என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • கணவன்-மனைவி இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
    • நாகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் ராமச்சந்திரனை ஒரு அறையில் தள்ளி பூட்ட முயன்றனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோவிலூரை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 55), கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் ராக்கம்மாள் உள்பட 2 மகள்கள் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராக்கம்மாளுக்கும், கோட்டையூர் அருகே உள்ள அழகாபுரியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராமச்சந்திரன் (34) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது நாகப்பன் மகள் வீட்டுக்கு சென்று சமரசம் செய்து வைப்பது வழக்கம். ஆனாலும் கணவன்-மனைவி இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ராக்கம்மாளுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். சம்பவத்தன்று ராமச்சந்திரன் மனைவியை பார்க்க மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

    அப்போது கணவன்-மனைவி இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டில் இருந்த நாகப்பன், மருமகனை சமரசம் செய்ய முயன்றார். அப்போது வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து நாகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் ராமச்சந்திரனை ஒரு அறையில் தள்ளி பூட்ட முயன்றனர். இதில் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் அந்த அறையில் இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து மாமனார் நாகப்பன் மீது சுட்டார். இதில் அவரது கழுத்துக்கு கீழ் குண்டு பாய்ந்தது.

    படுகாயம் அடைந்த அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக குன்றத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் தேவகி வழக்குப்பதிவு செய்து மாமனாரை துப்பாக்கியால் சுட்ட ராமச்சந்திரனை தேடி வருகின்றனர். குடும்ப தகராறில் மாமனாரை மருமகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இளையான்குடி வேதாந்த மடத்தில் குருபூஜை விழா நடந்தது.
    • இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சாதுக்கள் பங்கேற்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள வேதாந்த மடத்தில் சிவானந்த ஞான தேசிக சுவாமிகளின் 49-வது ஆண்டு நிறைவு குருபூஜை விழா நடந்தது. இளையான்குடி வேதாந்த மடத்தை தோற்றுவித்த சிவானந்த ஞான தேசிக சுவாமிகளின் ஜீவ சமாதி இங்கு உள்ளது.

    இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சாதுக்கள் பங்கேற்றனர். சிவானந்த ஞான தேசிக சுவாமிகளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், சொர்ண அபிஷேகம் உட்பட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இளையான்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்றனர்.

    • சுப்பையா அம்பலம் பள்ளியில் ஓசோன் தின விழா நடந்தது.
    • பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    காரைக்குடி பாரிநகர் சுப்பையா அம்பலம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் ஓசோன் தினம் மற்றும் தாத்தா -பாட்டி தினம் நடைபெற்றது. தாளாளர் சுப.துரைராஜ் தலைமை தாங்கினார். தலைமை செயல் அதிகாரி ராஜேஸ்வரி ஜெகதீசன் முன்னிலை வகித்தார். ஓசோன் தின விழாவில் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்கள் மூலம் மரக்கன்றுகள் பள்ளி வளாகம் மற்றும் விளையாட்டு மைதானத்தில் நடப்பட்டன.

    தாத்தா-பாட்டி தின விழாவில் மாணவர்கள் தங்களது தாத்தா-பாட்டி களுக்கு பாதபூஜை செய்து அன்பையும், மரி யாதையையும் வெளிப்ப டுத்தினார்கள். தாத்தா-பாட்டிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தபட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் தலைமையாசிரியர் ராம சுப்பிரமணியன், பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • அண்ணா பிறந்தநாள் விழா நடந்தது
    • திராவிட கட்சியை தமிழகத்தில் உருவாக்கியவர் அண்ணா.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா அ.தி.மு.க. சார்பில் நடந்தது. இதையொட்டி ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் மாவட்ட அவை தலைவர் ஏ.வி.நாக ராஜன் தலைமையில் மாவட்ட செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர். செந்தில்நாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    விழாவில் பேசிய மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், திராவிட கட்சியை தமிழகத்தில் உருவாக்கியவர் அண்ணா. தமிழகம் மட்டுமல்லாது உலகம் எங்கும் தமிழர்களின் புகழை ஓங்க செய்தவர் அண்ணா. சுயநலம் இல்லாமல் கட்சிக்காகவும், தமிழக மக்களுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதையும் அவர் அர்ப்பணித்தார். அவரின் வழியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் அ.தி.மு.க.வை உயிரினும் மேலாக கட்டிக் காத்தனர்.

    இந்த கட்சியை நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு காப்பாற்ற அண்ணாவின் பிறந்தநாளில் சபதம் ஏற்போம் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ராமலிங்கம், சிவமணி, வடிவேல், நகர செயலாளர் இப்ராஹிம் ஷா, மாவட்ட பேரவை இணைச் செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுரங்க மலைசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • ஊர் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.மாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இடையபட்டி கிராமத்தில் இருந்து வரும் சுரங்க மலை சுவாமி கோவிலில் வருடபிஷேக விழாவை முன்னிட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக பால், தயிர், திருமஞ்சனம் முதலிய 7 பொருட்களைக் கொண்டு பூஜைகள் நடத்தப்பட்டு அதனை தொடர்ந்து பெரிய கோன், சின்ன கோன் வகையறா பங்காளிகளால் பெரிய இடையன், சின்ன இடையன் கண்மாய்களில் இருந்து தீர்த்தங்களை தலையில் சுமந்து கோவில் முன்பாக உள்ள கோபுரத்தில் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேக தண்ணீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து ெகாண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடு களை பெரிய கோன், சின்ன கோன் வகையறா பங்காளிகள் மற்றும் ஊர் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • நகர்மன்ற தலைவர் தயாரிக்கும் சினிமா படபிடிப்பு நடந்தது.
    • இதன் படப்பிடிப்பு சிவகங்கையை சுற்றியுள்ள வேம்பங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடந்து வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை நகர்மன்ற தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான துரைஆனந்த், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. முப்பெரும் விழாவில் சிறந்த நகர்மன்ற தலைவர் என்கிற விருதை பெற்றார்.

    இந்த நிலையில் அவர் ஆன்லைன் சூதாட்டம் குறித்த விழித்தெழு என்கிற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகை சிநேகாவின் கணவர் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பருத்திவீரன் சரவணன், சுஜாதா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிக்கும் இந்த படத்தை தமிழ்ச்செல்வன் இயக்குகிறார்.

    இதன் படப்பிடிப்பு சிவகங்கையை சுற்றியுள்ள வேம்பங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடந்து வருகிறது. 

    • திருப்பத்தூரில் அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி தி.மு.க. சார்பில் திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய தலைவருமான சண்முகவடிவேல் தலைமையில், நகரச் செயலாளர் கார்த்திகேயன் முன்னிலையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    முன்னதாக காந்தி சிலையில் இருந்து பஸ் நிலையம், மதுரை ரோடு வழியாக, பேரணியாக வந்தனர். பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் கோகிலா ராணி நாராயணன், துணைத்தலைவர் கான்முகமது, ஒன்றிய பொருளாளர் கண்ணன், முன்னாள் சேர்மன் சாக்ளா, நகர் துணைத் தலைவர் உதய சண்முகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தமிழ் நம்பி, தொழிலதிபர் பிளாசா சேகர், ஒன்றிய மாணவரணி சோமசுந்தரம், புதூர் கண்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் அபுதாஹிர், சரவணன், பசீர் அகமது, பழக்கடை அஜீஸ், பேச்சாளர் ஷாஜகான், வார்டு பொறுப்பாளர் ஸ்டீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் அசோகன் முன்னிலையில் காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக நடந்து வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    இதில் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஆசை தம்பி, மதுரை மாவட்ட முன்னாள் அரசு வழக்கறிஞர் ஈரோடு சாமி, சிவகங்கை முன்னாள் அரசு வழக்கறிஞர் ராமநாதன், மாவட்ட பேரவை துணை செயலாளர் பாலா, காரைக்குடி திருஞானம், திருப்பத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் சிவா, வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாகராஜன், நகர பொறுப்பாளர் முருகேசன், புதூர் கு.மா.காந்தி, நெற்குப்பை நகர பொறுப்பாளர் கருப்பையா, எஸ்.புதூர் ஒன்றிய பொறு ப்பாளர்கள் செந்தில்குமார், பித்திரை செல்வன், சிங்கம்புணரி ஒன்றிய பொறுப்பாளர் விஜயராஜ், உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடி நகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
    • முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    காரைக்குடி நகராட்சி பகுதியில் உள்ள நல்லையன் ஆசாரி பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்க விழா நடந்தது. நகர் மன்றதலைவர் முத்துதுரை தலைமை தாங்கி காரைக்குடி நகராட்சி ஆரம்பப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி முன்னிலை வகித்தார்.

    நகராட்சி ஆணையாளர் லட்சுமணன், பொறியாளர் கோவிந்தராஜ், நகர்மன்ற துணை தலைவர் குணசேகரன், கவுன்சிலர்கள் கார்த்திகேயன், கண்ணன், நாகராஜன், மைக்கேல், தெய்வானை, கலா, ஹேமலதா, மங்கையர்கரசி, சாந்தி, சித்திக், மனோகரன், மெய்யர், நாச்சம்மை, தனம், ராணி, ராதா, அஞ்சலிதேவி, ரத்தினம், நகர அவை தலைவர் சுப்பையா, முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேசு உள்பட பலர் கலந்து கொண்டனர். கவுன்சிலர் கனகவள்ளி நன்றி கூறினார்.

    • தேவகோட்டை யூனியனில் ரூ.4.29 கோடியில் வளர்ச்சி பணிகள் நடந்தது.
    • இந்த தகவலை தலைவர் பிர்லா கணேசன் தெரிவித்துள்ளார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை யூனியன் சாதாரண கூட்டம் தலைவர் பிர்லா கணேசன் தலைமையில் நடந்தது.

    துணைத் தலைவர் நடராஜன் ராஜாத்தி முன்னிலை வகித்தார். ஆனையாளர் ஸ்ரீதர் வரவேற்றார். கூட்டத்தில் தலைவர் பேசுகையில், அண்ணா திட்டம் மூலம் உடனடி வளர்ச்சி திட்ட பணிகள் தேவைப்படும் 8 ஊராட்சிகளில் ரூ.4.29 கோடியில் பணிகள் தேர்வு செய்யப்பட்டு அவை டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    மேலும் 2 ஊராட்சிகளில் அவசர வளர்ச்சி திட்ட பணிகள் தேர்வு செய்து வருகின்றனர். பொது நிதியிலும் வளர்ச்சி திட்ட பணிகளை செய்து வருகிறோம் என்றார்.

    கவுன்சிலர் ரவி பேசுகையில், கடந்த மாதங்களில் டெண்டர் விடப்பட்ட பணிகளின் தற்போதைய நிலை என்ன? என்று கேட்டார். அதற்கு பொறியாளர் பதிலளிக்கையில், இப்போது தான் ஒவ்வொரு படிகளாக நடைபெற்று வருகிறது என்றார்.கவுன்சிலர் ஜான்சி ராணி பேசுகையில், கிளியூர்- புலியால் ரோடு சமீபத்தில் தான் போடப்பட்டது. அந்தச் சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது. வெற்றிவேல் ஊராட்சிக்குட்பட்ட வாய்வுநேந்தல் பள்ளியில் கழிப்பறை கட்டிடம் சேதமடைந்து உள்ளது. மாணவர்கள் அதனை பயன்படுத்த முடியாமல் வெளியே சென்று வரும் சூழ்நிலை உள்ளது என்றார்.

    இதற்கு பதில் அளித்த யூனியன் தலைவர், சம்பந்தப்பட்ட கிராமத்தில் ஆய்வு செய்து துரித நடவடிக்கை எடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி நன்றி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி காரைக்குடியில் அனைத்து கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
    • தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காரைக்குடி

    பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணித்தனர். நகர செயலாளர் மெய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ கற்பகம், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், நகர்மன்ற உறுப்பினர்கள் குருபாலு, பிரகாஷ், அமுதா, நகர இளைஞரணி செயலாளர் இயல் தாகூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் மாலை அணிவித்தனர்.மாவட்ட பேரவை பாலா, நிர்வாகிகள் திருஞானம், வழக்கறிஞர்கள் ராமனாதன், ஆசைத்தம்பி, தேவகோட்டை ரவிக்குமார், வட்டச் செயலாளர் மகேஷ் உள்பட பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க சார்பில் நகர செயலாளர் குணசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், பொருளாளர் துரைராஜ், நகர்மன்ற கவுன்சிலர்கள் அன்னை மைக்கேல், சொ.கண்ணன், கலா, தெய்வானை இளமாறன், ஹரிதாஸ், கார்த்திகேயன் வட்டச் செயலாளர்கள் விஜயகுமார், ரமேஷ், முகமது கனி, லட்சுமி ராஜ்கணேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    திராவிடர் கழகத்தினர் திராவிட மணி தலைமையில் மரியாதை செலுத்தினர்.தலைமை கழக பேச்சாளர் என்னாரெசு பிராட்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • சிங்கம்புணரி அருகே தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் ெபரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
    • அதற்கு ஒரு மாணவி எழுந்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் முசுண்டப்பட்டி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் ெதாடக்கவிழா நடந்தது.

    இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு கிச்சடி, கேசரி பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து அமைச்சர் பெரியகருப்பன்,கலெக்டர் மதுசூதன்ரெட்டி, அரசு முதன்மை செயலர் அமுதா ஆகியோர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டதுடன் மாணவர்களுடன் உரையாடினர்.

    அரசு முதன்மை செயலர் அமுதா, உணவு எப்படி இருந்தது என்று கேட்டார். அதற்கு ஒரு மாணவி எழுந்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். மாணவி பிரதீஷா பேசுகையில், காலை உணவை சாப்பிட்டால் தான் நன்றாக படிக்க முடியும். நான் மருத்துவராகி உடம்பு

    சரி இல்லாதவர்களை சரிசெய்வேன் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் வானதி, எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் அடைக்கலசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டை அருகே வாகனம் மோதி 2 மாடுகள்- 1 கன்று பலியாயின.
    • இந்த விபத்து குறித்து வேலாயுதபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருமணவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். இந்த கிராமத்தில் உள்ள பெண்கள் பசுமாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் மனைவி லட்சுமி, சோனைமுத்து மனைவி சுப்புலட்சுமி, சந்திரசேகர் மனைவி பாக்கியம் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் நேற்று இரவு மேய்ச்சலுக்கு சென்று வீட்டிற்கு திரும்பிச் சென்றன.

    அப்போது சிவகங்கை-தேவகோட்டை சாலையில் திருமணவயல் பஸ் நிறுத்தம் அருகில் 3 பசுமாடுகள், 1 கன்று மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த 2 பசுமாடுகள், 1 கன்று ஆகியவை சம்பவ இடத்திலேயே பலியானது.

    இதில் காயமடைந்த ஒரு பசுமாடு சாலையில் கிடந்தது. இதனைக்கண்ட கிராம மக்கள் மாட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த பெரியகாரை கால்நடை மருத்துவர் கலா விரைந்து சென்று பொதுமக்கள் துணையுடன் காயமடைந்த மாட்டிற்கு சிகிச்சை அளித்தார்.

    இந்த விபத்து குறித்து வேலாயுதபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடுகள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர். மேலும் அச்சாலையில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×