சித்ராயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மானாமதுரையில் சித்ராயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ராஜமாணிக்கம் மற்றும் பலர் செய்திருந்தனர்.
சித்ராயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Published on

மானாமதுரை

மானாமதுரை கொடிக்கால் தெருவில் உள்ள சித்ராயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் அருகே யாகசாலை அமைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. 2-ம் கால பூஜை நிறைவடைந்த நிலையில் சித்ராயி அம்மன் மூலவர் விமானக்கலசத்தின் மீதும், பரிவார தெய்வங்களுக்கும் ராஜேஷ் பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ராஜமாணிக்கம் மற்றும் பலர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com