என் மலர்
உள்ளூர் செய்திகள்

முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் நடந்தது.
ஆனி திருமஞ்சன தேரோட்டம்
- மீனாட்சி சொக்கநாதர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் நடந்தது.
- திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்த சென்றனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே முறையூரில் மீனாட்சி சொக்கநாதர் கோவில் பழமையான கோவிலாகும். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சுமார் 800 ஆண்டுகள் பழமையான இந்த மீனாட்சி சொக்கநாதர் கோவில் இந்த பகுதியில் பிரசித்தி பெற்றதாகும்.
மதுரை அன்னை மீனாட்சி கோவிலுக்கு அடுத்தபடியாக போற்றப்படும் இந்த கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த கோவிலில் கடந்த ஜூன் 23-ந் தேதி ஆனி மாத திருமஞ்சன திருவிழா விற்கான காப்பு கட்டுதல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை தொடர்ந்து தினமும் சுவாமி அம்பாள் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். 8-ம் நாளில் மீனாட்சி சொக்கநாதருக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.
அதை தொடர்ந்து திரு விழாவின் சிகர நிகழ்ச்சி யான தேரோட்டம் விமரிசையாக இன்று நடந்தது. இதையொட்டி முதல் தேரில் விநாயகரும், 2-வது தேரில் முருகனும், 3-வது தேரில் சண்டி கேசுவரரும், பெரிய தேரில் பிரியாவிடை உடனான சொக்கநாதரும், 2-வது பெரிய தேரில் அன்னை மீனாட்சி அம்மனும் எழுந்தருளினார்கள்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், ஊர் அம்பலகாரர் விஸ்வ நாதன், தேவஸ்தான கண்கா ணிப்பாளர் தன்னாயிரம், கௌரவ கண்காணிப்பாளர் மாணிக்கம், பெரிய சாமியாடி சொக்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்த சென்றனர்.






