என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி- பள்ளிகளிலேயே செலுத்த நடவடிக்கை

    சிவகங்கை மாவட்டத்தில் 3-ந் தேதி முதல் 15-ல் இருந்து 18 வயது வரை உள்ளவர்களுக்கு பள்ளிகளிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்க அரசின் அறிவுறுத்தலின்படி தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

    இதில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேி முதல் டிசம்பர் மாதம் 30-ந் தேதி வரை மொத்தம் 14,79,592 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. இதில் முதல் தவணை தடுப்பூசிகள் 8,78,901 பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசிகள் 6,00,691 பேருக்கும் செலுத்தப்பட்டு உள்ளது.

    தற்போது பிரதமரின் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் வருகிற ஜனவரி மாதம் 3-ந்தேதி முதல் 15-ல் இருந்து 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட உள்ளது.

    சென்னையில் தமிழக முதல்-அமைச்சர் முகாமை தொடங்கி வைக்கிறார்.

    இதனைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்திலும் குழந்தை களுக்கு கொரானா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட உள்ளது. இந்த பணியை சிவகங்கை மாவட்ட பொது சுகாதாரத்துறையும் கல்வித்துறையும் இணைந்து நடத்து கின்றன. பள்ளி வளாகத்திலேயே மருத்துவக்குழுக்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்பார்வையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துகின்றனர்.

    எனவே, பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன் படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொரோனா, ஒமைக்ரான் நோய்த்தொற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×