search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க.வில் அதிக  உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்; அமைச்சர் பெரியகருப்பன்
    X

    கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியபோது எடுத்த படம்.

    தி.மு.க.வில் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்; அமைச்சர் பெரியகருப்பன்

    • தி.மு.க.வில் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
    • ஜூன் 3-ந்தேதி கலைஞரின் நூற்றாண்டு விழா தொடங்குகிறது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் காரைக்குடியில் உள்ள கலைஞர் பவள விழா மாளிகையில் நடைபெற்றது.மாவட்ட அவைத்தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலை வகித்தார்.

    கூட்டுறவுத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமாகிய கே.ஆர்.பெரிய கருப்பன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கடந்த வாரம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசியபோது வருகிற ஜூன் 3-ந்தேதி கலைஞரின் நூற்றாண்டு விழா தொடங்குகிறது.

    வருடம் முழுவதும் நாம் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் சுமார் 2 கோடி வாக்குகளை பெற்றோம். நம் உறுப்பி னர்கள் ஒரு கோடி பேர் தவிர நடுநிலையாளர்கள், பொதுமக்கள் 1 கோடி பேர் நமக்கு வாக்களித்துள் ளார்கள். அந்த 1 கோடி பேரையும் நமது கழக உறுப்பினர்களாக மாற்ற வேண்டும்.

    நமது மாவட்டத்தில் சுமார் 2 இலட்சம் புதிய உறுப்பினர்களை வருகிற ஏப்ரல் 3 முதல் ஜூன் 3-ந்தேதிக்குள் அவசியம் சேர்த்தாக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்த லுக்கான சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் வி.பி.ராஜன் (திருப்பத்தூர்), மருத்துவர் யாழினி (சிவகங்கை), வழக்கறிஞர் தினேஷ் (மானாமதுரை) ஆகியோர் அறிமுக உரை நிகழ்த்தினார்கள்.இதில் மாவட்ட துணை செய லாளர்கள் சேங்கை மாறன், ஜோன்ஸ்ரூசோ, மணிமுத்து, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில் குமார், மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினர் தமிழரசி, ஒன்றிய செயலாளர்கள் டாக்டர்.ஆனந்த், சின்னத் துரை, நெடுஞ்செழியன், தேவகோட்டை நகர செயலாளர் பெரி.பாலா, பொதுக்குழு உறுப்பினர்கள் அசோகன், பள்ளத்தூர் ரவி, தெய்வானை இளமாறன், ஒன்றிய துணை செயலாளர் சத்யாராஜா, நகர்மன்ற உறுப்பினர் திவ்யா காரைசக்தி, கொத்தமங்கலம் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். காரைக்குடி நகர செயலாளர் குணசேக ரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×