என் மலர்
தென்காசி
- கடைகள் மற்றும் உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் மீண்டும் மஞ்சப்பையினை கொண்டுவர விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
- கூட்டத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சிவகிரி:
தென்காசி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றும் பொருட்டு விரிவான செயல் திட்டம் ஒன்று வெளியிடப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையாணையினை ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்கு உட்பட்ட கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் முறையாக அமல்படுத்திட கடைகள், உணவகங்கள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்களுக்கு தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் அலுவலகங்களில் கூட்டம் நடத்த வேண்டும்.
தங்களது உள்ளாட்சி அமைப்பின் எல்கைக்குட்பட்ட கடைகள். உணவகங்கள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்களிடம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையாணையினை முறையாக அமல்படுத்திட கேட்டும், கடைகள் மற்றும் உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் மீண்டும் மஞ்சப்பையினை கொண்டுவர உரிய விழிப்புணர்வு ஏற்ப டுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை வருகிற 30-ந் தேதிக்குள் ஒப்படைப்பு செய்யக்கேட்டு கடை மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு அறிவிப்பு வெளியிடவும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை யாணையை அனைத்து பொதுமக்கள், கடை மற்றும் உணவக உரிமையாளர்களிடம் விளக்க வேண்டும், வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் அவை பறிமுதல் செய்யப்படும் எனவும் பிப்ரவரி 1-ந்தேதி முதல் ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதத்துடன் அவை பறிமுதல் செய்யப்படும் என்ற அறிவிப்பினை வருகிற 31-ந் தேதிக்குள் வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், மேற்படி செயல்திட்டங்களை தங்களது உள்ளாட்சி அமைப்பின் பகுதிக்குள் முறை யாக செயல்படுத்திடவும் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து சிவகிரி பேரூராட்சிமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். செயல் அலுவலர் வெங்கடகோபு, துணை தலைவர் லட்சுமிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அய்யப்பன், சீதாராமன், குருசாமி, ரவிந்திரநாத் பாரதி, குமார், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு தொடர்பாக விரிவாக எடுத்துரை க்கப்பட்டது. இக்கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்கள், தலைமை எழுத்தர் தங்கராஜ், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மர்ம நபர் ஒருவர் மாரீஸ்வரியின் மணிபர்சை பிக்பாக்கெட் அடித்துச் சென்றார்.
- சக பயணிகளின் உதவியுடன் அந்த நபரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
நெல்லை:
சிவகிரியை சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவர் நேற்று முன்தினம் தென்காசியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் தனது உறவினரை பார்ப்பதற்காக பஸ்சில் வந்துள்ளார். அவர் தென்காசி புதிய பஸ் நிலையத்தில் இறங்கி நின்றபோது, மர்ம நபர் ஒருவர் அவரிடம் இருந்து மணிபர்சை பிக்பாக்கெட் அடித்துச் சென்றார்.
இந்நிலையில் நேற்று மாரீஸ்வரி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் மீண்டும் தென்காசி புதிய பஸ் நிலையத்திற்குள் வந்தபோது, பிக்பாக்கெட் அடித்த அதே நபர் கேரளா பஸ்கள் நிற்கும் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். அதனை பார்த்த மாரீஸ்வரி, தனது கணவரிடம் தெரிவித்தார். உடனே அவர் அங்கிருந்த சக பயணிகளின் உதவியுடன் அந்த நபரை பிடித்து தென்காசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கடலூர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த பாஸ்கர்(வயது 46) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மணிபர்சை மீட்டு மாரீஸ்வரியிடம் ஒப்படைத்தனர்.
- மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
- வெற்றி பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
தென்காசி:
பாவூர்சத்திரம் அடுத்துள்ள ஆவுடையானுர் பஞ்சாயத்து பொடியனூரில் உள்ள சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. சீனியர் செகண்டரி பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு அனைத்து மாணவர்களுக்கும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் வகுப்பு வாரியாக நடத்தப்பட்டது.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு வேடத்தில் மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் விழாவை முன்னிட்டு மாணவர்கள் அனைவரும் வண்ண வண்ண உடையில் பள்ளிக்கு வருகை தந்திருந்தனர். பள்ளி ஆசிரியைகள் அனைவரும் மாணவர்களுக்காக கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
மாணவர்கள் அனைவரும் விளையாட்டு போட்டிகளில் பங்கு கொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர். மாணவர்கள் பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் நித்யா தினகரன். ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
- செங்கோட்டை கேசி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உயர் கோபுர மின் விளக்குகளை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.
செங்கோட்டை:
செங்கோட்டை கேசி ரோடு, உலைத்திரடு, கேசி ரோடு முப்புடாதி அம்மன் கோவில் முன்பு, பம்ப் ஹவுஸ் ரோடு புதிய ரேசன்கடை அருகில், காந்தி ரோடு செல்வகணபதி பாத்திரக் கடை எதிர்புறம் ஆகிய பகுதிகளில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 10 மீட்டர் சிறிய உயர் கோபுர மின் விளக்குகளை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தனுஷ்குமார் எம்.பி. தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். செங்கோட்டை நகர செயலாளர் வக்கீல் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சண்முகராஜா வரவேற்று பேசினார். அதனைத் தொடா்ந்து தனுஷ்குமார் எம்.பி. உயர் கோபுர மின்விளக்கினை இயக்கி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகச்சாமி, தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான்ஒலி, தென்காசி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள், பேரூர் செயலாளர், மணிகண்டன், நகர்மன்ற உறுப்பினர் இசக்கித்துரைபாண்டியன் மற்றும் நகர, வார்டு பிரதிநிதிகள், ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உட்பட பலா் கலந்து கொண்டனா். வார்டு பிரதிநிதி சங்கர்கணேஷ் நன்றி கூறினார்.
- குலசேகரநாத சுவாமி கோவிலில் சண்முகர் சன்னதியில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- விழா நாட்களில் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடை பெறுகிறது.
செங்கோட்டை:
செங்கோட்டையில் உள்ள குலசேகரநாத சுவாமி கோவிலில் சண்முகர் சன்னதியில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கி வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி கொடியேற்ற நாளில் காலை கணபதி ஹோமத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கொடியேற்றத்தை தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடை பெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆராட்டும், இரவு வள்ளி, தெய்வானையுடன் இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
- பாலசுப்பிரமணிய சுவாமி, முத்துக்குமார சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
- நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிவகிரி:
சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான நேற்று காலையில் யாகசாலை பூஜையை தொடர்ந்து பாலசுப்பிரமணிய சுவாமிக்கும், முத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து சோமாஸ்கந்தர் அலங்காரத்தில் சுவாமி நான்கு ரதவீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு களை சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா குடும்ப த்தினர் செய்து வருகின்றனர்.
- பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் சில வாலிபர்கள் ரேஸில் ஈடுபட்டு அதனை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
- மோட்டார் வாகன விதிமுறைகளை மீறியதாக ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதிகளில் வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடுபவதாக போலீசாருக்கு புகார் சென்றது.
அதன்பேரில் அச்சன்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, வடகரை, பண்பொழி, திருமலை கோவில் சாலை, இலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட வந்தனர். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் சில வாலிபர்கள் ரேஸில் ஈடுபட்டு அதனை வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அச்சன்புதூர் இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையிலான தனிப்படையினர் அங்கு சென்று வடகரை கீழத்தெருவை சேர்ந்த அப்துல் ரசாக் மகன் முகம்மது ஆசிக் (வயது21), வடகரை ரஹ்மானியாபுரம் மேலத்தெருவை சேர்ந்த ஷேக் ஒலி(25) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் புளியரை-கொல்லம் மெயின் ரோட்டை சேர்ந்த கவுதம் கிருஷ்ணா (24) என்பவரும் சாகசம் செய்ததாக அவர் மீது இலத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
செங்கோட்டை அருகே கலங்காத கண்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகன் பரத்குமார்(26) என்பவருக்கு மோட்டார் வாகன விதிமுறைகளை மீறியதாக ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அவரின் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
- சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
- சூரசம்ஹாரம் விழா வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது.
தென்காசி:
பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கி 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை கணபதி ஹோமமும், கொடி யேற்றமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் தொடர்ந்து தினமும் காலை, மாலையில் பூஜைகள், தீபாராதனை நடை பெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் விழா வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலையில் கும்ப ஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், விஷேச அபிஷேகம், தீபாராதனையும், மாலை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு திருக்கல்யாணம் நடை பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
- தீபாவளி கொண்டாட்டத்தில் மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர்.
- பள்ளி தாளாளர், முதல்வர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை கூறினர்.
தென்காசி:
செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் மழலையர் பிரிவு மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர்.
விழாவில் பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பட்டாசு வெடித்தும், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை கூறினர். மேலும் மணவ, மாணவிகளை பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாட அறிவுறுத்தினர். ஏற்பாடுகளை மழலையர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் அனுசியா செய்திருந்தார்.
- நிகழ்ச்சியில் பேராசிரியர் வில்லியம் தர்மராஜா கலந்து கொண்டு பேசினார்.
- விழாவில் மாணவ-மாணவிகள் 194 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
தென்காசி:
கடையம் அருகே உள்ள வெய்க்காலிப்பட்டி புனித ஜோசப் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை தலைவரும், கல்லூரி வளர்ச்சி கழக இயக்குநருமான பேராசிரியர் வில்லியம் தர்மராஜா தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
தொடர்ந்து கல்லூரியில் (2018-2020, 2019 -2021, 2020-2022) -ம் கல்வியாண்டில் பயின்ற மாணவ-மாணவிகள் 194 பேருக்கு பட்டங்களை வழங்கினார். கல்லூரித் தலைவரும், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயருமான எஸ். அந்தோணிசாமி விழாவிற்கு முன்னிலை வகித்து ஆசியுரை வழங்கினார். கல்லூரி செயலர் சகாயஜான் பட்டமளிப்பு விழாவினை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் மேரி ரபேலின் கிளாரட் வரவேற்புரை ஆற்றி ஆண்டறிக்கை யை வாசித்தார். விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
- மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஆடை அலங்கார அணிவகுப்பினை நடத்தினர்.
- 6, 7-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் குழு நடனமும் அரங்கேற்றப்பட்டது.
தென்காசி:
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டப்பட்டது. மாணவி ஹர்ஷிதா ஸ்ரீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவி ஆஹிலா வரவேற்று பேசினார். இதில் மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் குழுவாக இணைந்து உபயோகமற்ற காகிதங்களை மறுசுழற்சி செய்யும் விதமாக பாரம்பரிய ஆடைகளை அணிந்து ஆடை அலங்கார அணிவகுப்பினை நடத்தினர். மாணவி காளிபிரியா பரதநாட்டியம் ஆடினார். 6, 7-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் குழு நடனமும் அரங்கேற்றப்பட்டது.
9-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் குழுவாக இணைந்து கிருஷ்ண பெருமான், பூமாதேவியர் நரகாசுரனை வதம் செய்த நிகழ்ச்சியை நாடகமாக நடித்து காட்டினர். சுற்றுச்சூழல் மாசு இல்லாத தீபாவளி பண்டிகை கொண்டாடும் முறையை பற்றி பிளஸ்-1 மாணவர்கள் மவுன நாடகம் நடித்து காட்டினர். முடிவில் மாணவி ஸ்ரீனிகா நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை பாரத் கல்வி குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.
- மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கி அய்யாத்துரை பாண்டியன் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்.
- நிகழ்ச்சியில், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சங்கரன்கோவிலில் உள்ள விண்மின் இல்லத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கி, உணவு பரிமாறி குழந்தைகளோடு இணைந்து தீபாவளியை அ.தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் உற்சாகமாக கொண்டாடினார்.
நிகழ்ச்சியில், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், குருவிகளும் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கிருஷ்ணசாமி, கோவிந்தன், தேவர்குளம் கிளை செயலாளர் சண்முகசுந்தரம், களப்பாகுளம் பசும்பொன், களப்பாகுளம் கிளை செயலாளர் முருகன், எழில் நகர் கிளை செயலாளர் பாபு கதிரேசன், என்.ஜி.ஓ. காலனி கிளை செயலாளர் ராஜா, இருமன்குளம் பசும்பொன், சங்கரன்கோவில் காங்கேயன் என்ற கார்த்தி, இளைஞர் அணி பட்டு ராஜா, கார்த்திக் தங்கமுத்து, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் நடராஜன், ஞானசேகரன், மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






