என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை
தேவகோட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை நடந்துள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கற்படை அய்யனார் வயல் கிராமத்தில் சிலை உடைய அய்யனார் கோவில் உள்ளது. சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு குல தெய்வமாக இந்த கோவில் இருந்து வருகிறது. எப்பொழுதும் சிவாச்சாரியார்கள் கோவிலில் இருப்பார்கள்.
தற்போது மார்கழி மாதம் என்பதால் அதிகாலை பூஜை மற்றும் மாலை பூஜை நடைபெற்று வருகிறது. நேற்று வழக்கம் போல் பூஜைகளை சிவாச்சாரியர்கள் நடத்தினார்கள். அதன் பிறகு கோவில் கதவை அடைத்து விட்டு சென்றனர்.
இன்று காலை சிவாச்சாரியார்கள் கோவிலை திறந்தபோது நாணயங்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல்கள் உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதனை கண்ட சிவாச்சாரியர்கள் அருகில் உள்ள கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசிலும் புகார் செய்யப்பட்டது. தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் ரமேஷ், ஆய்வாளர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா சேதப்படுத்தப்பட்டு இருந்தது அப்போது தெரிய வந்தது. இருப்பினும் அதில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல் பொய்யாமொழி இடையங்காளி கோவில், தாழையூர் முத்துப் பெரியநாயகி கோவில், இரவுசேரி பத்திரகாளி கோவில், பெரியகாரை நாச்சியம்மன் கோவில் என பல கோவில்களில் உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கொள்ளையர்கள் முதலில் கண்காணிப்பு கேமிராவை சேதப்படுத்தி விட்டு பின்பு உண்டியலை உடைத்துள்ளனர்.
ஒரே முறையில் கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பதால் இதில் ஈடுபட்டவர்கள் ஒரே நபர்களாக இருக்கக்கூடும் என போலீசார் கருதுகின்றனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக வேலாயுதபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story