சிவகிரியில் தி.மு.க. பாக முகவர்களுக்கான பதிவேடு வழங்கல்

சிவகிரியில் 21 முதல் 44 வரை உள்ள 24 வாக்கு சாவடி முகவர்கள் மற்றும் வாக்கு சாவடி கமிட்டி உறுப்பினர்களை சந்தித்து விபரம் சேகரிப்பு படிவம் மற்றும் பாக முகவர்களுக்கான பதிவேடு வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம் தலைமை தாங்கினார்.
சிவகிரியில் தி.மு.க. பாக முகவர்களுக்கான பதிவேடு வழங்கல்
Published on

சிவகிரி:

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வழிகாட்டுதலின்படி, சிவகிரியில் 21 முதல் 44 வரை உள்ள 24 வாக்கு சாவடி முகவர்கள் மற்றும் வாக்கு சாவடி கமிட்டி உறுப்பினர்களை சந்தித்து விபரம் சேகரிப்பு படிவம் மற்றும் பாக முகவர்களுக்கான பதிவேடு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சிவகிரி பேரூர் தி.மு.க. தேர்தல் பணி பொறுப்பாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான சீனிவாசன் கலந்து கொண்டு விபரம் சேகரிப்பு படிவம் மற்றும் பாக முகவர்களுக்கான பதிவேடுகளை வழங்கினார்.

இதில் பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர்கள் முத்துலட்சுமி, கிருஷ்ணலீலா, சேவுகபாண்டியன், கார்த்திக் குமார், வீரமணி மற்றும் வார்டு செயலாளர்கள், பாக முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com