இறந்ததாக கருதப்பட்ட வாலிபர் கண் திறந்ததால் அதிர்ச்சி

உறவினர்களின் அழுகை சத்தத்தை கேட்டு இறந்ததாக கருதப்பட்ட வாலிபர் கண் திறந்து பார்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது மணப்பாறை அருகே அதிர்ச்சி தந்த சம்பவம்
இறந்ததாக கருதப்பட்ட வாலிபர் கண் திறந்ததால் அதிர்ச்சி
Published on

மணப்பாறை, 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணூத்து அருகே உள்ள பொன்னம்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிநாயக்கர். (வயது 23). இவர் கடந்த சில தினங்க ளுக்கு முன் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகின்றது. இதைய டுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப் பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த் துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரை, மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்படி மருத்துவ மனை நிர்வாகம் அறிவுறுத்தி யதாக கூறப்படுகிறது. ஆனால் ஆண்டி நாயக்கர் குடும்பத்தினர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்ற னர். வீட்டின் கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்த அவர், அசைவற்ற நிலையில் இருந்ததால் இறந்து விட்டதாக கருதி, உறவி னர்கள் கதறி அழுதனர். இந்த நிலையில் அனைவரின் அழுகுரல் கேட்ட வாலிபர் கண்ணை திறந்து பார்த்தார். இதனை பார்த்த உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அக்கம் பக்கத்தில் பரவவே அனைவரும் அங்கு திரண்டனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் மற்றும் வருவாய்துறையினரும் அங்கு வந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆண்டி நாயக்கரை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com