என் மலர்
திருச்சிராப்பள்ளி
- கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு
- அப்போது மனைவியை பார்த்து ஆத்திரமடைந்து தாக்கியதாக கூறப்படுகிறது
திருச்சி
புதுக்கோட்டை விராலிமலை குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 42). இவரது மனைவி சுசீலா (34). இந்த தம்பதியருக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 7 ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து மகன்களுடன் சுசீலா அன்பு நகர் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். மேலும் விவாகரத்து கேட்டு திருச்சி குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக கணவன் மனைவி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தனர். அப்போது மனைவியை பார்த்து ஆத்திரமடைந்த சரவணன் அவரை கெட்ட வார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் முசிறி அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
- பேருந்து சாலப்பட்டி கிராமத்திற்குள் சென்று வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
முசிறி:
முசிறி அருகே வெள்ளூர் அடுத்த சாலப்பட்டி கிராமம் வழியாக முசிறியில் இருந்து மாங்கரைப்பேட்டை, வெள்ளூர், வேப்பந்துறை, மணப்பாறையில், தெற்கு சித்தாம்பூர் ஆகிய கிராமங்களுக்கு காலை மற்றும் மாலை இருவேளை அரசு பேருந்து சென்று வருகிறது.
இவ்வாறு செல்லும் அரசு பேருந்து சாலப்பட்டி கிராமத்திற்குள் வந்து செல்ல வேண்டும். இதனால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பயனடைவர் என்று கூறி, அப்பகுதி மக்கள் முசிறி கோட்டாட்சியர் மற்றும் அரசு போக்குவரத்து கிளை மேலாளர் ஆகியோரிடம் மனு அறிவித்துள்ளனர். ஆனால் அந்த மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த கிராமத்தின் வழியாக சென்ற பேருந்தினை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் முசிறி அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது பேருந்து சாலப்பட்டி கிராமத்திற்குள் சென்று வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
- நுண்ணறிவு பிரிவிற்கு ரகசிய தகவல் சென்றது
- ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள அடிவார பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்வதாக திருச்சி ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவிற்கு ரகசிய தகவல் சென்றது. இதனை அடுத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் அடிவாரப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் கீரம்பூர் கிராமத்தை ராஜ்குமார் (37) என்பதும், அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து ராஜ்குமாரை கைது செய்த துறையூர் போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 25 லாட்டரி சீட்டுகள், லாட்டரி விற்ற பணம் ரூ. 550 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- முருகன் கோவிலுக்கு புதிய வெள்ளி தேர்
- திருப்பணி குழு கூட்டத்தில் முடிவு
ராம்ஜிநகர்
திருச்சி அருகே உள்ள பிரசித்தி பெற்ற குமார வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்காக தற்போது கோவில் கோபுரம், உள் பிரகாரம் கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபங்கள் தெப்பக்குளம் ஆகிய இடங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது சம்பந்தமான திருப்பணி குழு ஆலோசனை கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கோவிலுக்கு புதிதாக வெள்ளித் தேர் செய்வது, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக துலாபாரம் அமைப்பது , புதிய கொடிமரம் அமைப்பது, மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது போன்ற பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் இணை ஆணையர் ஹரிஹரன், செயற்பொறியாளர் தியாகராஜன், உதவி செயற்பொறியாளர் அழகுமணி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ், அறங்காவலர் குழு உறுப்பினர் கொத்தட்டை ஆறுமுகம், நாச்சி குறிச்சி ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், கோவில் நிர்வாக அதிகாரி அருண் பாண்டியன் மற்றும் உபயதாரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாரியம்மன் கோவிலில் நவராத்திரி
- ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது
முசிறி
முசிறி கள்ளர் தெரு மகா மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. 6-ம் நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் பால், தயிர், பன்னீர், மஞ்சள், வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டன . மயிலாடுதுறை நாத பிரம்மம் கௌரி ஆறுமுகத்தின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி கணேசன், வக்கீல் செந்தில் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- நகை முதலீட்டு திட்டம் மூலம் ரூ.100 கோடி மோசடி
- கணவன்-மனைவியை கைது செய்ய தனிப்படை விரைந்தது
திருச்சி
திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், நாகர்கோவில் உள்பட 9 இடங்களில் பிரணவ் ஜூவல்லரி நகைக்கடை இயங்கி வந்தது. இதனை திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகிய இருவரும் இயக்குனர்களாக இருந்து நிர்வகித்து வந்தனர்.
இந்த நகை கடை நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் நகைகளுக்கு செய்கூலி இல்லை சேதாரம் இல்லை என அறிவித்தது. அதுமட்டுமில்லாமல் நடிகர் நடிகைகள் மூலமாக முதலீடு செய்யும் நகைக்கு மாதந்தோறும் 2 சதவீத வட்டித்தொகை, பத்து மாத கடைசியில் முதலீடு தொகைக்கும் அதிகமாக தங்க நகைகள் தருவதாகவும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர்.
இதனை நம்பி பலர் லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்தனர். இந்த நிலையில் கடந்த 2 மாதமாக வட்டித் தொகைக்காக வழங்கப்பட்ட காசோலைகள் பணமில்லாமல் திரும்பிய நிலையில் 9 கிளை நகைக் கடைகளையும் மூடிவிட்டு அதன் உரிமையாளர்கள் தலை மறைவாகிவிட்டனர்.
அதைத் தொடர்ந்து முதலீடு செய்து ஏமாந்த 635 பேர் திருச்சி, மதுரை, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அளித்த, புகார்களின் அடிப்படையில், பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. சத்யபிரியா நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில் திருச்சி மெயின் கிளை நகைக்கடை மேலாளர் நாராயணன் என்பவரை கைது செய்தனர். மேலும், திருச்சி சென்னை உள்பட 8 கடைகள் 3 வீடுகள் உள்பட மொத்தம் 11 இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில்
237 பவுன் தங்க நகைகள்,
22 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.1,48,711 ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நகைக்கடை உரிமையாளர் மதன் அவரது மனைவி கார்த்திகா, மேலாளர் நாராயணன் ஆகிய 3 பேர் மீது மோசடி, ஏமாற்றுதல், கூட்டு சதி செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சுமார் ரூ. 14 கோடி மோசடி செய்திருப்பதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கைதான மேலாளர் நாராயணன் மதுரையில் உள்ள முதலீட்டாளர் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தலைமறைவாக இருக்கும் பிரணவ் ஜூவல்லர்ஸ் இயக்குனர்கள் மதன் அவரது மனைவி கார்த்திகா ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் முகாமிட்டு அவர்களைத் தேடி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு பணம் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியபோது நன்கு அறிமுகமான வாடிக்கையாளர்களிடம் மதன் செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு புகார் எதுவும் கொடுக்க வேண்டாம். பணத்தை திருப்பித் தருவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என கூறிவந்துள்ளார்.
ஆனால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து காவல்துறை கவனத்திற்கு செல்லவும் தனது செல்போன்கள் அனைத்தையும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானார். பல கோடி மோசடி செய்துள்ள மதனின் கடைகளில் குறைந்த அளவிலேயே தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் கிளையில் மட்டுமே அதிகபட்சமாக 90 பவுன் நகை கைப்பற்றப்பட்டுள்ளது.
மோசடி பணத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, கும்பகோணம், நாகர்கோவில் உள்பட தனது நகைக்கடை நிறுவனம் அமைந்துள்ள அனைத்து பகுதிகளிலும் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக தெரிகிறது. ஆகவே அந்த சொத்துக்களை பறிமுதல் செய்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் அபூர்வ தரிசனம்
- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று தாயார் திருவடி சேவை
ஸ்ரீரங்கம்,
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கடந்த 15-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி ஸ்ரீரங்கம் கோவில் தாயார் சன்னதியில் தினமும் மாலை தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
பெருமாள் கோவில்களில் பெருமாள் மற்றும் தாயாரின் திருவடிகளை தரிசனம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.
ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கநாச்சியார் படி தாண்டா பத்தினி என்ற சிறப்பு கொண்டவர். சாதாரண நாட்களில் இவரது பாதங்கள் தெரியாத வகையிலேயே அலங்காரம் செய்யப்படும். ஆனால் நவராத்திரி உற்சவத்தின் 7-ம் திருநாள் மட்டும் தாயாரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்படும். இதனால் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.
இந்த ஆண்டுக்கான ரெங்கநாச்சியார் திருவடி சேவை தாயார் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இதையொட்டி ரெங்கநாச்சியார் மாலை 4 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைவார். கொலு இரவு 7.30 மணிக்கு ஆரம்பித்து இரவு 9.30 மணிக்கு முடிவடைகிறது.
அங்கிருந்து இரவு 10.30 மணிக்கு ரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தாயாரின் திருவடிகளை பக்தர்கள் தரிசிக்க முடியும் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து தாயார் திருவடியை தரிசனம் செய்வர். இதற்காக இன்று மதியம் முதலே கோவிலில் பக்தர்கள் குவியத்தொடங்கினர்.
பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
- ரெங்கராஜ் மனைவி பிரபாவதி என்பவர் இழப்பீடு கேட்டு துறையூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
- போலியாக பாலிசி ஆவணத்தை தயார் செய்து கொடுத்த கனகராஜ் என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வெங்கடேசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 60). இவர் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்களை வாங்குவதற்காக, தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சொந்த கிராமத்தில் இருந்து துறையூர் நோக்கி சென்றார்.
தெற்கு ரத வீதி அருகே சென்ற போது, அதே தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் ஓட்டி வந்த 3 சக்கர வாகனம் ரெங்கராஜின் மீது மோதியதில் அவர் பலத்த காயம் அடைந்தார். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரெங்கராஜ் சிகிச்சைக்கு பின்னர், ஒரு சில தினங்களில் இறந்துவிட்டார்.
இது தொடர்பாக இறந்த ரெங்கராஜ் மனைவி பிரபாவதி என்பவர் இழப்பீடு கேட்டு துறையூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் விசாரணை மேற்கொண்டது. விசாரணையில் விபத்து ஏற்படுத்திய 3 சக்கர வாகனத்தின் பாலிசி நம்பரை ஆய்வு செய்ததில் அது இருசக்கர வாகனத்திற்குரிய பாலிசி நம்பர் எனவும், அதுவும் போலியாக தயாரித்து வழங்கப்பட்டது எனவும் தெரியவந்தது.
மேலும் போலியாக பாலிசி ஆவணத்தை தயாரித்து கொடுத்தவர் திருச்சி பீம நகரை சேர்ந்த கனகராஜ் (54) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புலன்விசாரணை அலுவலர் அருண்குமார் (47) என்பவர் திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் துறையூர் போலீசார் போலியாக பாலிசி ஆவணத்தை தயார் செய்து கொடுத்த கனகராஜ் என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான கனகராஜை துறையூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். துறையூர் அருகே போலியாக பாலிசி பத்திரம் தயார் செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- பொருளாதார கல்வி நிலையை அறியவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
- யாருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்பது பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் முடிவு.
திருச்சி:
திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டம் அதன் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் சமூக நீதியை நிலைநாட்டவும், மக்களின் சமூக, பொருளாதார கல்வி நிலையை அறியவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மத்திய பா.ஜ.க. அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கண்டித்து வருகிற 25-ந் தேதி முதல் நவம்பர் 3-ந் தேதி வரை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மேற்கொள்ளும் பரப்புரையை வெற்றிகரமாக நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைதொடர்ந்து கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது வழக்கமான நடைமுறைகளில் ஒன்று. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக பாடுபட்ட தொழிலாளர் தலைவர் சங்கரய்யாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி அதற்கு ஒப்புதல் தராமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. கவர்னருக்கு இல்லாத அதிகாரத்தையெல்லாம் அவர் செய்து கொண்டு இருக்கிறார். யாருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்பது பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் முடிவு. அதில் கவர்னர் தலையிட முடியாது.
தற்போது கவர்னர் அவருக்கான பணியை செய்யாமல் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் நிச்சயமாக கவர்னர் என்ற பதவி இருக்க வேண்டுமா? என்ற கேள்வி மறுபரிசீலனைக்கு உள்ளாகும். உடல் உறுப்பு தானம் கொடுத்தவர்களுக்குகூட அரசு மரியாதை வழங்குகிற மகத்தான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ஆகவே பங்காரு அடிகளாரின் மனிதநேயத்தை போற்றுவது அரசின் கடமை. ஆகவே அவருக்கு அரசு மரியாதை வழங்குவதில் தவறில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி:
திருச்சி ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சசிகுமார் (வயது 28). இவரும் திருவெறும்பூர் நெடுஞ்சாலை வாகனத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த சங்கர் ராஜபாண்டியன் (32), நவல்பட்டு போலீஸ் நிலைய போலீஸ்காரர் பிரசாத் (26). ஜீயபுரம் போக்குவரத்து போலீஸ்காரர் சித்தார்த்தன் ஆகிய 4 பேரும் கடந்த 4-ம் தேதி முக்கொம்பு சுற்றுலா தலத்திற்கு சாதாரண உடையில் சென்று மது அருந்திவிட்டு, காதலனுடன் முக்கொம்பு பூங்காவுக்கு வந்த துவாக்குடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டினர்.
இந்த விவகாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் 4 பேரையும் காவலில் எடுத்து இரண்டு நாள் விசாரணை மீண்டும் நேற்று ஜெயிலில் அடைத்துள்ளனர்.
இதற்கிடையே இந்த விவகாரத்தை முறையாக விசாரிக்காத ஜீயபுரம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பாலாஜி, பெரம்பலூர் மாவட்டம் மங்கலமேடு இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோன்று திருச்சி சமயபுரம் பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் விபசாரத்தை தடுக்க தவறிய அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கருணாகரன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் பல்வேறு காரணங்களுக்காக திருச்சி மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ஆகவும், மங்கள மேடு இன்ஸ்பெக்டர் நடராஜன், ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் ஆகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், அரியலூர் இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவினை திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.
- கடந்த சில தினங்களாக கிராம் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டு வந்த தங்கம் தற்போது கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
- விமானத்தில் வந்த பணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
கே.கே. நகர்:
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
அந்த வகையில் கடந்த சில தினங்களாக கிராம் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டு வந்த தங்கம் தற்போது கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் திருச்சி வந்தது.
இந்த விமானத்தில் வந்த பணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பயணம் செய்த பெண் பயணி ஒருவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தபோது அவர் தனது உள்ளாடையின் பின்பகுதியில் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது .
விசாரணையில் அந்த பெண் பயணி பாண்டிச்சேரியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரிடம் இருந்து 909.5 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 55.07 லட்சம் ஆகும்.
முசிறி,
முசிறி தொடக்க வேளா ண்மை கூட்டுறவு வங்கியில் அரசு பெண்கள் மேல்நி லைப் பள்ளி பனிரெண்டாம் வகுப்பு பயிலும் தொழில் கல்வி பிரிவு மாணவிகளுக்கு முசிறி தொடக்க வேளா ண்மை கூட்டுறவு வங்கியில் உள்ளுறை பயிற்சி அளிக்க ப்பட்டு அதன் நிறைவு விழா நடைபெற்றது.
பள்ளி உதவி தலைமை ஆசிரியை வாணிஸ்ரீ தலைமை தாங்கினார் .தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் சபாபதி சிறப்புரையாற்றி னார். பள்ளி முதுகலை ஆசிரியர்கள் வெண்ணிலா, குமாரத்தி, ராஜேஸ்வரி, ராஜலட்சுமி, தீபா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக மாணவி ஸ்ரீ ஜோதி கிரண் அனைவரை யும் வரவேற்றார்.
பயிற்சியில் சங்கம் தோற் றம், வங்கியில் பயன்படுத்த ப்படும் ஆவணங்கள், கண க்கீடுகள் சான்று சீட்டுகள், கடன் வழங்கும் வழிமுறை கள், நகை கடன், பயிர் கடன் பற்றி தெளிவுரைகள், கடன் திரும்ப செலுத்தப்படுவதற்கு காலம், வட்டி கணக்கிடும் முறைகள், கணக்குகள் எவ்வாறு தணிக்கை செய்ய ப்படுகின்றன.
கணினி மூலமாக கணக்கு ப்பதிவு செய்யும் முறை போன்ற அனைத்து விவர ங்கள் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயி ற்சியில் மாணவிகள் பயி ற்சி நிறைவு விழாவில் வங்கி செயலாட்சியர்கள் ஜெயந்தி, அனுசுயா ஆகியோர் மாண விகளுக்கு பாராட்டு சான்றி தழ் வழங்கினர்.
நிகழ்ச்சி நிறைவில் மாணவி ஜெரினா பேகம் அனைவருக்கும் நன்றி கூறினார்.






