சங்கரய்யா மறைவுக்கு இரங்கல்-சங்கரன்கோவிலில் அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலம்

பயணியர் விடுதி முன்பு தொடங்கிய ஊர்வலம் சங்கரன்கோவில் தேரடி திடலில் முடிவு பெற்றது. கூட்டத்தில் சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
சங்கரய்யா மறைவுக்கு இரங்கல்-சங்கரன்கோவிலில் அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலம்
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் அனைத்து கட்சி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் சங்கரய்யா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. பயணியர் விடுதி முன்பு தொடங்கிய ஊர்வலம் சங்கரன்கோவில் தேரடி திடலில் முடிவு பெற்றது. இதனைத் தொடர்ந்து மவுன அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் அசோக்ராஜ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இசக்கி துரை, தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, நகரச் செயலாளர் பிரகாஷ், ம.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன், நகரச் செயலாளர் ரத்தினவேல் குமார், பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் பீர் மைதீன், மனிதநேய மக்கள் கட்சி மருத்துவ அணி செயலாளர் திவான் மைதீன் உள்ளிட்ட பலர் அஞ்சலி உரையாற்றினர்.

கூட்டத்தில் சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், ஆதிதிராவிட அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ். மாரியப்பன், ம.தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகம்மது ஹக்கீம், ஒன்றிய செயலாளர் சசி முருகன், தே.மு.தி.க. தலைமை செயற்குழு உறுப்பினர் அயூப்கான், நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் பீர் மைதீன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தைச் சேர்ந்த செல்வின், மதியழகன், செந்தில் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com