என் மலர்
சிவகங்கை
ராஜேந்திர பாலாஜி குற்றமற்றவர் என நிரூபித்து விரைவில் வருவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:
வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் 292-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிவகங்கையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அதன் பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது :-
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராஜேந்திர பாலாஜி எங்களின் தோழமை கட்சியில் உள்ள முக்கியமான தலைவர். அவரை பா.ஜ.க. கொண்டு போய் ஒளித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. விரைவில் குற்றமற்றவர் என நிரூபித்து அவர் வருவார். அதுவரை காத்திருக்க வேண்டும்.
பாரத பிரதமருக்கு தமிழக மக்கள் மீது அன்பு, பாசம் குறையாமல் இருந்து வருகிறது. தமிழக மாணவர்களுக்கு 1,652 மருத்துவ சீட் கூடுதலாக பிரதமர் கொடுத்துள்ளார். தமிழகத்தில் மருத்துவ இடங்கள் தற்போது 2 மடங்காக அதிகரித்துள்ளது.
இப்போது தி.மு.க. புரிந்து கொண்டு விட்டது. இப்போது உண்மையை பேசுகிறார்கள். அதை பா.ஜ.க. வரவேற்கிறது. வேலு நாச்சியார் சிலையை நாடாளுமன்றத்தில் வைக்க வேண்டும், பாடப்புத்தகத்தில் அவரை பற்றிய பாடம் இடம் பெற வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை விவகாரம் சட்டபூர்வமான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் யாரும் உணர்ச்சி வசப்பட வேண்டாம்.
டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான காப்பீட்டு தொகை அவரவர் வங்கி கணக்குகளுக்கு வரத்தொடங்கியுள்ளது. தமிழகத்திற்கான வெள்ள நிவாரண தொகை உரிய முறையில் கணக்கிட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோவில் மண்டல பூஜையையொட்டி முள்படுக்கை மீது படுத்து அருள் வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை :
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது லாடனேந்தல். இங்குள்ள பிரசித்தி பெற்ற பூங்காவனம் முத்துமாரியம்மன் கோவில் 45வது மண்டல பூஜை நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதையொட்டி கோயில் முன்பு முள்படுக்கை ஒன்று தயார் செய்யப்பட்டிருந்தது. வழக்கமான பூஜைகள் முடிந்த பின்னர் அந்த கோவிலின் நிர்வாகியான நாகராணி அம்மையார் திடீரென ஆவேசமாக நடனமாடியபடி முள்படுக்கை இருந்த பகுதிக்கு வந்தார். உடனடியாக அங்கிருந்த பக்தர்கள் அந்த மூதாட்டியை முள்படுக்கை மீது நிற்க வைத்தனர்.
இதையடுதது சாமி வந்து ஆடிய நாகராணி அம்மையார் பக்தர்களுக்கு அருள் வாக்கு சொன்னார். பின்னர் முள்படுக்கையில் படுத்தபடி இருந்த அவரை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வணங்கி சென்றனர்.
திருப்பத்தூரில் இரவில் பெய்த பலத்த மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட் டம் திருப்பத்தூர் தாலுகாவை சுற்றியுள்ள நெற்குப்பை, வேலங்குடி, கொன்னத்தான் பட்டி, ஆ.தெக்கூர், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று ஒரே இரவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
கனமழையின் காரணமாக இந்த பகுதிகளில் இருந்து வரும் கண்மாய்களின் கலிங்கு பாதைகளில் இருந்து வெளியேறும் அதிகப்படியான உபரி நீரினால் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெற்பயிர்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் இருந்து வருகிறது.
இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு பருவ மழை குறித்த நேரத்தில் பெய்த காரணத்தினால் நாங்கள் நெற்பயிர்களை நடவு செய்து அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்து வந்தோம்.
ஆனால் நேற்று இரவு திடீரென கொட்டி தீர்த்த கன மழையினால் எங்கள் பயிர்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி நாசம் அடைந்துள்ளது.
எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையீடு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறினர்.
இது ஒருபுறமிருக்க பல ஆண்டுகளாக வரத்து கால்வாய்களில் தண்ணீர் வராமல் இருந்த நிலையில் தற்சமயம் அதிகப்படியான தண்ணீர் வருவதை பார்த்த கிராம மக்கள் கலிங்கு, மடை போன்ற பகுதிகளில் கொசுவலை, பரி, வீச்சுவலை போன்றவற்றினால் கெண்டை, கெளுத்தி, அயிரை போன்ற மீன்களை பிடிக்கும் வேளையிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தடையை மீறி நடந்த மஞ்சுவிரட்டில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஊர்குளத்தான்பட்டி கிராமத்தில் வெள்ளி மஞ்சு விரட்டு நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. ஆயிரக்கணக்கான பொதுமக்களும், நூற்றுக்கணக்கான மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
வீரர்களும், இளைஞர்களும் போட்டி போட்டு காளைகளை விரட்டி பிடித்தனர். இதில் பல காளைகள் காளையர்களை மிரட்டும் விதத்தில் பிடிபடாமல் சென்றது. காளைகள் முட்டியதில் 6-க்கும் மேற்பட்டோர் லேசான காயத்துடன் திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற் றனர். 3 பேர் மேல் சிகிச் சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆண்டுதோறும் மார்கழி மாதம் வெள்ளிக்கிழமை நடத்தப்படும் இந்த வெள்ளி மஞ்சுவிரட்டு, இந்த ஆண்டு ஊர்குளத்தான்பட்டி இளைஞர்கள் பழனிக்கு பாத யாத்திரை செல்வதால் ஒருவாரம் முன்னதாகவே நடத்தப்பட்டது.
முன்னதாக முனியன் கோவில், கருப்பர் கோவில் ஆகிய கிராம தெய்வங்களை வழிபாடு செய்துவிட்டு ஊர் பொதுமக்கள் பட் டெடுத்து மஞ்சுவிரட்டு தொழுவிற்கு சென்றனர். அங்கு வழிபாடு நடத்திய பின்னர் ஊர்பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து தொழுவில் மஞ்சு விரட்டு நடத்தி வெற்றி பெற்ற காளைகள் மற்றும் காளையர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
17 வயது சிறுமியை குளிக்கும்பொழுது புகைப்படம் எடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்த வரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:
பெரம்பலூர் மாவட்டம் பெண்ண கோணம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது24). இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அந்த சிறுமி படித்து முடித்ததும் திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில் அந்த சிறுமியின் தாய் சிங்கப்பூர் நாட்டிற்கு வீட்டு வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் அந்த சிறுமி தன் தம்பியுடன் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அப்போது பால்ராஜ் அவருடைய வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றாராம். ஒருமுறை அந்த சிறுமி குளிக்கும்போது அவருக்கு தெரியாமல் படம் எடுத்து வைத்துக் கொண்டாராம்.
அதை காட்டி பலமுறை அவரை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இந்தநிலையில் அந்தப்படத்தை வெளியிடாமல் இருப்பதற்கு ரூ.10 லட்சம் தர வேண்டும் என்று கேட்டு மிரட்டி உள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி காரைக்குடியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் கடந்த அக்டோபர் மாதம் அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அறிந்த பால்ராஜ் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையில் போலீஸ் படை அமைக்கப்பட்டது.
இதற்கிடையில் தலைமறைவான பால்ராஜ் பெரம்பலூரில் ஒரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த வழக்கில் பிடிபட்டார். தகவல் அறிந்ததும் காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையில் போலீசார் அவரை பெரம்பலூரில் இருந்து கைது செய்து அழைத்து வந்தனர்.
கைது செய்யப்பட்ட பால்ராஜை 10 நாள் காவலில் வைக்க போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாபுலால் உத்தரவிட்டார்.

சிவகங்கை மாவட்டத்தில் 3-ந் தேதி முதல் 15-ல் இருந்து 18 வயது வரை உள்ளவர்களுக்கு பள்ளிகளிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்க அரசின் அறிவுறுத்தலின்படி தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
இதில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேி முதல் டிசம்பர் மாதம் 30-ந் தேதி வரை மொத்தம் 14,79,592 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. இதில் முதல் தவணை தடுப்பூசிகள் 8,78,901 பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசிகள் 6,00,691 பேருக்கும் செலுத்தப்பட்டு உள்ளது.
தற்போது பிரதமரின் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் வருகிற ஜனவரி மாதம் 3-ந்தேதி முதல் 15-ல் இருந்து 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட உள்ளது.
சென்னையில் தமிழக முதல்-அமைச்சர் முகாமை தொடங்கி வைக்கிறார்.
இதனைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்திலும் குழந்தை களுக்கு கொரானா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட உள்ளது. இந்த பணியை சிவகங்கை மாவட்ட பொது சுகாதாரத்துறையும் கல்வித்துறையும் இணைந்து நடத்து கின்றன. பள்ளி வளாகத்திலேயே மருத்துவக்குழுக்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்பார்வையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துகின்றனர்.
எனவே, பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன் படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொரோனா, ஒமைக்ரான் நோய்த்தொற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சிங்கம்புணரி அருகே பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கம்புணரி:
சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிருங்காகோட்டை பகுதியை சேர்ந்த முத்துசாமி மனைவி சாந்தா (வயது 42). இவர் தனது இருசக்கர வாகனத்தில் தனியாக சிங்கம் புணரியில் நடைபெற்ற வார சந்தைக்கு சென்று காய்கறிகள் வாங்கி கொண்டு ஊருக்கு சென்றுள்ளார். அப்போது கிருங்கா கோட்டை யாதவபுரம் அருகே சாந்தாவின் இருசக்கர வாகனம் பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் சாந்தா அணிந்து இருந்த 7 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு சென்று விட்டார். இது குறித்து சாந்தா கொடுத்த புகாரின் அடிப்படையில் சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டையூரில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரமக்குடி, சாலைக்கிராமம் செல்லும் பஸ்கள், கதிர் அறுக்கும் எந்திரம், லாரிகள் செல்ல முடியாமல் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.
இளையான்குடி:
இளையான்குடி அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 5 தள்ளுவண்டிகளில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரமக்குடி, சாலைக்கிராமம் செல்லும் பஸ்கள், கதிர் அறுக்கும் எந்திரம், லாரிகள் செல்ல முடியாமல் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.
அரசு மற்றும் தனியார் பஸ் ஓட்டுனர்கள் தங்களது மேலாளர்களுக்கு தகவல் கூறி இளையான்குடி காவல் துறைக்கு புகார் செய்தனர். தகவல் அறிந்த இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி விவரங்கள் கேட்டு சமாதானப்படுத்தி எச்சரித்து அனுப்பி வைத்தார்.
காவிரி கூட்டுக் குடிநீர் 2 நாட்களுக்கு ஒருமுறை வருவதால் தண்ணீர் பிடிப்பதில் இரு பகுதிகளை சேர்ந்த பெண்கள் இடையே தகராறு ஏற்பட்டு யார் முதலில் தண்ணீர் பிடிப்பது என சண்டையிட்டு, ஒரு பகுதியை சேர்ந்த பெண்களை தண்ணீர் பிடிக்க விடாமல் தடுத்ததாக கூறி பெண்கள் மறியலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதில் மறியல் செய்தால் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தண்டிக்கப்படுவீர்கள் என இன்ஸ்பெக்டர் எச்சரித்து அனுப்பினார். காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை நடந்துள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கற்படை அய்யனார் வயல் கிராமத்தில் சிலை உடைய அய்யனார் கோவில் உள்ளது. சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு குல தெய்வமாக இந்த கோவில் இருந்து வருகிறது. எப்பொழுதும் சிவாச்சாரியார்கள் கோவிலில் இருப்பார்கள்.
தற்போது மார்கழி மாதம் என்பதால் அதிகாலை பூஜை மற்றும் மாலை பூஜை நடைபெற்று வருகிறது. நேற்று வழக்கம் போல் பூஜைகளை சிவாச்சாரியர்கள் நடத்தினார்கள். அதன் பிறகு கோவில் கதவை அடைத்து விட்டு சென்றனர்.
இன்று காலை சிவாச்சாரியார்கள் கோவிலை திறந்தபோது நாணயங்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல்கள் உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதனை கண்ட சிவாச்சாரியர்கள் அருகில் உள்ள கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசிலும் புகார் செய்யப்பட்டது. தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் ரமேஷ், ஆய்வாளர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா சேதப்படுத்தப்பட்டு இருந்தது அப்போது தெரிய வந்தது. இருப்பினும் அதில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல் பொய்யாமொழி இடையங்காளி கோவில், தாழையூர் முத்துப் பெரியநாயகி கோவில், இரவுசேரி பத்திரகாளி கோவில், பெரியகாரை நாச்சியம்மன் கோவில் என பல கோவில்களில் உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கொள்ளையர்கள் முதலில் கண்காணிப்பு கேமிராவை சேதப்படுத்தி விட்டு பின்பு உண்டியலை உடைத்துள்ளனர்.
ஒரே முறையில் கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பதால் இதில் ஈடுபட்டவர்கள் ஒரே நபர்களாக இருக்கக்கூடும் என போலீசார் கருதுகின்றனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக வேலாயுதபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலைவாய்ப்பு முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. இதில் பங்கேற்பவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொள்ள வேண்டும்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வேலைவாய்ப்பு வெள்ளி என்ற தலைப்பின் கீழ் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வந்தது.
கடந்த சில மாதங்களாக கொரோனா நோய் தொற்றின் காரணமாக இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பெருந்தொற்று தாக்கம் குறைந்து வருவதால் தமிழக அரசு வேலை வாய்ப்பு முகாம்கள் நேரடியாக நடத்துவதற்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து வருகிற 31-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். வேலைநாடுநர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெறலாம்.
மேலும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்து பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவர்களுக்கு உதவித் தொகைக்கான விண்ணப்பமும் வழங்கப்படுகிறது.
எனவே விருப்பம் உள்ள 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்த இளைஞர்கள் கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. இதில் பங்கேற்பவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேவகோட்டை அருகே தனியார் மில் வேன் விபத்துக்குள்ளானத்தில் 14 பெண்கள் படுகாயமடைந்தனர்.
தேவகோட்டை:
தேவகோட்டை அருகே ஆறாவயல் கிராமத்தில் உள்ள தனியார் நூற் பாலையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை அந்த நிறுவனம் வேன் மற்றும் கார்களில் அழைத்து வந்துள்ளது.
இந்தநிலையில் காளையார்கோவில் கொல்லங்குடி பையூர் பகுதிகளைச் சேர்ந்த 14 பெண்கள் உள்பட 15 பேர் நேற்று பணி முடிந்து இரவு வீடுகளுக்கு வேனில் சென்றனர். அந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து தேவகோட்டை ஜீவா நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கீழே பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் வந்தவர்கள் காயமடைந்தனர். அவர்கள் முதலுதவி சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஒரு ஆண் உட்பட 9 பெண்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவித்து தக்க நிவாரணம் பெறலாம்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை )காலை 10.30 மணி அளவில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலை மையில் நடைபெறுகிறது. மாவட்டத்தின் அனைத்து துறை உயர் அதிகாரிகளும் பங்குபெறும் இந்த கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவித்து தக்க நிவாரணம் பெறலாம். இந்த தகவலை கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.