என் மலர்

  நீங்கள் தேடியது "இருதய ஆண்டவர்"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
  • நற்கருணை நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

  மானாமதுரை அருகே உள்ளது இடைக்காட்டூர். இங்கு புகழ்பெற்ற இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. தமிழக அரசால் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். மேலும் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட முக்கிய விழாக்களில் இங்கு சிறப்பு திருப்பலி நடைபெறும். அன்றைய தினங்களில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் இங்கு வந்து திருப்பலி நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

  தமிழகத்திலேயே ஏசுநாதர் தனது இடது பக்கத்தில் இருதயத்தை காண்பித்தப்படி உள்ள ஒரே ஆலயம் இந்த ஆலயம்தான். இங்கு ஆண்டுதோறும் ஜூலை மாதம் முதல் 10 நாட்கள் வரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த விழா நடைபெறும் தினங்களில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பங்குத்தந்தைகள் கலந்து கொண்டு ஏசுநாதரின் வாழ்க்கை வரலாறு குறித்து எடுத்துரைப்பார்கள்.

  129-ம் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் இருதய ஆண்டவர் தேர் பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். இன்று 10-ம் நாள் நிகழ்ச்சியாக நற்கருணை நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை இருதய ஆண்டவர் திருத்தல அருட்பணியாளர் இம்மானுவேல்தாசன் தலைமையில் இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செல்ஸ் இளைஞர் பேரவை உள்ளிட்ட பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 7-ந் தேதி தேர்பவனி நடக்கிறது.
  • 8-ந் தேதி நற்கருணை விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

  மானாமதுரை அருகேயுள்ள இடைக்காட்டூரில் உலக புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. திருவிழா தொடக்கமாக பங்கு இறைமக்கள் திரு இருதய ஆண்டவர் உருவம் தாங்கிய கொடியை ஊர்வலமாக ஆலயத்துக்கு கொண்டு வந்து ஆலயத்தின் அருட்பணியாளர் இமானுவேல்தாசன் உள்ளிட்ட அருட்பணியாளர்களிடம் வழங்கினர். அதைத்தொடர்ந்து மதுரை ஞானஒளிபுரம் பங்குத்தந்தை ஜேம்ஸ் தலைமையில் மாலை 6.30 மணிக்கு ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

  சிவகங்கை வியானி நிலைய இயக்குனர் அருள்தந்தை அமலன், எட்வர்ட், கேரளாவை சேர்ந்த அருட்பணியாளர் ஜெரோம், சவேரியார்பட்டினம் பங்குந்தந்தை புஷ்பராஜ் கொடியேற்ற, திரு இருதய ஆண்டவர் ஆலய அருட்பணியாளர் இமானுவேல்தாசன் உள்ளிட்டோர் கொடியேற்ற திருப்பலி நிறைவேற்றினர்.

  இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கத்தினர், பங்கு இறைமக்கள் உள்ளிட்டோர் கொடியேற்றத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து வருகிற 8-ந் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவின்போது தினமும் பல்வேறு பங்கு இறை மக்கள் சார்பில் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் வெவ்வேறு தலைப்புகளில் திருப்பலி நிறைவேற்றப்படும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 7-ந் தேதி இரவு திரு இருதய ஆண்டவர் சொரூபம் தாங்கிய மின்விளக்கு ரத பவனி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை சிவகங்கை மறை மாவட்ட (பொறுப்பு) ஆயர் ஸ்டீபன் அந்தோணி திருவிழா திருப்பலியும், மாலையில் முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம் திருவிழா நிறைவு திருப்பலியும் நிறைவேற்றுகின்றனர்.

  8-ந் தேதி நற்கருணை விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

  திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அருட்பணியாளர் அ.இமானுவேல்தாசன், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கத்தினர், பங்கு இறை மக்கள், மரியின் ஊழியர் சபை சகோதரிகள் செய்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்த திருவிழா 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
  • 16-ந்தேதி திருஇருதய ஆண்டவர் திருப்பவனி நடக்கிறது.

  நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள திருஇருதய ஆண்டவர் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னாள் பிஷப் ஜூடு பால்ராஜ் பெருவிழா கொடியேற்றி திருப்பலி நடத்தினார். தொடர்ந்து நற்கருணை நடந்தது. இதில் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

  இந்த திருவிழா 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருஇருதய ஆண்டவர் திருப்பவனி நடக்கிறது. 17-ந்தேதி கூட்டு திருப்பலி, புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் அந்தோணி சாமி கலந்து கொள்கிறார். 18-ந்தேதி காலை 10 மணிக்கு கொடியிறக்கத்துடன் பெருவிழா நிறைவு பெறுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புனித இருதய ஆண்டவர் ஆலய வளாகத்திலிருந்து துவங்கிய சப்பரம் முக்கிய வீதிகள் வழியே நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
  நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த களத்திடல்கரை கிராமத்தில் பழமை வாய்ந்த திருஇருதயஆண்டவர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டுப்பெரு விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய திருத்தேர் பவனி நடை பெற்றது. இதனை முன்னிட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் இருதயஆண்டவர், மிக்கேல் அதிதூதர், தேவமாதா ஆகியோர் எழுந்தருளினர். முன்னதாக, ஆலய பங்குத்தந்தை சவரிமுத்து தலைமையில் நவநாள், ஜெபம் உள்ளிட்ட சிறப்புத்திருப்பலியை செய்துவைத்து சப்பரத்தை புனிதம் செய்து துவக்கி வைத்தார்.

  ஆலய வளாகத்திலிருந்து துவங்கிய சப்பரம் முக்கிய வீதிகள் வழியே நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
  ×