அண்ணா பிறந்தநாள் விழா

அண்ணா பிறந்தநாள் விழா நடந்தது திராவிட கட்சியை தமிழகத்தில் உருவாக்கியவர் அண்ணா.
அண்ணா பிறந்தநாள் விழா
Published on

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா அ.தி.மு.க. சார்பில் நடந்தது. இதையொட்டி ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் மாவட்ட அவை தலைவர் ஏ.வி.நாக ராஜன் தலைமையில் மாவட்ட செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர். செந்தில்நாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

விழாவில் பேசிய மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், திராவிட கட்சியை தமிழகத்தில் உருவாக்கியவர் அண்ணா. தமிழகம் மட்டுமல்லாது உலகம் எங்கும் தமிழர்களின் புகழை ஓங்க செய்தவர் அண்ணா. சுயநலம் இல்லாமல் கட்சிக்காகவும், தமிழக மக்களுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதையும் அவர் அர்ப்பணித்தார். அவரின் வழியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் அ.தி.மு.க.வை உயிரினும் மேலாக கட்டிக் காத்தனர்.

இந்த கட்சியை நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு காப்பாற்ற அண்ணாவின் பிறந்தநாளில் சபதம் ஏற்போம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ராமலிங்கம், சிவமணி, வடிவேல், நகர செயலாளர் இப்ராஹிம் ஷா, மாவட்ட பேரவை இணைச் செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com