என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • கிராமத்து அம்பலகாரர்கள் கழுவனுக்கு மரியாதை செய்தனர்.
    • தன்னை விரட்டி வரும் இளைஞர்களை தீப்பந்தத்தால் கழுவன் விரட்டி சுடுவது அனைவரையும் கவர்ந்தது.

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் வைகாசி விசாக பிரமோத்ஸவ விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி வரலாற்று சிறப்புமிக்க கழுனை விரட்டியடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நின்றசீர் நெடுமாறன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தபோது சமண சமயத்தை ஆதரித்தார். அப்போது பாண்டிய மகாராணியான மங்கையற்கரசியும், பாண்டிய மந்திரி குலச்சிறையாரும் மட்டுமே சைவ சமயத்தினை கடைப்பிடித்தனர்.

    பாண்டிய மகாராணி அழைப்பினை ஏற்று திருஞான சம்பந்தர் பாண்டிய நாட்டிற்கு வந்தார். அவர் தங்கியிருந்த மடத்திற்கு சமணர்கள் மந்திரத்தால் நெருப்பு வைத்தனர். இந்த கொடுஞ்செயலுக்கு துணை நின்றமைக்காக பாண்டிய மன்னன் மீது கடும் கோபமுற்றனர். பாண்டிய மன்னனை வெப்பு நோய் தாக்கியது. சமணர்கள் முயன்றும் நோயை குணப்படுத்த முடியவில்லை.

    மகாராணி நோயை குணப்படுத்த திருஞான சம்பந்தரை அழைத்தார். திருஞான சம்பந்தர் திருநீற்று பதிகம் பாடி திருநீற்றை தந்து நோயை குணப்படுத்தினார். தீராத நோய் குணமாகியதால் மன்னன் சைவ சமயத்தை தழுவினான். இதனால் கோபமுற்ற சமணர்கள் புனல் வாதம் எனப்படும் ஓடும் நதியில் ஏடுகளை இடும் போட்டிக்கு சைவர்களை அழைத்தனர்.

    இதில் தோற்றால் மன்னன் தங்களை கழுவேற்றலாம் என்றார்கள். இந்த போட்டியில் சமணர்களின் ஏடுகள் நீரில் அடித்து செல்லப்பட்டன. திருஞான சம்பந்தரின் ஏடுகள் எதிர்திசையில் மிதந்து வந்தன. திருஞான சம்பந்தர் வெற்றி பெற்றார். இந்த போட்டியில் தோல்வியடைந்த சமணர்களை கழுவேற்ற பாண்டிய மன்னன் ஆணையிட்டதாகவும் பெரியபுராணம் கூறுகிறது. இதனை நினைவுகூறும் வகையில் இந்த கழுவன் திருவிழா நடைபெறுகிறது.

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் ஐயனார் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 6-ம் நாளானன்று கொடூர கழுவன் விரட்டும் விநோத திருவிழா நள்ளிரவில் நடைபெற்றது.

    உடல் முழுவதும் கருப்பு சாயம் பூசி முகத்தை மறைக்கும் ஜடா முடி அலங்காரம், அரைஞான் கயிற்றில் ஜடா முடியால் ஆடை, கோரமான உருவத்தில் திகிலூட்டும் தீவட்டியுடன் உலாவந்த கழுவனை விரட்டி பிடித்த மக்கள் மற்றும் இளைஞர்களிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.

    திகிலூட்டும் அலங்காரத்துடன் உடல் முழுவதும் கரிபூசிய சாயம், ஆட்டு ரத்தம், ஆட்டுக்குடல்களுடன் கோவிலுக்குள் அழைத்து வந்து பலி கருப்பன சுவாமியிடம் அருள்பெற்று ஸ்ரீசேவுகப்பெருமாள் சுவாமி எழுந்தருளியுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நாட்டார்கள் முன்னிலையில் பணிவுடன் தவழ்ந்து வந்த கழுவனுக்கு அங்கு குவிந்திருந்த பக்கதர்கள் கூட்டம் கைதட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

    அங்கு கோவில் சார்பில் கழுவனுக்கு பரிவட்டம் கட்டப்பட்டு சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் சிவாச்சாரியார்கள் சார்பில் மரியாதை செய்யப்பட்டதை தொடர்ந்து, கிராமத்து அம்பலகாரர்கள் கழுவனுக்கு மரியாதை செய்தனர். கழுவன் விரட்டும் நிகழ்ச்சியில் உற்சாகமடைந்த இளைஞர்கள் பட்டாளம் கழுவனை விரட்டுவதும், தன்னை விரட்டி வரும் இளைஞர்களை தீப்பந்தத்தால் கழுவன் விரட்டி சுடுவதும் அனைவரையும் கவர்ந்தது.

    ஆண்டுதோறும் நள்ளிரவில் நடைபெறும் இந்த விழாவை காண ஜாதி, மதம் வேறுபாடின்றி அனைத்து சமுதாய மக்களும் கோவிலில் திரண்டனர்.

    • மானாமதுரையில் சித்ராயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ராஜமாணிக்கம் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    மானாமதுரை

    மானாமதுரை கொடிக்கால் தெருவில் உள்ள சித்ராயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் அருகே யாகசாலை அமைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. 2-ம் கால பூஜை நிறைவடைந்த நிலையில் சித்ராயி அம்மன் மூலவர் விமானக்கலசத்தின் மீதும், பரிவார தெய்வங்களுக்கும் ராஜேஷ் பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ராஜமாணிக்கம் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    • விவசாயிகளின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும்.
    • கலெக்டர் ஆஷா அஜித் உறுதியளித்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காத்து வருகிறார்கள். அதன்படி, விவசாயிகளின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் பொ ருட்டும், வேளாண் தொழி லை உழவர்கள் எவ்வித இடையூறு இன்றியும் தேவையான அனைத்து வசதிகளுடன் மேற் கொள்ளும் பொருட்டும், பிரதி மாதந்தோறும் விவசாயி களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    கூட்டத்தில் விவசாயி களின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், புதிய கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    முதலமைச்சர் அவர்கள், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காத்து வருகிறார். அதன்படி, விவசாயிகளின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பொருட்டும், வேளாண் தொழிலை உழவர்கள் எவ்வித இடையூறு இன்றியும் தேவையான அனைத்து வசதிகளுடன் மேற்கொ ள்ளும் பொருட்டும், மாதந்தோறும் விவசாயி களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் விவசாயி களின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்தும், புதிய கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெற்றும் நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், வேளாண்மை துறை இணை இயக்குநர் தனபாலன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) மற்றும் முதல்நிலை அரசு அலுவ லர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட மைய நூலகம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்தனர்.
    • அவர்கள் படிக்கும் பள்ளிக்கே சென்று புத்தகங்கள் இன்று வழங்கப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கையில் நூலக நண்பர்கள் திட்டத்தின் மூலமாக மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசு பொது நூலக துறையின் நூலக நண்பர்கள் திட்டத்தில் நூலக தன்னார்வலரான எழுத்தாளர் ஈஸ்வரனின் சார்பாக மன்னர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினராக இணைத்து புத்தகங்களை அவர்கள் படிக்கும் பள்ளிக்கே சென்று புத்தகங்கள் இன்று வழங்கப்பட்டன.

    மாவட்ட நூலக அலுவலர் சான் சாமுவேல் மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் உறுப்பினர் அடையாள அட்டைகளையும் புத்தகங்களையும் மாணவர்களுக்கு வழங்கினார்கள். புத்தகங்கள் நமது வரலாற்று நூல்களும் தேசிய தலைவர்களது வாழ்க்கை வரலாற்று நூல்களும்சுய முன்னேற்றம் தன்னம்பிக்கை நூல்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில் நூல் சரி பார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன் நூலகர்கள் முத்துக்குமார் கனகராஜன், மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் நூலக தன்னார்வலர் ரமேஷ் கண்ணன் மற்றும் ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடி அருகே அரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே கீழாநிலைக்கோட்டையில் உள்ள அரியநாயகி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி அருகே கீழாநிலைக்கோட்டையில் அரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த

    25-ந்தேதி அனுக்ஜை, விக்னேசுவஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.வேத மந்திரங்களும் வேத பாராயணங்களும் முழங்க பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் தலைமை யில் சிவாச்சாரியார்கள் 6 கால யாக பூஜைகளை நடத்தினர். பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.

    விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி., தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் துறை அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, திருநாவுக்கரசர் எம்.பி., தொழிலதிபர் செல்லப் பன் அம்பலம், பி.எல்.படிக்காசு அம்பலம், செல்லப்பன் வித்யா மந்திர் தாளாளர் சத்தியன், தொழிலதிபர்கள் பி.எல்.பி. பாலசுப்பிரமணியன், பி.எல்.பி. பெரியசாமி, மாங்குடி எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புராம், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.ஆர்.ஆனந்த், பள்ளத்தூர் பேரூராட்சி சேர்மன் சாந்தி சங்கர், சங்கராபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாண்டியராஜன், ராஜேஷ்கண்ணன், சேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை 84 நாட்டு நாட்டார்கள், அம்பலக்காரர்கள், மற்றும் விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.

    • சிவகங்கை அருகே கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை வடக்கு ஒன்றிய செயலாளர் கென்னடி தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    காளையார் கோவில்

    சிவகங்கை மாவட்டம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கே.சொக்க நாதபுரத்தில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும், இலக்கிய அணி புரவலருமான தென்னவன தலைமை தாங்கினார்.

    தலைமைக்கழக பேச்சாளர் தூத்துக்குடி சரத்பாலா, காளை யார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் கென்னடி, மாவட்ட துணைச்செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து ஆகியோர் பேசினர். பொதுக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் யோககிருஷ்ணகுமார், ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் சுப. தமிழரசன் வரவேற்றுப் பேசினார்.

    இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சேதுபதி ராஜா, துஷாந்த் பிரதீப் குமார், நாட்டரசன் கோட்டை பேருர் செயலா ளர் ஜெயராமன் ஒன்றிய நிர்வாகிகள் அழகப்பன், கண்ணப்பன், செல்லப்பாண்டி, கண்ணாத்தாள் தென்னரசு, பொருளாளர் கண்ணன், அல்லூர் ரவி, இளைஞரணி அமைப்பாளர் சக்தி தாசன், சுசீந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்ணன், செல்வராஜ், மையப்ப செட்டியார் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை அருகே போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • இதில் மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

    இளையான்குடி

    சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி போதை பொருள் ஒழிப்பு கழகம், நாட்டு நல பணி திட்டம் மற்றும் இளையான்குடி சரக காவல்துறையினர் இணைந்து போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தினர்.

    பேரணியை கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான், காவல் துறை அதிகாரிகள் சரவணக்குமார், முக்கண்ணன், மதுவிலக்கு பிரிவு காவல் துறை அதிகாரிகள் போஸ் மற்றும் அய்யனார் ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இளையான்குடி கண்மாய் கரையில் தொடங்கிய பேரணி பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

    பேரணியில் 300 மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகை கள் ஏந்தி கோஷங்களை எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் போதை பொருள்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு, கையெழுத்து நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

    கல்லூரி போதைப்பொருள் ஒழிப்பு கழக ஒருங்கிணைப்பாளர் அஸ்மத்து பாத்திமா,நாசர் மற்றும் நாட்டு நல பணி திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது அப்ரோஸ்,சேக் அப்துல்லா,பாத்திமா கனி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.

    • அரசு கல்லூரியில் குடிநீர் சுத்திகரிக்கப்பு நிலையத்தை நகர்மன்ற தலைவர் திறந்து வைத்தார்.
    • இந்த சுத்தியடைப்பு நிலையம் 500 லிட்டர் கொள்ளளவு கொண்டது.

    சிவகங்கை

    சிவகங்கையில் 50 ஆண்டுகால பழமையான மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளின் கோரிக்கையை ஏற்று சிவகாங்கை நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்தியடைப்பு நிலையத்தை சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை.ஆனந்த் திறந்து வைத்தார்.

    அப்போது கல்லூரிக்கு தேவையான மேலும் பல உதவிகளை வழங்க வேண்டும் என பேராசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று அரசு மற்றும் தன்னார்வலர்களை கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக நகர்மன்ற தலைவர் உறுதியளித்தார்.

    இந்நிகழ்ச்சியில் திலகவதி கண்ணன், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் ஏராளமான பங்கேற்றனர்.

    • இளையான்குடி அருகே வீட்டின் முன்பு பெண்ணிடம் 10 பவுன் தாலி செயின் பறிக்கப்பட்டது.
    • போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இளையான்குடி

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள பஞ்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரபாண்டி. இவரது மனைவி நாகவள்ளி (வயது57). இவர் சம்பவத்தன்று வீட்டின் முன்பு நின்றிருந்தார். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 வாலிபர்கள் நின்றிருந்தனர். இதை பார்த்த நாகவள்ளி அவர்களிடம் விசாரித்தார்.

    அப்போது அவர்கள் அந்த பகுதியில் திருட வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து நாகவள்ளி இங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தார். உடனே மர்மநபர்கள் நாகவள்ளியை கீழே தள்ளி அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து நாகவள்ளி கொடுத்த புகாரின்பேரில் சாலை கிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக நகை பறிப்பு, வழிப்பறி, திருட்டு ேபான்றவை அடிக்கடி நடந்து வருகிறது. பூட்டி இருக்கும் வீட்டை ேநாட்டமிடும் கொள்ளை யர்கள் கைவரிசை காட்டுவதும், தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பதும் நடந்து வருகிறது. இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முதல்-அமைச்சர் தொலைநோக்குடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
    • பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வதற்கென நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் என்றார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் ரூ.21.07 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 2 வளர்ச்சித்திட்ட பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தொலை நோக்கு பார்வையுடன் செயல்படுத்தி வருகிறார். அது மட்டுமின்றி, பொது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்திடும் பொருட்டு, அனைத்துப் பகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கென துறை ரீதியான உத்தரவுகளை பிறப்பித்து, அதற்கான நடவடிக்கை களை சிறப்பாக மேற் கொண்டு வருகிறார்கள்.

    அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கி வருவது மட்டுமின்றி, அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்பாடு அடையச் செய்வதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பொதுமக்களின் அடிப்படைத்தே வைகளை நிவர்த்தி செய்வது ஒவ்வொரு மக்கள் பிரதி நிதிகளின் கடமையாகும். ஆகவே, தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் தங்களது கிராமங்களின் அடிப்படை கூடுதல் தேவைகள் குறித்து, எடுத்துரைத்து, அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை பொது மக்கள் மேற்கொள்ள வேண்டும். அதில் தகுதியான கோரிக்கைகள் மீது உடன் நடவடிக்கைகள் மேற்கொண்டு அதற்கான பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்குமார், சத்யன் மேலவண்ணாயிரிப்பு ஊராட்சி மன்றத்தலைவர் ஜோதி, ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் பழனிச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் சின்னம்மாள், உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரை அரசு பள்ளியில் தூய்மை விழிப்புணர்வு நாடகம் நடந்தது.
    • குப்பைகளை தரம் பிரித்தல், பிளாஸ்டிக்கின் தீமைகள், டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை பற்றிய நாடகம் நடத்தப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, கமிஷனர் கண்ணன் தலைமையில் சென்னை வெங்கடாசலபதி நாடக சபா குழுவினர்களால் எனது குப்பை, எனது பொறுப்பு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குப்பைகளை தரம் பிரித்தல், பிளாஸ்டிக்கின் தீமைகள், டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை பற்றிய விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. நகராட்சி துணைத்தலைவர் பாலசுந்தரம், தலைமை யாசிரியர் பேப்லிட், துப்புரவு ஆய்வாளர் பாண்டி செல்வம் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். தமிழாசிரியை தேவி நன்றி கூறினார்.

    • போதை பொருள் கள்ள சாராய எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
    • மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    சிங்கம்புணரி

    சிங்கம்புணரி பேருந்து நிலையத்தில் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு காவல்துறை சார்பில் போலி மதுபானம் மற்றும் போதை பொருட்கள், கள்ளச் சாரா யத்திற்கு எதிரான விழிப் புணர்வு பிரசார ஊர்வலம் நடைபெற்றது.

    இதில் சிங்கம்புணரி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ- மாணவி கள் பங்கேற்றனர். இந்த போதை பொருள் விழிப் புணர்வு ஊர்வலத்தை சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி போதை பொருட் களை தமிழ் நாட்டில் வேரறுக்க மாணவ- மாணவிகளிடம் உறுதி மொழி எடுத்து விழிப்புணர்வு ஊர் வலம் நடைபெற்றது.

    ×