என் மலர்
திருச்சிராப்பள்ளி
- கொள்ளையர்களைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- ஆட்டுப்பண்ணை அதிபர் வீட்டில் பட்டப் பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி:
திருச்சி முசிறி சொக்கம்பட்டி துறையூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 49). விவசாயியான இவர் ஆட்டுப்பண்ணை வைத்துள்ளார்.
இவரது பண்ணையில் 200 ஆடுகள் உள்ளன. வழக்கமாக கணவன் மனைவி இருவரும் காலை சமையல் பணிகளை முடித்துவிட்டு ஆடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள வேளாண் தோட்டங்களுக்கு கொண்டு செல்வார்கள்.
நேற்று மதியம் 12 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு வடிவேல் தனது மனைவியுடன் ஆடுகளை மேய்ச்சலுக்கு அங்குள்ள வேளாண் தோட்டத்துக்கு சென்றார். பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் வடிவேல் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த 22 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். கொள்ளையடிக்கபட்ட நகையின் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும்.
இதுகுறித்து உடனடியாக வடிவேல் தா.பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடம் விரைந்து சென்று விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இதில் 4 பேரின் ரேகைகள் பதிவாகியுள்ளது. மோப்பநாய் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. கொள்ளையர்களைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஆட்டுப்பண்ணை அதிபர் வீட்டில் பட்டப் பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஒரு வாரத்துக்கு மேலாகியும் தப்பி ஓடிய சிறுவர்கள் குறித்து துப்பு கிடைக்கவில்லை.
- குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் 20 குழந்தைகளை வேறு சில மாவட்டங்களில் செயல்படும் காப்பகங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சி:
திருச்சி சத்திரம் வி.என்.நகர் பகுதியில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு உரிமம் பெற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு குழந்தை திருமணங்களால் பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர் சிறுமிகள், பல்வேறு காரணங்களால் வீடுகளில் இருந்து வெளியேறி காவல் துறையினரால் மீட்கப்படும் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி இரவு காப்பக வார்டனின் கையில் இருந்த சாவியை பறித்துக் கொண்டு 16 வயதுள்ள ஒடிசா மற்றும் ராமநாதபுரம், காஞ்சிபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 4 சிறுவர்கள் தப்பி ஓடினர்.
அதைத்தொடர்ந்து மறுநாள் அந்த காப்பகத்தின் பொறுப்பாளர் ராஜேஷ் கோட்டை போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 4 சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.
ஆனால் ஒரு வாரத்துக்கு மேலாகியும் தப்பி ஓடிய சிறுவர்கள் குறித்து துப்பு கிடைக்கவில்லை.
அதைத்தொடர்ந்து, திருச்சி மாவட்ட கலெக்டர் எம்.பிரதீப் குமார் அந்தக் காப்பக நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி சிறுவர்கள் தப்பி ஓடியது குறித்து விளக்கம் கேட்டார். பின்னர் அந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 20 குழந்தைகளை வேறு காப்பகங்களுக்கு மாற்றுவதற்கு உத்தரவிட்டார். அதன்படி குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் 20 குழந்தைகளை வேறு சில மாவட்டங்களில் செயல்படும் காப்பகங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
மறு உத்தரவு வரும் வரை அந்த சிறுவர்கள் தற்போது மாற்றப்பட்டுள்ள காப்பகங்களில் தங்க வைக்கப்படுவார்கள் என கலெக்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆயிரம் கொடிகள் இருந்தாலும் தி.மு.க. கொடிக்கென்று தனி சிறப்பு உண்டு.
- இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் இருப்பதால் அவர்கள் நமக்கு அந்நியர்கள் போல் இருக்கிறார்கள்.
திருச்சி:
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்சி-கரூர் பைபாஸ்சாலையில் குடமுருட்டி அருகில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. விழாவில் தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு, கல்வெட்டை திறந்து வைத்து, கொடியை ஏற்றி வைத்தார்.
இதனை தொடர்ந்து கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. அணிகளுக்கான கருத்துரை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசியதாவது:-
100 அடி உயர கொடிக்கம்பத்தை முதன்முதலில் இங்கு பார்த்து அசந்து போனேன். ஆயிரம் கொடிகள் இருந்தாலும் தி.மு.க. கொடிக்கென்று தனி சிறப்பு உண்டு. இது கலைஞரின் ரத்தத்தில் உருவான கொடி என பலமுறை பேசி உள்ளேன். 100 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடி பறப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தி.மு.க. முதன்முதலில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்து அறிவிக்கப்பட்ட இடம் திருச்சி தான். திருச்சியை தலைநகராக்க வேண்டும் என எம்.ஜி.ஆர். விரும்பினார். எனக்கு அ.தி.மு.க. பிடிக்காவிட்டாலும், அந்த கருத்து பிடித்து இருந்தது.
இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் இருப்பதால் அவர்கள் நமக்கு அந்நியர்கள் போல் இருக்கிறார்கள். இந்தியாவின் தலைநகரம் ஐதராபாத்தில் தான் இருக்க வேண்டும். அதேபோல் தமிழகத்தின் தலைநகரம் மத்தியில் தான் இருக்க வேண்டும். அதற்கு திருச்சி தான் சரியாக இருக்கும். அப்படியும் ஒரு காலத்தில் நிகழும். தி.மு.க.வுக்கு வந்த சோதனைகள் போல் மற்ற கட்சிகளுக்கு வந்து இருந்தால், இந்நேரம் அந்த கட்சிகள் அழிந்து போய் இருக்கும்.
தி.மு.க. தொண்டர்கள் தான் கட்சியின் காவல் தெய்வங்கள். எமர்ஜென்சியை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய ஒரே கட்சி தி.மு.க.தான். தற்போதைய தி.மு.க. தலைமை வருங்கால தலைமையை உருவாக்குமானால், அந்த தலைவரையும் எனது தோள் மீது வைத்து தாங்குவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகனுக்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது.
- போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்று திருச்சிக்கு திரும்பியவர கைது
- திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் விசாரணை
திருச்சி,
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கரியப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பக்கிரி சாமி (வயது 58).இவர் போலி ஆவணங்கள் மூலம் தனது பெயரை அசோகன் என மாற்றி வெளிநாட்டுக்குச் சென்றார். பின்னர் மலிண்டோ விமானம் மூலம் திருச்சி திரும்பிய போது, அவரது பாஸ்போர்ட்டை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். இதில் முறைகேடு உறுதியானது.அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரை ஏர்போர்ட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்கு பதிவு செய்து பக்கிரி சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- திருச்சி உறையூரில் டைல்ஸ் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
- அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
திருச்சி உறையூர் தெருவை சேர்ந்தவர் மணி ( வயது 56). டைல்ஸ் தொழிலாளி. இவரது மகன் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக தெரிகிறது. இதில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான மணி மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி பரிமளா கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு சம்பவத்தில் திருச்சி வண்ணார்பேட்டையில் தங்கி பாலக்கரை தனியார் நிறுவனத்தில் சேலம் செந்தாரப்பட்டியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் திடீரென மயங்கி விழுந்தார் .உடனே அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சி காட்டூரில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 8.5 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது
- கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் போலீசார் விசாரணை
திருவெறும்பூர்,
திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூர் விக்னேஷ் நகர் 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பாலச்சந்தர் (48) இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பாலச்சந்தரின் மனைவி ஓசூரில் உள்ள புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டி விட்டு
தனது இரு மகன்களுடன் ஓசூர் சென்றுவிட்டார்.பின்னர் அவர் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவில் இருந்த 8.5 சவரன் தங்க நகை மற்றும் 1.5 கிலோ மதிப்புள்ள 2 வெள்ளி பாத்திரங்கள், விலை உயர்ந்த வாட்ச் மற்றும் கம்ப்யூட்டருக்கு பயன்படுத்த கூடிய மோடம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.இது குறித்து பாலச்சந்தரின் மனைவி திருவெறும்பூர் போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்து சென்றனர்.இது குறித்து பாலச்சந்தர் அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- உறவினர்களின் அழுகை சத்தத்தை கேட்டு இறந்ததாக கருதப்பட்ட வாலிபர் கண் திறந்து பார்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது
- மணப்பாறை அருகே அதிர்ச்சி தந்த சம்பவம்
மணப்பாறை,
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணூத்து அருகே உள்ள பொன்னம்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிநாயக்கர். (வயது 23). இவர் கடந்த சில தினங்க ளுக்கு முன் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகின்றது. இதைய டுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப் பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த் துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரை, மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்படி மருத்துவ மனை நிர்வாகம் அறிவுறுத்தி யதாக கூறப்படுகிறது. ஆனால் ஆண்டி நாயக்கர் குடும்பத்தினர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்ற னர். வீட்டின் கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்த அவர், அசைவற்ற நிலையில் இருந்ததால் இறந்து விட்டதாக கருதி, உறவி னர்கள் கதறி அழுதனர். இந்த நிலையில் அனைவரின் அழுகுரல் கேட்ட வாலிபர் கண்ணை திறந்து பார்த்தார். இதனை பார்த்த உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அக்கம் பக்கத்தில் பரவவே அனைவரும் அங்கு திரண்டனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் மற்றும் வருவாய்துறையினரும் அங்கு வந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆண்டி நாயக்கரை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
- டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆக மாறி உள்ளது.
திருச்சி:
பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 34 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 284 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 83 பேர் 12 வயதுக்குட்பட்ட குழந்தை களாவர். இதற்கிடையே நேற்று 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த அடிப்படையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆக மாறி உள்ளது.
காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கார்த்திகை தீபத்தையொட்டி துறையூர் தெப்ப குளத்தில் 3 ஆயிரத்து 340 விளக்குகள் ஏற்றப்பட்டது
- நகர மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் தொடங்கி வைத்தார்
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் அய்யப்ப சேவா சங்கத்தின் சார்பில் கார்த்தி கை தீபத்தையொட்டி பெரிய தெப்ப குளத்தில் கார்த்திகை தெப்பத் திருவி ழா கொண்டா டப்பட்டது.இவ்விழாவிற்கு துறையூர் நகர மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் தலைமை தாங்கி விழாவினை தொட ங்கி வைத்தார். நகர்மன்ற துணைத் தலைவர் மெடி க்கல் முரளி முன்னிலை வகித்தார். மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட சிவன் பார்வதி சிலைகளுக்கு தீப ஆராதனை செய்ய ப்பட்டு, தெப்பக்குளம் முகப்பு பகுதியில் விளக்கே ற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து துறையூர் பகுதி பொது மக்கள், வண்ண விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பக்குளத்தில் உள்ள 3 ஆயிரத்து 340 மாடக்குழிகளிலும் விளக்கே ற்றி கார்த்திகை தீபத்தை கொண்டாடினர்.தெப்பக்குளத்தில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியினை காண சிறுவர், சிறுமியர் உட்பட ஏராளமான பொது மக்கள் கண்டு களித்தனர். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் வீர மணிகண்டன், கார்த்தி கேயன், சுதாகர், இளை யராஜா, ஜானகிராமன், அம்மன் பாபு, முத்து மாங்கனி, நித்தியா,நகர துணை செயலாளர்கள் இளங்கோ, ,பிரபு, கிட்ட ப்பா,நகர இளைஞரணி செல்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- தமிழகத்தின் அரசியல் எதிர் காலத்தை தமிழ்த்தேசிய கூட்டணி முடிவு செய்யும் என்று திருமுருகன் காந்தி பேசி உள்ளார்
- திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் பேச்சு
திருச்சி,
திருச்சி மரக்கடையில் தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பில் பிரபாகரன் பிறந்தநாள், பெரியார் சாதியை பாதுகாக்கும் சட்ட பிரிவை எரித்த நாள், அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டம் வகுத்த நாள் போன்ற முப்பெரும் விழா நடைபெற்றது.இதில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயலாளர் முகமது தாஹா, மே பதினேழு இயக்கம் சுந்தரமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமை தாங்கி பேசியதாவது:-சாதியை ஒழித்தால்தான் வல்லான்மை பொருந்தியனவாக தமிழன் வருவான் என்று கூறிய பெரியாரின் முழக்கம் தான் தமிழகத்தில் பெரிய முழக்கமாக கடந்த நூற்றா ண்டில் ஒலித்தது. திராவி டத்தை ஒழிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கி ணை ப்பாளர் சீமான் கூறு வது ஏற்புடை யது அல்ல. இதன் மூலம் அவர் கூறுவது இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும்.சாதியை காப்பாற்ற வேண்டும், சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்வது தவறு இல்லை, ஆரிய பண்டிகை யை கொண்டாட வேண்டும் என்று சொல்கி றார். இதை அனைத்தையும் ஆதரிக்கி றார் என்றுதான் அர்த்தம். தமிழ்த்தேசிய கூட்டணியில் பல்லாயிரயிக்கணக்கான இளைஞர்கள் சேர வேண்டும் இந்த அரசியலில் வலிமையாக மாற்றி தமிழகத்தின் அரசியல் எதிர் காலத்தை நாம் முடிவு செய்வோம் என்றார்.
இந்த கூட்டத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ரொஹையா ஆகியோர் சிறப்புறையாற்றினர். மேலும் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேர வை, விடுதலைச் சிறுத்தை கள் கட்சி,தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழர் விடியல் கட்சி, தமிழ்ப்புலிகள் கட்சி, தமிழ் மீனவர் விடுதலை வேங்கை கள், அகில இந்திய பார்வா ர்ட் ப்ளாக், தேவேந்தி ரகுல மக்கள் முன்னேற்றப் பேர வை உள்ளிட்ட கட்சி நிர்வா கிகள் பலர் சிறப்பு ரையாற்றினர்.இந்த விழாவின் ஒரு பகுதியாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கலந்து கொண்டு அவர் தலைமையில் மேடையில் ஒரு தம்பதிக்கு சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைத்தார். இதில் அனைத்து கட்சி நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். முடிவில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தொழிற்சங்க மாவ ட்ட செயலாளர் டேவிட் ஆரோக்யராஜ் நன்றி கூறினார்.
- 17 ஒன்றியங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது
- திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில் நடந்தது
முசிறி,
திருச்சி வடக்கு மா வட்டம் சார்பில் 17 ஒன்றிய ங்களில் 4 நாட்களாக சுற்று ப்பயணம் மேற்கொண்டு வெல்லும் ஜனநாயகம் மாநாடு சிறுத்தைகளின் அடுத்த பாய்ச்சல் திருச்சி சிறுகனூரில் நடைபெ றுகிறது.அதன் தொடர்பான நிர்வாக ஆலோசனைக் கூட்டம் திருச்சி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட முசிறி, தொட்டியம் ,துறை யூர், உப்பிலியாபுரம் ஒன்றிய ங்கள் மற்றும் தொட்டியம், காட்டுப்புத்தூர், மேட்டுப்பாளையம், தாப்பேட்டை, உப்பிலிபுரம்,
பாலகிருஷ்ணம்பட்டி, பேரூராட்சிகளிலும் மற்றும் முசிறி துறையூர் நகராட்சி களிலும் நிர்வாக ஆலோச னைக் கூட்டம் தொடர்ந்து 4 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு 23-ந் தேதி உப்பிலியபுரம் ஒன்றியத்தில் தொடங்கப்பட்டு 26-ந் தேதி முசிறி நகராட்சியில் பகுதியில் முடிக்கப்பட்டது.இந்த சிறப்பு கூட்டத்தில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் கலைச்செ ல்வன், மாவட்ட பொரு ளாளர் கனியரசன் ,துறையூர் தொகுதி செயலாளர் துரைசங்கர் ,முசிறி தொகுதி துணை செயலாளர் உலக முதல்வன் ,ஒன்றிய பேரூர் செயலாளர்கள் தங்கதுரை, பாலசுப்பிரமணியன், மணிவளவன், அழகுமணி, வெற்றி அழகன், சந்திரசே கரன், உதயசூரியன், சங்கர், கோபி, மதியழகன், கமல குமார், சரவணன், இளைய ராஜா, பானுமதி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய பொறு ப்பாளர்கள் கலந்து கொ ண்டனர்.மாநாடு வருகிற டிசம்பர் மாதம் 23-ந் தேதி நடை பெறும் சிறுகனூர் மாநாட்டி ற்கு திருச்சி வடக்கு மாவட்ட பகுதியில் இருந்து நிர்வாகிக ள், தொண்டர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
- திருச்சி மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறவிக்கப்பட்டு உள்ளது
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின் தடை என்று அறிவிப்பு
திருச்சி,
திருச்சி மாவட்டம், மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் கோவில்பட்டி, மினிக்கியூர், பிராம்பட்டி, தொட்டியபட்டி, கசவனூர், மீனவேலி, இரட்டியபட்டி, தாதனூர், பாலக்குறிச்சி, தேனூர், வளநாடு, கைகாட்டி, கல்லுப்பட்டி, பளுவஞ்சி கிழக்கு, பளுவஞ்சி மேற்கு, மேலப்பளுவஞ்சி, கீழப்பளுவஞ்சி, வலசுப்பட்டி, சோமன்பட்டி, கல்லாமேடு, வெள்ளையக்கோன்பட்டி, தில்லம்பட்டி, கலர்பட்டி, வி.இடையபட்டி, குப்பாப்பட்டி, இச்சடிப்பட்டி, மேட்டுப்பட்டி, ராசாப்பட்டி, கவுண்டம்பட்டி,
கொடம்பறை, மதுக்காம்பட்டி, காரணிப்பட்டி, லஞ்சமேடு, மாகாளிப்பட்டி, பொத்தநாயக்கன்பட்டி, வரதக்கோன்பட்டி, டி.பொருவாய், ஒலியமங்களம், சாத்தம்பாடி, சொரியம்பட்டி, வகுத்தாழ்வார்பட்டி, முத்தாழ்வார்பட்டி, அகரப்பட்டி, அன்னதானப்பட்டி, வெள்ளையகவுண்டம்பட்டி, செல்லம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, ஆதனப்பாறை, மட்டக்குறிச்சி, ஆண்டியபட்டி, பாப்பாபட்டி, மலுகப்பட்டி, அலங்கம்பட்டி, அயன்பொருவாய், ராக்கம்பட்டி, அக்குலம்பட்டி, குப்பனம்பட்டி, சொக்கம்பட்டி, அயன்பொருவாய், கொடும்பபட்டி, போலம்பட்டி, துலுக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தங்கநகர் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி துணை மின் நிலையங்களில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. எனவே பெரிய கல்லாங்குத்து, நெட்டவேலம்பட்டி, ஆர்.கோம்பை, வைரபெருமாள்பட்டி, பச்சபெருமாள்பட்டி, செங்கல்பட்டி, அரப்புளிபட்டி, தங்கநகர், ஆ.கல்லாங்குத்து, கருப்பம்பட்டி, சீத்தக்காடு, ஆலத்துடையான்பட்டி, சிறுநாவலூர், கட்டப்பள்ளி, ரெட்டியாப்பட்டி, எஸ்.என்.புதூர், சாலக்காடு, அழகாபுரி, வேலம்பட்டி, கோம்பை, கோனேரிப்பட்டி, ஆங்கியம், பாலகிருஷ்ணம்பட்டி, பி.மேட்டூர், கல்லாத்துக்கோம்பை, பெரியசாமி கோவில், புளியஞ்சோலை, விஸ்வாம்பாள்சமுத்திரம் வடக்கு, தெற்கு, கோட்டப்பாளையம், வலையப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று துறையூர் கோட்ட மின் செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.






