ஆலங்குளத்தில் சங்கரய்யா படத்திற்கு அனைத்து கட்சியினர் மரியாதை

அனைத்து கட்சியினர் சார்பில் சங்கராய்யா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக நெல்லை முன்னாள் எம்.பி. ராமசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குளத்தில்  சங்கரய்யா படத்திற்கு அனைத்து கட்சியினர் மரியாதை
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் போலீஸ் நிலையம் அருகே மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சங்கராய்யா உருவப்படத்திற்கு அனைத்து கட்சியினர் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆலங்குளம் இடைகமிட்டி செயலாளர் பாலு தலைமை தாங்கினார்.

இதில் நெல்லை முன்னாள் எம்.பி. ராமசுப்பு, தி.மு.க. நகர செயலாளர் நெல்சன், நகர காங்கிரஸ் தலைவர் வில்லியம் தாமஸ், ஆலங்குளம் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் தங்கசெல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் வசந்தகுமார், திராவிடர் கழகம் நகர செயலாளர் பெரியார் குமார், ஆதி தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் பொதிகை ஆதவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சங்கரய்யா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா உறுப்பினர்கள் வெற்றிவேல், நல்லையா, பரமசிவன், கிளை செயலாளர்கள் சந்தனகுமார், பத்திரகாளி, ஆறுமுகம். ராசையா ஆதி விநாயகம், சாமுவேல் ராஜா, லிவிங்ஸ்டன் விமல், பி.எஸ்.என்.எல். ராஜேந்திரன், வேலாயுதம், ஏசுராஜா, பொன்னுத்துரை, குணசேகரன் பொன்னுசாமி. காமராஜர் மக்கள் முன்னேற்ற பேரவை நிறுவனர் தலைவர் ராஜா, மார்க்சிஸ்ட் ராமசாமி, பி.எஸ்.மாரியப்பன், வள்ளியம்மாள், வள்ளி மயில், வி.சி.க. அய்யனார்குளம் மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com