search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivagangai Accident"

    • திருப்புவனத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தினசரி இரு முறை 44 டவுன் பஸ்கள் மூலம் மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து இரவு இடைக்காட்டூர் கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டது.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூரில் நிலைதடுமாறிய பஸ் வீட்டின் சுவற்றில் மோதியதில் 8 பேர் காயமடைந்தனர்.

    அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்டம் சார்பில் திருப்புவனத்தில் கிளை பணிமனை இயங்கி வருகிறது. திருப்புவனத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தினசரி இரு முறை 44 டவுன் பஸ்கள் மூலம் மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது.

    பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து இரவு இடைக்காட்டூர் கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. உசிலம்பட்டி காசிமாயன் (41) பஸ்சை ஓட்டினார். திருப்புவனத்தில் பயணிகளை இறக்கி விட்டு மீதமுள்ள 15 பயணிகளுடன் கிளம்பிய பஸ், புதூரில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வீட்டின் சுவற்றில் மோதி நின்றது.

    இந்த விபத்தில் பஸ் பயணிகள் 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் மீட்கப்பட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். மேலும் இந்த விபத்து குறித்து திருப்புவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மாங்குடி எம்.எல்.ஏ., தாசில்தார் மாணிக்க வாசகம் மற்றும் டி.எஸ்.பி. ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
    • விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் 2 பெண்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த கழனிவாசல் சூரங்குடி பைபாஸ் சாலையில் வசிப்பவர் ரீகன் (வயது30) தனியார் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி ரூத். இவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இதையொட்டி ரூத்தின் உறவினர்கள் 26 பேர் ஒரு வேனில் கழனி வாசல் நோக்கி வந்தனர். அவர்கள் வந்த வேன் காரைக்குடியை அடுத்த திருச்சி-ராமேசுவரம் சாலையில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகம் அருகே வந்தபோது சிமெண்டு ஏற்றி வந்த லாரி நிறுத்தப்பட்டு இருந்தது. அதன் மீது திடீரென வேன் மோதியது.

    இதில் வேனில் பயணம் செய்த 26 பேர் படுகாயம் அடைந்தனர். தவப்பிரியா (22) மணிமேகலை (55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இந்த விபத்தில் ஒரு பெண்ணின் கை துண்டானது. ஒரு குழந்தை உள்பட 3 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மாங்குடி எம்.எல்.ஏ., தாசில்தார் மாணிக்க வாசகம் மற்றும் டி.எஸ்.பி. ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் உறவினரை இழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் 2 பெண்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×