என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • தேவகோட்டை அருகே கோட்டூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வருகிற 5-ந்தேதி முளைப்பாரி செலுத்துதல், மஞ்சுவிரட்டு நடைபெறும்.

    தேவகோட்டை

    தேவகோட்டை அருகே கோட்டூர் கிராமத்தில் உள்ளது முத்துமாரியம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உற்சவ விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டு பங்குனி உற்சவ விழா கொடியேற் றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு பால், தயிர், சந்தனம் மற்றும் பல்வேறு அபிஷேகம், தீபாரதனை நடைபெற்றது.

    பின்னர் அம்மனுக்கு 16 வகையான அபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் புனித நீர் குடங்களை தலையில் சுமந்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

    பின்னர் 21 வகையான தீபாரதனை நடைபெற்று அனைவருக்கும் பிரசா தங்கள் வழங்கப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரி கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திர ளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று முதல் காலை வேளையில் அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் லட்சார்ச்சனை நடைபெற்று மாலையில் சிறப்பு அபி ஷேகம் அலங்காரம் நடை பெறும்.

    தொடர்ந்து இன்று (28-ந் தேதி) முளைப்பாரி இடுதல், 31- ந் தேதி திருவிளக்கு பூஜை, 2-ந் தேதி கலை நிகழ்ச்சிகள், 3-ந்தேதி அம்மன் திருவீதி உலா, 4-ந் தேதி பால்குடம், காவடி எடுத்தல், இரவு முளைப்பாரியை அம்மன் சன்னதியில் வைத்தல், இரவு கலைநிகழ்ச்சிகள், 5-ந்தேதி முளைப்பாரி செலுத்துதல், மஞ்சுவிரட்டு நடைபெறும்.

    • திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • “கோவிந்தா...கோவிந்தா...” என பக்தி கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சவுமிய நாராயணன் பெருமாள் கோவில் உள்ளது. திவ்விய தேசங்களில் ஒன்றான இந்த கோவில்களில் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    கடந்த சில மாதங்களாக கோவிலில் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்தன. இந்தப்பணிகள் முடிவ டைந்ததையொட்டி கும்பாபி ஷேக விழா தொடங்கியது. அதன்படி கடந்த 23-ந்தேதி யாகசாலை பூஜை நடை பெற்றது. பட்டாச்சாரியார் ராமகிருஷ்ணன் தலைமை யில் 60-க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகளை நடத்தினர்.

    கடந்த 3 நாட்களாக காலை, மாலைகளில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்று (28-ந்தேதி) கும்பாபிஷேகம் நடை பெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பெரு மாள்-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    நேற்று காலை 8ம் கால யாக பூஜை நிறைவு பெற்றது. அதனைத்தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் சவுமிய நாராயண பெருமாள், திருமாமகள் தாயார், ஆண்டாள் மற்றும் ராஜ கோபுரங்களில் உள்ள கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

    அப்போது அங்கு திரண்டிருந்த பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா...கோவிந்தா..." என பக்தி கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கோ வில் நிர்வாகம் செய்திருந்தது.

    • கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
    • 28 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 43 ஆயிரத்து 895 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்தி றனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 339 மனுக்கள் பெறப்பட்டன.

    வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    இளையான்குடி வட்டம் கீழாயூர் கிராமத்தில் அரவிந்தன் என்பவர் மின்சாரம் தாக்கி மரணமடைந்ததையொட்டி அவரது வாரிசுதாரருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதித்தொகை ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும், வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரம் மதிப்பீட்டிலான மானியத் தொகையில் பேட்டரி தெளிப்பான்களையும், 3 பயனாளிகளுக்கு மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தலா ரூ.1,465 வீதம் மொத்தம் ரூ.4 ஆயிரத்து 395 மதிப்பீட்டிலான மானியத் தொகையில் பண்ணைக் கருவிகளையும் கலெக்டர் வழங்கினார்.

    மேற்கண்டவை உள்பட மொத்தம் 28 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 43 ஆயிரத்து 895 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி நடந்த கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற 9 மாணவ-மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) சாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தாய்-மகன் கொலை வழக்கில் மர்மம் நீடிக்கப்பட்டுள்ளது.
    • 5 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே துவார் கிராமத்தை அடுத்துள்ள பூமலை கண்மாய் பகுதியில் வசித்து வந்த சாத்தையா மனைவி அடக்கி (வயது 46), இவரது மகன் சின்ன கருப்பன் (26) ஆகியோர் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர். தாய் -மகனின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோ தனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த கொலை தொடர் பாக நெற்குப்பை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட் டது.

    தனிப்படை போலீசார் தாய்- மகன் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தீவிர விசாரணை நடத்தி வருகின் றனர். ஆனாலும் தற்போது வரை கொலைக்கான காரணங்கள் முழுமையாக தெரிய வில்லை.

    கொலையாளிகள் யார் என்பது மர்மமாகவே உள்ளது. இதற்கிடையில் கொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படை யில் அதே பகுதியைச் சேர்ந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 30-ந்தேதி வள்ளி நாயகி திருமணம் நடக்கிறது.
    • 1-ந்தேதி தங்க ரதத்தில் வீதி உலா நடக்கிறது.

    காரைக்குடி அருகே உள்ளது குன்றக்குடி. இங்கு புகழ் பெற்ற சண்முகநாதபெருமான் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான இந்த விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு வெள்ளிக்கேடயத்தில் சண்முகநாதபெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

    வருகிற 30-ந்தேதி வள்ளி நாயகி திருமணம் நிகழ்ச்சியும், 1-ந்தேதி தங்க ரதத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. 2-ந்தேதி இரவு 8 மணிக்கு தெப்பம் மற்றும் வெள்ளி ரதம் நிகழ்ச்சி நடக்கிறது.

    வருகிற 3-ந்தேதி காலையில் தேரில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை தேரோட்ட நிகழ்ச்சியும், இரவு திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. 4-ந்தேதி பங்குனி உத்திர விழாவையொட்டி காலை உத்திரம் தீர்த்த விழாவும், பக்தர்கள் காவடி, அக்னி காவடி, அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், இரவு மயிலாடும்பாறையில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • சங்கராபுரம் ஊராட்சியில் உதவி இயக்குநர் ஆய்வு நடந்தது.
    • அனைவருடன் இணைந்து செயல்பட்டு மக்கள் நல பணிகளை செய்ய தயாராக உள்ளேன் என்றார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவராக தேவி மாங்குடி கடந்த மாதம் பொறுப்பேற்றார்.

    பின்னர் நடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தில் துணை தலைவர் பாண்டியராஜன் கவுன்சிலர்கள் சங்கரிபாபு, லட்சுமி, நல்லம்மாள், செல்வராணி, பாபு, வள்ளி, ரஞ்சித்குமார், ஆனந்தம், ராமஜெயம், ரேவதி, பாண்டிச்செல்வம் ஆகியோர் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் முறைப்படி உறுப்பி னர்களுக்கு தெரியப்படு த்தவில்லை என்றும், இதில் சட்ட விதி மீறல்கள் நடைபெற்றுள்ளது என்றும், புதிய வீடுகளுக்கான வரை பட அனுமதியில் முறை கேடுகள் தொடருகிறது.

    சொக்கலிங்கபுரத்தில் மக்கள் பயன்பாட்டில் உள்ள பூங்காவை இடித்து பாதை அமைத்து கொடுத்தது தவறானதாகும். வைரவபுரத்தில் கோவில் அருகே இருந்த நாடக மேடையை கள ஆய்வு மேற்கொள்ளாமலும் மன்ற அனுமதி இல்லாமலும் இடிக்கப்பட்டது என்றும் பல்வேறு காரணங்களை கூறி வெளிநடப்பு செய்தனர்.

    அதை மனுவாக கலெக்டருக்கும் அனுப்பி வைத்தனர்.கலெக்டர் உத்தரவின் பேரில் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் குமார், சங்கரா புரம் ஊராட்சி அலுவல கத்தில் ஆய்வு செய்தார்.

    அவருடன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜோசப் அருள்ராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    உதவி இயக்குநர் குமார் கூறுகையில், கலெக்டரின் உத்தரவின் பேரில் ஆய்வு செய்துள்ளேன். புகார் அளித்தவர்களிடம் அதற்கான ஆதாரங்களை கேட்டுள்ளேன்.

    வருவாய் கோப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. பொதுமக்களிடம் கருத்தை கேட்டபிறகு எனது அறிக்கையை கலெக்டரிடம் சமர்ப்பிப்பேன் என்றார்.

    ஊராட்சி தலைவர் தேவி மாங்குடியின் ஆதரவு கவுன்சிலர்கள் கூறுகையில், பொதுமக்களின் வேண்டு கோளின் பேரிலேயே சொக்கலிங்கம் நகரில் பூங்கா இணைப்பு சாலை அமைக்கப்பட்டது.

    வைரவபுரம் நாடக மேடை பயன்படுத்தப்படாமல் பழுதடைந்து இருந்த நிலையில் ஒன்றிய கவுன்சிலர் நிதி மூலம் ரேசன் கடைகட்டுவதற்காக அப்புறப்படுத்தப்பட்டது.

    கட்டிட வரைபட அனுமதி அவ்வப்போது மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு அனுமதி வழங்குவது வழக்கம். துணை தலைவர் மீது கடந்த காலங்களில் உள்ள புகாரை உதவி இயக்குநரிடம் மனுவாக அளித்துள்ளோம் என்றனர்.

    ஊராட்சி தலைவர் தேவி மாங்குடி கூறுகையில், நான் பதவியேற்று சில நாட்கள்தான் ஆகிறது. இன்னும் 1½ வருடங்களே உள்ள நிலையில் துணை தலைவர் மற்றும் சில உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மக்கள் நல பணிகளை செய்ய முடியவில்லை.பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை உள்ளது.அனைவருடன் இணைந்து செயல்பட்டு மக்கள் நல பணிகளை செய்ய தயாராக உள்ளேன் என்றார்.

    • விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • சார்பு ஆய்வாளர் அய்யனார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கொன்னத்தான்பட்டி கிராமத்தில் முத்து விநாயகர் கோவில் புனர் நிர்மானம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக 3 நாட்கள் நான்கு கால கணபதி, லட்சுமி ஹோமம் என பல்வேறு ஹோமங்கள் நடந்தன.

    பரிவார தெய்வங்களுக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. சிவாச்சாரியார்கள் யாக வேள்வியில் இருந்து கடம் புறப்பாடாகி வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பழனியப்ப தேவர், சோலை மணி தேசிகர் மற்றும் கிராம இளைஞர்கள், பொதுமக்கள், செய்திருந்தனர்.

    இதில் மகிபாலன்பட்டி, நெற்குப்பை உள்ளிட்ட 24½ கிராமத்தைச் சேர்ந்த நாட்டார்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம்-பிரசாதம் வழங்கப்பட்டது.

    நெற்குப்பை காவல் ஆய்வாளர் ரவீந்திரன், சார்பு ஆய்வாளர் அய்யனார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • காங்கிரஸ் அறப்போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
    • சூரியா, நாச்சம்மை, மாரியாயி, செல்வி, கலா உள்பட பலர் பங்கேற்றனர்.

    காரைக்குடி

    ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காரைக்குடி மகர்நோன்பு திடலில் உள்ள காந்தி சிலை அருகே மாங்குடி எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் அகிம்சை வழியில் போராட்டம் நடத்தினர்.

    முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, திருவாடானை எம்.எல்.ஏ. கருமாணிக்கம், மாவட்ட தலைவர் சத்திய மூர்த்தி முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், காரைக்குடி நகரத்தலைவர் பாண்டி மெய்யப்பன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேவி மாங்குடி, காமராஜ், கல்லல் ஒன்றிய கவுன்சிலர் அழகப்பன், வட்டாரத் தலைவர்கள் செல்வம், கருப்பையா, தேவகோட்டை அப்பச்சி சபாபதி, சஞ்சய், கவுன்சிலர்கள் அமுதா, அஞ்சலிதேவி.

    மானாமதுரை நகர்மன்ற கவுன்சிலர் புருஷோத்தமன், சிவகங்கை நகர்மன்ற கவுன்சிலர் விஜயகுமார், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் இமயமெடோனா, கண்டனூர் நகரத்தலைவர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ் நகர்செயலாளர் குமரேசன், வக்கீல் ராமநாதன், எஸ்.எஸ். ரமேஷ், புதுவயல் முத்துக்கண்ணன், ஜெயப்பிரகாஷ், முகமது மீரா, மானாமதுரை சஞ்சய், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செய லாளர்கள் ராஜீவ்கண்ணா, ஆதி. அருணா.

    மணச்சை பழனியப்பன், கருப்பையா, ராமசாமி, தட்சிணாமூர்த்தி, முகமது ஜின்னா, பழ.காந்தி, லோட்டஸ் சரவணன், கனிமுகமது, ராமசாமி, மீனாட்சிசுந்தரம், ரவி, திருப்பத்தூர் பேரூராட்சி கவுன்சிலர் சீனிவாசன் இளைஞர் காங்கிரஸ் பாலா, சசி, முத்து, அசார், மாஸ்மணி, மாணவர் காங்கிரஸ் தியோடர், வசந்தா தர்மராஜ், சூரியா, நாச்சம்மை, மாரியாயி, செல்வி, கலா உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அகழாய்வு பணிகளின்போது கிடைத்த தொல்பொருட்கள் ரூ.18.42 கோடியில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
    • வருகிற 1-ந் தேதி (ஏப்ரல்) முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும் கட்டண விவரத்தையும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் நடைபெற்ற 8 கட்ட அகழாய்வு பணிகளின் போது பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய தொல்பொருட்கள் ஏராளமாக கிடைத்தன. இவை அனைத்தும் 2600 ஆண்டுகள் பழமையானவை என ஆய்வுகளின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அகழாய்வு பணிகளின்போது கிடைத்த தொல்பொருட்கள் ரூ.18.42 கோடியில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த அருங்காட்சியகத்தை கடந்த 5-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைத்து பார்வையிட்டார். மறுநாளில் இருந்து பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் எனவும், இரவு நேரத்தில் மின்விளக்கு வெளிச்சத்தில் பார்வையிடவும் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அனைவரும் வந்து இலவசமாக பார்வையிட்டு செல்கின்றனர்.

    இந்நிலையில், கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வருபவர்களுக்கு வருகிற 1-ந் தேதி (ஏப்ரல்) முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும் கட்டண விவரத்தையும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். அதில் உள்நாட்டினை சேர்ந்த மாணவர்களுக்கு தலா ரூ.5, சிறியவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.15 வசூலிக்கப்படும். வெளிநாட்டை சேர்ந்த சிறியவர்களுக்கு தலா ரூ.25, பெரியவர்களுக்கு ரூ.50, புகைப்படம் எடுக்க ரூ.30, வீடியோ எடுக்க ரூ.100 கட்டணமாக வசூல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • லாரி மீது பைக் மோதல்; முன்னாள் ராணுவ வீரர் இறந்தார்.
    • சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் சாஸ்தா நகரை சேர்ந்தவர் ஜெயசங்கர் (வயது45), இவர் ராணுவத்தில் பணியாற்றி விட்டு தற்போது சிவகங்கை யில் உள்ள தனியார் நிறுவ னத்தில் வேலை பார்த்து வந்தார்.

    ஜெயசங்கர் வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு சென்றார். அவர் மானா மதுரை அருகே கொன்னக் குளம் விலக்கு பகுதியில் சென்றபோது சாலை யோரத்தில் நின்று கொண்டி ருந்த லாரி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயசங்கர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந் தார்.

    இந்த விபத்து குறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.

    • சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடக்கிறது.
    • கலைஞர் பவளவிழா மாளிகையில் பசும்பொன் தா.கிருட்டிணன் அரங்கத்தில் நடக்கிறது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சரு மான கேஆர்.பெரிய கருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நாளை (27-ந்தேதி) மாலை 4 மணிக்கு காரைக்குடியில் உள்ள கலைஞர் பவளவிழா மாளிகையில் பசும்பொன் தா.கிருட்டிணன் அரங்கத் தில் நடக்கிறது.

    மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் அ.கணேசன் தலைமை தாங்குகிறார். இதில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பாரா ளுமன்ற தேர்தலுக்கான சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள். வி.பி.ராஜன் (திருப்பத்தூர்), ந.செந்தில் (காரைக்குடி), மருத்துவர் யாழினி (சிவ கங்கை). எஸ்.தினேஷ் (மானாமதுரை) ஆகியோர் கலந்து கொண்டு பாராளு மன்ற தேர்தல் பணிகள் செய்வது குறித்து ஆலோ சனை வழங்குகின்றனர்.

    மேலும் கூட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா நடத்துவது குறித்தும், சென்னையில் நடைபெற்ற தி.மு.க. செயலாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    எனவே கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடநதது.
    • சூரியா, நாச்சம்மை, மாரியாயி, செல்வி, கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காரைக்குடி 5 விளக்கு அருகில் எம்.எல்.ஏ. மாங்குடி தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நகரத்தலைவர் பாண்டி மெய்யப்பன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேவி மாங்குடி, காமராஜ், கல்லல் ஒன்றிய கவுன்சிலர் அழகப்பன், வட்டாரத்தலைவர்கள் செல்வம், கருப்பையா, தேவகோட்டை அப்பச்சி சபாபதி, சஞ்சய், நகர்மன்ற கவுன்சிலர்கள் அமுதா, அஞ்சலிதேவி, மானாமதுரை நகர்மன்ற கவுன்சிலர் புருஷோத்தமன், சிவகங்கை நகர்மன்ற கவுன்சிலர் விஜயகுமார், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் இமயமெடோனா, மாநில மகளிர் காங்கிரஸ் துணைத்தலைவர் ஸ்ரீவித்யா, கண்டனூர் நகரத்தலைவர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், நகர்செயலாளர் குமரேசன், வக்கீல் ராமநாதன், எஸ்.எஸ்.ரமேஷ், புதுவயல் முத்துக்கண்ணன், ஜெயப்பிரகாஷ், முகமது மீரா, மானாமதுரை சஞ்சய், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர்கள் ராஜீவ்கண்ணா, ஆதி, அருணா, மணசை பழனியப்பன், கருப்பையா, ராமசாமி, தட்சிணாமூர்த்தி, முகமது ஜின்னா, பழ.காந்தி, லோட்டஸ் சரவணன், கனிமுகமது, ராமசாமி, மீனாட்சிசுந்தரம், ரவி, திருப்பத்தூர் பேரூராட்சி கவுன்சிலர் சீனிவாசன், இளைஞர் காங்கிரஸ் பாலா, சசி, முத்து, அசார், மாஸ்மணி, மாணவர் காங்கிரஸ் தியோடர், வசந்தா தர்மராஜ், சூரியா, நாச்சம்மை, மாரியாயி, செல்வி, கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×