்வம், கோபி, சிவசுப்பு என்ற சிவா, தூத்துக்குடி லீவிபுரத்தை சேர்ந்த முத்து, நாங்குநேரியை சேர்ந்த இசக்கிபாண்டி, கல்யாணி, தென்னிமலையை சேர்ந்த இசக்கிப்பாண்டி, ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்த பாவன்பவிகானா, ராமுடூ, மேலப்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் மகன் அனிதா ஆகிய 13 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 கிலோ எடையுள்ள கஞ்சாவும், லாரியும் பறிமுதல் செய்யப் பட்டது.
- கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 15, 16-ந்தேதிகளில் நெல்லையில் இளைஞரணி முதல் மாநாடு நடைபெற்றது.
- திராவிடத்தை தாங்கி கட்சி பெயர் வைத்துள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் திராவிடம் குறித்து ஆளுனரின் கருத்திற்கு பதில் சொல்ல மறுக்கிறார்.
நெல்லை:
தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் நடைபெற்ற இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.
கூட்டத்திற்கு தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன் ஆகியோர் தலைமை தாங்கி பேசினர். அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலை வகித்தார். இளைஞரணி நிர்வாகிகள் வரவேற்று பேசினர். கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
சேலத்தில் டிசம்பர் 17-ந்தேதி நடைபெறும் தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாட்டிற்கு அழைப்பதற்காக வந்துள்ளேன். தி.மு.க. தொண்டனாக நெல்லை மாவட்டத்திற்கு பலமுறை வந்துள்ளேன். ஆனால் அமைச்சர் ஆன பின்னர் தற்போது முதன் முறையாக வருகிறேன். இது எனது வாழ்நாளில் மறக்க முடியாது.
கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 15, 16-ந்தேதிகளில் நெல்லையில் இளைஞரணி முதல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை நடத்த கலைஞர், மு.க.ஸ்டாலினுக்கு வாய்ப்பு வழங்கினார். தற்போது 2-வது மாநாட்டை நடத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எனக்கு வாய்ப்பு வழங்கி உள்ளார்.
எனவே அனைவரும் ஒன்றிணைந்து நெல்லையை சேலத்திற்கு அழைத்து வரவேண்டும். நெல்லையில் நடந்த முதல் மாநாடு தான் சேலம் மாநாட்டிற்கு வழிகாட்டியாக உள்ளது.
கலைஞரின் பொது வாழ்வில் நெல்லை மாவட்டம் தவிர்க்க முடியாதது. 1965-ம் ஆண்டு இந்திய பாதுகாப்பு சட்டத்தில் கலைஞர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் தனிமை சிறையில் 62 நாட்கள் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து அண்ணா பேசியபோது எனது யாத்திரைக்கான புனித பூமி பாளையங்கோட்டை என குறிப்பிட்டு பேசினார்.
உங்களுக்கு செயல் வீரர்கள் என எதற்காக பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றால் தலைவன் சொல்வதை களத்தில் இறங்கி தன்னலம் கருதாமல் மக்களுக்காக செய்து முடிப்பவன் தான் செயல்வீரன். அந்த வகையில் நெல்லையின் 2 மாவட்ட செயலாளர்களும், பொறுப்பு அமைச்சரும் செயல்வீரர்கள் தான்.
மதுரையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கட்சி சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. மாநாடு எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு அது ஒரு உதாரணம். அந்த மாநாடு எதற்காக நடத்தப்பட்டது. அதில் என்ன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறித்து மாநாட்டை நடத்தியவர்களுக்கும் தெரியாது, மக்களுக்கும் தெரியாது.

கூட்டத்தில் பங்கேற்க வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கை கொடுத்து வரவேற்ற இளைஞரணியினர்.
கவர்னர் சமீபத்தில் பேசியபோது, ஆரியம், திராவிடம் இல்லை என கூறியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, இதுகுறித்து கருத்து சொல்ல நிறைய படித்திருக்க வேண்டும். என்னிடம் எதுவும் கேட்காதீர்கள் என கூறி விட்டு சென்று விட்டார்.
திராவிடத்தை தாங்கி கட்சி பெயர் வைத்துள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் திராவிடம் குறித்து ஆளுனரின் கருத்திற்கு பதில் சொல்ல மறுக்கிறார். நீட்டுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.
நீட்டிற்காக களத்தில் இறங்கி உழைக்கும் கட்சி தி.மு.க. நீட்டிற்கு எதிராக அனைவரும் போராடி அதனை ஒழிக்க வேண்டும். நீட் தேர்வால் அரியலூர் மாணவி அனிதா உள்பட 22 பேர் உயிரை மாய்த்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த வரை நீட் கொண்டு வரப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் தான் மத்திய அரசு நீட்டை நுழைத்தது.
நீட்டிற்கு எதிராக பல சட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை மக்கள் போராட்டமாக மாற்றும் வகையில் தற்போது கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.
பிரதமர் மோடி இந்தியாவில் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் முதலமைச்சர் பற்றியும், என்னை பற்றியும் விமர்சனம் செய்கிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கலைஞர் குடும்பம் மட்டும் தான் வளரும் என பேசி வருகிறார்.
அவர் சொல்வது உண்மை தான். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கலைஞரின் குடும்பம் தான்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதையும், சொல்லாததையும் திட்டங்கள் வாயிலாக செயல்படுத்தி வருகிறார்.
பெண்களுக்கு இலவச பயண திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் மிச்சமாகிறது. இதனால் அவர்களுக்கு ஆண்டுதோறும் 12 ஆயிரம் ரூபாய் மிச்சமாகிறது.
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 31 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 17 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் தகுதி உள்ள 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் பயனடைந்துள்ளனர்.
ஆனால் பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும் முன்பு தேர்தல் வாக்குறுதியில் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என கூறினார். ஆனால் இதுவரை 15 காசுகள் கூட போடவில்லை.
பா.ஜனதா ஆட்சியில் அதானி குடும்பம் மட்டுமே அபரிமிதமான வளர்ச்சி அடைந்து வருகிறது. உலக பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அதானி ஏர்போர்ட், ரெயில்வே, துறைமுகம் என வளர்ந்து கொண்டே உள்ளது. ரமணா திரைப்பட பாணியில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளித்ததாக மத்திய அரசு கணக்கு காட்டியுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கேள்வி எழுப்பி கொண்டே இருக்கிறார். ஆனால் மத்திய அரசு இதற்கு செவி சாய்க்காமல் நான் பேசிய வார்த்தைகளை திருப்பி கூறி பொய் பரப்பி வருகிறார்கள்.
இது தொடர்பாக கோர்ட்டில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளது. நான் கலைஞரின் பேரன். யாரிடமும், எதற்காகவும் மன்னிப்பு கேட்க மாட்டேன். இளைஞரணி நிர்வாகிகளான நீங்கள் கடுமையாக உழைத்தால் உயர்வடைவது நிச்சயம்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் வென்றெடுப்போம். இதற்காக சேலம் மாநாட்டிற்கு திரண்டு வாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கவர்னர் மாளிகை முன்பு தாக்குதல் என்பது அரசியல் அமைப்பின் மீது நடத்திய தாக்குதல்.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருந்தாலும் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மாட்டோம்.
நெல்லை:
நெல்லை வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை இன்று சந்தித்தபோது கூறியதாவது:-
தமிழக கவர்னர் இல்லம் முன்பாக பெட்ரோல் குண்டு வீசிய வினோத் என்பவரை தி.மு.க. வழக்கறிஞர்கள் 2 பேர் தான் ஜாமின் எடுத்துள்ளனர். ஜாமின் எடுத்த இசக்கி பாண்டியன் மற்றும் நிசிந்த் 2 பேரும் தி.மு.க.வில் பொறுப்பில் உள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளது.
தமிழக ஆளுநருக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. அப்படி இருக்கும்போது சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறி ஆகி உள்ளது. ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசுவதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. பெட்ரோல் குண்டு வீசியவனுக்கு பின்னணியில் யார்? இருக்கிறார்கள். அந்த குற்றவாளியின் பின்புலம் என்ன என்பதை சி.பி.ஐ. விசாரித்தால்தான் முழுமையாக உண்மை நிலவரம் தெரியவரும்.
கோவையில் பாலஸ்தீன கொடியை ஏற்றுகிறார்கள். தமிழக காவல்துறை இதையெல்லாம் வேடிக்கை பார்க்காமல் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும். கவர்னர் மாளிகை முன்பு தாக்குதல் என்பது அரசியல் அமைப்பின் மீது நடத்திய தாக்குதல். தி.மு.க.வினருக்கு அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை கிடையாது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருந்தாலும் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மாட்டோம். கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் இதுவரை எந்த மாநில அரசுகள் மீதும் கை வைத்ததில்லை. 356 பிரிவை பயன்படுத்தும் எண்ணம் இந்த அரசுக்கு கிடையாது. தமிழகத்தில் இன்று அரசியல் அமைப்பு சட்டம் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தமிழக கவர்னர் மாளிகை வெளியே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதற்கு காவல்துறையை பொறுப்பில் வைத்துள்ள தமிழக முதலமைச்சர் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த மாதம் 24-ந் தேதி நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- வந்தே பாரத் ரெயிலில் கட்டணம் அதிகம் என்றாலும் முன்பதிவு டிக்கெட்டுகள் பெரும்பாலும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
நெல்லை:
டெல்லி-வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கிய வந்தே பாரத் ரெயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு காரணமாக நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே விரிவுபடுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் சென்னை-மைசூரு, சென்னை-கோவை ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் இயக்கப்பட்ட நிலையில், தென் மாவட்டங்களில் நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் இயக்க கோரிக்கை எழுந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 24-ந் தேதி நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மற்ற ரெயில்களை விட கட்டணம் அதிகம் என்றாலும் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்றுள்ள இந்த ரெயிலில் வார விடுமுறை நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
நெல்லை-சென்னை, சென்னை-நெல்லை என இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் ஆகிய நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்கிறது. டிக்கெட் கட்டணத்தை பொறுத்தவரை நெல்லையில் இருந்து சென்னைக்கு ஏ.சி. வகுப்பில் ரூ.1,665 என்றும், எக்சிக்கியூட் ஷேர் வகுப்பில் ரூ.3,055 என்றும் வசூலிக்கப்படுகிறது.
நெல்லை மக்கள் மட்டுமின்றி தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பயணிகளும் அதிக அளவில் பயணித்து வருகின்றனர்.
அதிலும் காலை நேர பயணம், ரெயில்களில் வழங்கப்படும் உணவு போன்றவற்றால் பெரும்பாலும் குடும்பத்துடன் செல்லவே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள தகவலில், நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயிலில் பயணிகள் குடும்பத்துடன் செல்ல 77 சதவீதம் பேர் ஆர்வம் காட்டி உள்ளனர். அதாவது 100 பயணிகள் இந்த ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்தால் அதில் 77 பேர் குடும்பத்துடன் செல்கிறார்கள்.
மேலும் 36 சதவீதம் பேர் 35 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரெயிலில் கட்டணம் அதிகம் என்றாலும் முன்பதிவு டிக்கெட்டுகள் பெரும்பாலும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி, பொங்கல் பண்டிகையையொட்டி முன்பதிவு டிக்கெட்டுகள் முழுவதும் விற்று தீர்ந்துவிட்டன. நேற்றைய நிலவரப்படி காத்திருப்போர் பட்டியல் 100-ஐ தாண்டி உள்ளது.
எனவே வந்தே பாரத் ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, மற்ற எக்ஸ்பிரஸ் ரெயிலை விட பயண நேரம் குறைவாக உள்ளது. இதனால் பயணிகள் இடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
தீபாவளி, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகை வர உள்ள நிலையில், பலரும் வெளியூர் செல்வார்கள். இதனால் தென் மாவட்ட மக்கள் வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எனவே கூடுதல் பெட்டிகளுடன் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
- சோதனையில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- நெல்லை மாவட்டத்தில் அனைத்து மீன் கடைகளிலும் சோதனைகள் நடத்தப்படும்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி பாளை மற்றும் மேலப்பா ளையம் மண்டலங்களில் மீன் விற்பனை செய்யும் கடைகளில், உணவு பாது காப்பு துறையும், மீன்வளத் துறையும் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சசி தீபா, மீன்வளத் துறை உதவி இயக்குனர் புஷ்ரா சப்னம் ஆகியோர் ஆலோசனையின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவ லர்கள் சங்கரலிங்கம், ராம சுப்பிரமணியன், மீன்வளத் துறை ஆய்வாளர் சுமதி, மேற்பார்வையாளர் பாலு குமார் ஆகியோர் விற்பனை செய்யப்படும் மீன்களில் பார்மலின் பதன பொருள் சேர்க்கப்பட்டுள்ளதா என்றும், தரமான மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது, ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள, 46 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை பொதுமக்கள் முன்னிலையில் கிருமி நாசினி தெளித்து அழிக்கப் பட்டது.
இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாநகரின் ஒவ்வொரு பகுதி யிலும் இத்தகைய சோதனை கள் நடத்தப்படும் என்றும், நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து மீன் கடை களிலும் இத்தகைய சோதனைகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கபட்டது.
- நெல்லை வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரவில் தாழையூத்து விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
- பாளை, நாங்குநேரி தொகுதிகளுக்கு உட்பட்ட 2 இடங்களில் கலைஞர் நூலகங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
நெல்லை:
தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று அரசு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
மேலும் மாவட்டங்களில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்கனவே சுற்றுப்பயணம் முடித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) நெல்லையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இதற்காக இன்று மாலை அவர் நெல்லை வருகிறார். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக நெல்லை வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான தாழையூத்து பண்டாரகுளம் அருகில் மாவட்ட பொறுப்பு அமைச்சகம், நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு, கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அங்கிருந்து நெல்லை வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரவில் தாழையூத்து விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு பாளை கே.டி.சி. நகர் அருகே நடைபெறும் நெல்லை கிழக்கு, மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
அப்போது பாராளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து இளைஞர்களுக்கு அவர் ஆலோசனைகளை வழங்க உள்ளார்.
இதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு கே.டி.சி. நகர் மாதா மாளிகையில் நெல்லை கிழக்கு, மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெறும் விழாவில் தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகளை வழங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்.
பின்னர் மாநகராட்சி எதிரே உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். அப்போது மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவி மற்றும் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
தொடர்ந்து மாலை 5 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துகிறார். அப்போது நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்த உள்ளார்.
இதற்கிடையே பாளை, நாங்குநேரி தொகுதிகளுக்கு உட்பட்ட 2 இடங்களில் கலைஞர் நூலகங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
- ஈரடுக்கு மேம்பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
- அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஈரடுக்கு மேம்பாலத்தில் இடதுபுற தடுப்புச் சுவரில் மோதி நின்றது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு மற்றும் டவுன் பகுதியை இணைக்கும் முக்கிய பாலமான நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
இந்த மேம்பாலத்தில் அவ்வப்போது வாகன விபத்துக்கள் ஏற்பட்டு போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் சூழல் வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அந்த வழியாக டவுனில் இருந்து சந்திப்பு பகுதியை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஈரடுக்கு மேம்பாலத்தில் இடதுபுற தடுப்புச் சுவரில் மோதி நின்றது.
இந்த விபத்தில் பக்க வாட்டு சுவரில் பொருத்தி இருந்த மின்கம்பம் இடது புறமாக உள்ள கட்டி டத்தின் மீது முறிந்து விழுந்தது. மேலும் அந்த பகுதியில் நடப்பட்டிருந்த கொடி கம்பங்களும் முறிந்து விழுந்தன.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து நெல்லை மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இன்று அதிகாலை சம்பவ இடத்திற்கு சென்று விபத்து குறித்து ஆய்வு நடத்தினர். மோதிவிட்டு நிற்காமல் சென்றது கனரக லாரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தின் போது மின் கம்பம் கட்டிடத்தின் மீது விழுந்துவிட்டது. அதிர்ஷ்ட வசமாக சாலையில் முறிந்து விழாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
+2
- மின்னொளியில் 11 சப்பரங்கள் நள்ளிரவு 8 ரத வீதிகளிலும் வலம் வந்தன.
- விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று அதிகாலையில் நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெறும் தசரா திருவிழா குலசேகரன்பட்டினம் தசராவுக்கு அடுத்து தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்றது. இங்கு 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் மிக விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு தசரா விழா கடந்த 14-ந்தேதி பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடா்ந்து பாளையில் அமைந்துள்ள தூத்துவாரி அம்மன், வடக்கு, தெற்கு முத்தாரம்மன், பேராத்து செல்வி அம்மன் உள்ளிட்ட 11 கோவில்களிலும் திரு விழா தொடங்கியது.
10 நாட்கள் நடைபெற்ற நவராத்திாி தசரா திருவிழாவில் தினமும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் கொலு வீற்றிருக்கும் வைபவம் நடைபெற்றது. 10-ம் திருநாளான விஜயதசமியையொட்டி இரவு அம்மன் கோவில்களில் இருந்து சிம்ம வாகனத்தில் போா்க்கோலம் புரிந்து வண்ண மின்னொளியில் 11 சப்பரங்கள் நள்ளிரவு 8 ரத வீதிகளிலும் வலம் வந்தன. இதன் காரணமாக பாளை பகுதி முழுவதும் விழா கோலமாக இருந்தது.
தொடர்ந்து 11 சப்பரங்க ளும் வீதி உலா வந்த பின்னர் எருமைக்கிடா மைதானத்தில் நள்ளிரவில் அணிவகுத்து நின்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று அதிகாலையில் நடைபெற்றது. தொடர்ந்து ஆயிரத்தம்மன் மகிஷா சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரி சனம் செய்தனர். முன்னதாக நேற்று இரவு முதல் பாளை சமாதானபுரம் பகுதியில் இருந்து வாகனங்கள் ஒருவழிப் பாதையில் செல்ல அனுமதிக்கப்படாமல் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.
- போட்டியில் மாவட்டம் முழுவதுமிருந்து 16 அணிகள் கலந்து கொண்டன.
- போட்டிகளை துணை போலீஸ் கமிஷனர் (கிழக்கு)ஆதர்ஸ் பச்சிரா தொடங்கி வைத்தார்.
நெல்லை:
பாளை அண்ணா விளையாட்டரங்கில் இன்று முதல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) வரை கருவேலம் கோப்பைக்கான நெல்லை மாவட்ட அளவிலான ஆக்கி போட்டிகள் நடைபெறுகிறது. இதில் மாவட்டம் முழுவதுமிருந்து 16 அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டியின் தொடக்கவிழா இன்று காலை தொடங்கியது.
இதனை மாநகர துணை போலீஸ் கமிஷனர் (கிழக்கு)ஆதர்ஸ் பச்சிரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வீரர்-வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்று போட்டிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ணன் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை ஆக்கி யூனிட் ஆப் நெல்லை தலைவர் சேவியர் ஜோதி சற்குணம் தலைமையில் செய்து வருகின்றனர்.
- வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
- அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சுப்போட்டிகள் காந்தி பிறந்த நாளையொட்டி
வருகிற 31-ந்தேதியும், நேரு பிறந்த நாளையொட்டி அடுத்த மாதம் 3-ந்தேதியும் காலை 9.30 மணிக்கு நெல்லை அரசு மேல்நிலைப் பள்ளியில் (டவுன்) நடக்கிறது.
காந்தி பிறந்த நாள் பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள் பள்ளி மாணவர்களுக்கு காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள்,வட்ட மேசை மாநாட்டில் காந்தியடிகள் என்ற தலைப்பிலும், கல்லூரிகளுக்கு காந்தியடி கள் நடத்திய தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம், சத்திய சோதனை, மதுரையில் காந்தி ஆகிய தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெறு கிறது.
நேரு பிறந்த நாள் பேச்சுப் போட்டிக்கு பள்ளிகளுக்கு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், ஆசிய ஜோதி, மனிதருள் மாணிக்கம், கல்லூரிகளுக்கு சுதந்திர போராட்டத்தில் நேரு, பஞ்சசீலக் கொள்கை, நேரு வின் வெளியுறவுக் கொள்கை ஆகிய தலைப்பு களில் போட்டி நடைபெறும்.
நெல்லை மாவட்ட அளவில் நடக்கும் கல்லூரி பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் மற்றும் பாராட்டு சான்றித ழும் வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்கள் அந்தந்த கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளித்தல் வேண்டும். ஒரு கல்லூரியில் இருந்து 2 மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
நெல்லை மாவட்ட அளவில் நடக்கும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.
மேலும் இப்போட்டிகளில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ரூ.2 ஆயிரம் வீதம் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளிக்க வேண்டும். ஒரு பள்ளியில் இருந்து ஒரு மாணவர் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 2-ம் தளத்தில் செயல்பட்டு வரும் மண்டல தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவல கத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (தொலைபேசி எண்: 0462 2502521) தொடர்பு கொள்ளலாம்.
நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இந்த பேச்சுப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- சேசையாபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அபினேஷ், போலீசார் ரோந்து சென்றனர்.
- கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
களக்காடு:
ஏர்வாடி சப்-இன்ஸ்பெக்டர் அபினேஷ் மற்றும் போலீசார் சேசையா புரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஏர்வாடி உப்பு நடுத்தெருவை சேர்ந்த சதாம் உசேன் (வயது 22), 6-ம் தெருவை சேர்ந்த முகம்மது அலி உசேன் (21) ஆகியோர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.






