search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி பகுதியில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி
    X

    சிவகிரி பகுதியில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

    • விழாவையொட்டி தினமும் அன்னதானம் மலைக்கோவிலில் வழங்கப்பட்டது.
    • சூரசம்ஹாரம் நிறைவு பெற்றதும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 13 -ந்தேதி கந்த சஷ்டி விழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை வழிபாடு, சுவாமி சப்பர வீதிஉலா வருதல் நடைபெற்றது. தினமும் அன்னதானம் மலைக்கோவிலில் வழங்கப்பட்டது.

    கந்த சஷ்டி முக்கிய நாளான நேற்று மாலையில் சூரனை வதம் செய்வதற்காக குதிரை வாகனத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் நகரின் மேலரத வீதியில் முதலில் யானைமுகம் கொண்ட சூரனையும், பின்னர் சிங்கமுகம் கொண்ட சூரனையும், இறுதியில் ஏழாம் திருநாள் மண்டபம் முன்பாக சூரபத்மனையும் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். சூரசம்ஹாரம் நிறைவு பெற்றதும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் விரதம் இருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் என்ற சின்னத்தம்பியார் தலைமையில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    இதபோல் சிவகிரி அருகே கூடலூர் நாதகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில், தென்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய கோவில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    Next Story
    ×