தொழிலாளி தூக்கு போட்டு சாவு

திருச்சி உறையூரில் டைல்ஸ் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
தொழிலாளி தூக்கு போட்டு சாவு
Published on

திருச்சி, 

திருச்சி உறையூர் தெருவை சேர்ந்தவர் மணி ( வயது 56). டைல்ஸ் தொழிலாளி. இவரது மகன் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக தெரிகிறது. இதில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான மணி மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி பரிமளா கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு சம்பவத்தில் திருச்சி வண்ணார்பேட்டையில் தங்கி பாலக்கரை தனியார் நிறுவனத்தில் சேலம் செந்தாரப்பட்டியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் திடீரென மயங்கி விழுந்தார் .உடனே அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com