என் மலர்
தென்காசி
- சூரசம்ஹாரம் நாளை (18-ந் தேதி) கோவில் கடற்கரை பகுதியில் நடைபெறுகிறது.
- கந்த சஷ்டி திருவிழாவில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த முருக பக்தர்கள் குடும்பத்துடன் வழிபாடு செய்வார்கள்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனை அவரது அலுவலகத்தில் பழனி நாடார் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை 18-ந் தேதி (சனிக்கிழமை) கோவில் கடற்கரை பகுதியில் நடைபெறுகிறது. இந்த கந்த சஷ்டி திருவிழாவில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த முருக பக்தர்கள் குடும்பத்துடன் வழிபாடு செய்வார்கள்.
நாளை தமிழகம் முழுவதும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தென்காசி மாவட்ட முருக பக்தர்கள் வழி பாடு செய்யமுடியாத சூழ்நிலை யில் உள்ளனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி வருகிற 25-ந் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்து நாளை (சனிக்கிழமை) மாவட்டத்திற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
நிகழ்ச்சியின் போது மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் உதய கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- அனைத்து கட்சியினர் சார்பில் சங்கராய்யா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- சிறப்பு அழைப்பாளர்களாக நெல்லை முன்னாள் எம்.பி. ராமசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் போலீஸ் நிலையம் அருகே மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சங்கராய்யா உருவப்படத்திற்கு அனைத்து கட்சியினர் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆலங்குளம் இடைகமிட்டி செயலாளர் பாலு தலைமை தாங்கினார்.
இதில் நெல்லை முன்னாள் எம்.பி. ராமசுப்பு, தி.மு.க. நகர செயலாளர் நெல்சன், நகர காங்கிரஸ் தலைவர் வில்லியம் தாமஸ், ஆலங்குளம் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் தங்கசெல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் வசந்தகுமார், திராவிடர் கழகம் நகர செயலாளர் பெரியார் குமார், ஆதி தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் பொதிகை ஆதவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சங்கரய்யா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா உறுப்பினர்கள் வெற்றிவேல், நல்லையா, பரமசிவன், கிளை செயலாளர்கள் சந்தனகுமார், பத்திரகாளி, ஆறுமுகம். ராசையா ஆதி விநாயகம், சாமுவேல் ராஜா, லிவிங்ஸ்டன் விமல், பி.எஸ்.என்.எல். ராஜேந்திரன், வேலாயுதம், ஏசுராஜா, பொன்னுத்துரை, குணசேகரன் பொன்னுசாமி. காமராஜர் மக்கள் முன்னேற்ற பேரவை நிறுவனர் தலைவர் ராஜா, மார்க்சிஸ்ட் ராமசாமி, பி.எஸ்.மாரியப்பன், வள்ளியம்மாள், வள்ளி மயில், வி.சி.க. அய்யனார்குளம் மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அனைத்து கட்சியினர் சார்பாக சங்கரய்யா புகைப்படத்தை கையில் ஏந்தி முக்கிய ரத வீதிகள் வழியாக மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.
- வாசுதேவநல்லூர் பஸ் நிலையம் அருகே, சங்கரய்யா மறைவிற்கு சி.பி.எம். கட்சி சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
சிவகிரி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா மறைந்ததை யொட்டி சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பாக அனைத்து கட்சியினர் சார்பாக சங்கரய்யா புகைப்படத்தை கையில் ஏந்தி முக்கிய ரத வீதிகள் வழியாக மவுன அஞ்சலி ஊர்வலம் புறப்பட்டு மீண்டும் கலையரங்கம் வந்து அடைந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சிவசுப்பிர மணியன் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு. வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான முத்தையா பாண்டியன், கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அமல்ராஜ், சுப்பிரமணியன், சுப்புலட்சுமி, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் மனோகரன், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், மற்றும் பலர் கலந்து கொண்டு இரங்கல் கூட்டத்தில் பேசினர். வாசுதேவநல்லூர் பஸ் நிலையம் அருகே, சங்கரய்யா மறைவிற்கு சி.பி.எம். கட்சி சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாசுதேவநல்லூர் ஒன்றியச் செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார்.இதில் வாசுதேவநல்லூர் பேரூர் தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணியன், வட்டார காங்கிரஸ் தலைவர் மகேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- நள்ளிரவில் பெய்த கனமழையால் கருப்பாநதி அணை நிரம்பி வழிந்தது.
- பாப்பான் கால்வாய், சீவலன் கால்வாய் கரையோரம் குடியிருக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுமென தொடர்ந்து அறிவிப்பு செய்யப்பட்டது.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூரில் அமைந்துள்ள கருப்பாநதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவில் கனமழை பெய்தது.
இதனால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணையானது நேற்று 69 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்து நிரம்பி வழிகிறது. அந்த நீரானது கடையநல்லூர் நகர் பகுதியில் செல்வதால் பாப்பான் கால்வாய், சீவலன் கால்வாய் கரையோரம் குடியிருக்கும் பொதுமக்களுக்கு வருவாய்த்துறை, பொதுப் பணித்துறை, காவல்துறை சார்பில் அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுமென தொடர்ந்து அறிவிப்பு செய்யப்பட்டது.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பாசனத்திற்காக கருப்பாநதி அணை நீரை இன்று காலை திறந்து விட இருந்த நிலையில் நள்ளிரவில் பெய்த கனமழையால் கருப்பாநதி அணை நிரம்பி வழிந்தது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து கடையநல்லூர் தாலுகா, கருப்பாநதி நீர்த்தேக்கத்தின் கீழ் பாசனம் பெறும் பெருங்கால், பாப்பான்கால், சீவலன்கால், இடைக்கால், கிளங்காடுகால், ஊர்மேலழகியான்கால் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுகமாக மொத்தம் 9,514.70 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
- பக்தர்களுக்கு குற்றாலநாதர் கோவில் குருக்கள் மற்றும் குருசாமிகள் துளசி மணி மாலை அணிவித்தனர்.
- ஐயப்ப பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா முழக்கம் எழுப்பியபடி மாலை அணிந்து கொண்டனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள குற்றாலநாதர் கோவில் மற்றும் புனித தீர்த்தமாக கருதப்படும் குற்றால அருவிகளில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் அதிகாலை முதலே புனித நீராடி குற்றாலநாதர் கோவிலின் முன்பு மாலை அணிந்து 42 நாட்கள் விரதம் தொடங்குவது வழக்கம்.
இன்று காலையில் தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த ஐயப்ப பக்தர்கள் மணி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.
முன்னதாக குற்றாலம் மெயின் அருவியில் புனித நீராடிய பக்தர்கள் புதிய கருப்பு, ஊதா நிறங்களில் ஆன உடைகளை அணிந்து வந்தனர். அவர்களுக்கு குற்றாலநாதர் கோவில் குருக்கள் மற்றும் குருசாமிகள் துளசி மணி மாலை அணிவித்தனர்.
ஐயப்ப பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா முழக்கம் எழுப்பியபடி மாலை அணிந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து 42 நாட்களுக்கு காலை மற்றும் மாலை நீராடி பஜனை செய்து விரதமிருந்து சபரிமலைக்குச் செல்ல உள்ளனர். இன்று ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிந்ததால் காலை முதல் குற்றாலம் மெயின் அருவியில் புனித நீராடுவதற்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
- முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் குழந்தைகள் தின விழாவாக கொண்டா டப்படுகிறது.
- இதனை முன்னிட்டு செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
தென்காசி:
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் குழந்தைகள் தின விழாவாக கொண்டா டப்படுகிறது. இதனை முன்னிட்டு செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து குழந்தைகளும் வண்ண உடை அணிந்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஆசிரியர்கள் முன்னின்று நடத்தினர். பள்ளியின் துணை முதல்வர் அருள் வர்சலா குழந்தைகளை வாழ்த்தி ஆங்கிலப் பாடலை பாடினார்.
பொது அறிவுப் போட்டி , விளையாட்டுப் போட்டிகளைத் தொ டர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஆசிரி யர்கள் தங்களது மாணவ , மாணவிகளுக்கு குழந்தை கள் தின நினைவாக சிறப்பு அன்பளிப்பை வழங்கினர். பள்ளியின் தாளாளர், பள்ளியின் முதல்வர், பள்ளியின் துணை முதல்வர் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரி யர்களும் குழந்தைகள் தின வாழ்த்துக்களை கூறினர்.
- சுரண்டை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- விழாவில் பழனி நாடார் எம்எ.ல்.ஏ. மற்றும் சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் ஆகியோர் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்ட நேருவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சுரண்டை:
சுரண்டை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பழனி நாடார் எம்எ.ல்.ஏ. மற்றும் சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் ஆகியோர் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்ட நேருவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவி வழங்கினர்.
விழாவில் கவுன்சிலர் அமுதா சந்திரன், அண்ணாத்துரை, நாட்டான்மை ராம்ராஜ், அருணாசலம், பிரபாகரன், கஸ்பா செல்வம், துரை, கந்தையா, பாலகனேஷ் சங்கர், சவுந்தர், ஆனந்த், செல்வராஜ், அரவிந்த், பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகிரியில் 21 முதல் 44 வரை உள்ள 24 வாக்கு சாவடி முகவர்கள் மற்றும் வாக்கு சாவடி கமிட்டி உறுப்பினர்களை சந்தித்து விபரம் சேகரிப்பு படிவம் மற்றும் பாக முகவர்களுக்கான பதிவேடு வழங்கப்பட்டது.
- நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம் தலைமை தாங்கினார்.
சிவகிரி:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வழிகாட்டுதலின்படி, சிவகிரியில் 21 முதல் 44 வரை உள்ள 24 வாக்கு சாவடி முகவர்கள் மற்றும் வாக்கு சாவடி கமிட்டி உறுப்பினர்களை சந்தித்து விபரம் சேகரிப்பு படிவம் மற்றும் பாக முகவர்களுக்கான பதிவேடு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சிவகிரி பேரூர் தி.மு.க. தேர்தல் பணி பொறுப்பாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான சீனிவாசன் கலந்து கொண்டு விபரம் சேகரிப்பு படிவம் மற்றும் பாக முகவர்களுக்கான பதிவேடுகளை வழங்கினார்.
இதில் பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர்கள் முத்துலட்சுமி, கிருஷ்ணலீலா, சேவுகபாண்டியன், கார்த்திக் குமார், வீரமணி மற்றும் வார்டு செயலாளர்கள், பாக முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கடையம் அருகே உள்ள புங்கம்பட்டி ஊரணியில் 100 பனைவிதைகள் விதைப்பு பணி நடைபெற்றது.
- தெற்கு மடத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் பிரேமராதா ஜெயம் முதல் பனைவிதையை நட்டு தொடங்கி வைத்தார்.
கடையம்:
கடையம் அருகே உள்ள புங்கம்பட்டி ஊரணியில் 100 பனைவிதைகள் விதைப்பு பணி நடைபெற்றது. தெற்கு மடத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் பிரேமராதா ஜெயம் முதல் பனைவிதையை நட்டு தொடங்கி வைத்தார். இதில் துணைத்தலைவர் சிவக்குமார், ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நிகழ்ச்சியில் சங்கர் மகாராஜன் உள்ளிட்ட சுமார் 50 பேர் தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.
- தி.மு.க.வில் உள்ளவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமையும் என ராஜா எம்.எல்.ஏ. பேசினார்.
சங்கரன்கோவில்:
குருவிகுளம் ஒன்றியத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சுமார் 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் தங்களை இணைத்து கொள்ளும் நிகழ்ச்சி சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் முகேஷ் முன்னிலை வகித்தார். இதில் குருவிகுளம் ஒன்றியத்தை சேர்ந்த ஓ.பி.எஸ். அணியில் இருந்து மூர்த்தி, சரண், செல்வம், கார்த்தி, ராசு, முத்துராஜ், ராஜா, மணிகண்டன் இசக்கி பாண்டியன், வெள்ளத்துரை, ஜெயக்கொடி, கிருஷ்ணசாமி, சங்கர பாண்டியன், கார்த்தி, பிரகாஷ், சங்கர் மகாராஜன் உள்ளிட்ட சுமார் 50 பேர் ராஜா எம்.எல்.ஏ. முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.
அப்போது ராஜா எம்.எல்.ஏ. பேசுகையில், தி.மு.க.வில் இணைந்து உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. தி.மு.க.வில் கட்சி பணிகளில் முழு ஈடுபாடுடன் பணியாற்ற வேண்டும். தி.மு.க.வில் உள்ளவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமையும் என்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜராஜன், நகர துணை செயலாளர் சுப்புத்தாய், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- கூட்டத்தில் சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு பாக முகவர்களுக்கான குறிப்பேடு, படிவங்களை வழங்கினார்.
சிவகிரி:
சிவகிரி காந்தி ரோட்டில் உள்ள சண்முக விலாஸ் திருமண மண்டபத்தில் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. கிளை செயலாளர்கள் மற்றும் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனுமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், விவசாய அணி அமைப்பாளர் மாடசாமி, வர்த்தக அணி அமைப்பாளர் சரவணகுமார், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் முருகன் சாமிநாதன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சிவகிரி விக்னேஷ் ராஜா, மாணவரணி துணை அமைப்பாளர் சதீஷ், அயலக அணி துணை அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தேர்தல் பணி பொறுப்பாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பரமகுரு சிறப்பு உரையாற்றி பாக முகவர்களுக்கான குறிப்பேடு மற்றும் படிவங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் புல்லட் கணேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் முனியராஜ், பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், அருணா தேவி பாலசுப்பிரமணியன், தேவிபட்டணம் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் மாடசாமி, உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் கிளைச் செயலாளர்கள், பாக முகவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சுரண்டை போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- சந்தேகம் அடைந்த போலீசார் அவரது மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர்.
நெல்லை:
சுரண்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதாக போலீசாருக்கு புகார்கள் சென்றது. இதனால் சுரண்டை போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று சப்-இன்ஸ்பெக்டர் சொரிமுத்து தலைமையிலான போலீசார் பரங்குன்றாபுரம் விலக்கு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே, சந்தேகம் அடைந்த போலீசார் அவரது மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அப்போது அதில் 300 கிராம் கஞ்சா இருந்தது. இதையடுத்து அதனையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்ததில், அந்த நபர் கீழ சுரண்டை மாயாண்டி கோவில் தெருவை சேர்ந்த திருமலைக்குமார் என்பவரது மகன் நவீன்(வயது 25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர் மீது கஞ்சா விற்றதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.






