என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுப்பையா அம்பலம் பள்ளியில் ஓசோன் தின விழா
- சுப்பையா அம்பலம் பள்ளியில் ஓசோன் தின விழா நடந்தது.
- பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
காரைக்குடி
காரைக்குடி பாரிநகர் சுப்பையா அம்பலம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் ஓசோன் தினம் மற்றும் தாத்தா -பாட்டி தினம் நடைபெற்றது. தாளாளர் சுப.துரைராஜ் தலைமை தாங்கினார். தலைமை செயல் அதிகாரி ராஜேஸ்வரி ஜெகதீசன் முன்னிலை வகித்தார். ஓசோன் தின விழாவில் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்கள் மூலம் மரக்கன்றுகள் பள்ளி வளாகம் மற்றும் விளையாட்டு மைதானத்தில் நடப்பட்டன.
தாத்தா-பாட்டி தின விழாவில் மாணவர்கள் தங்களது தாத்தா-பாட்டி களுக்கு பாதபூஜை செய்து அன்பையும், மரி யாதையையும் வெளிப்ப டுத்தினார்கள். தாத்தா-பாட்டிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தபட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் தலைமையாசிரியர் ராம சுப்பிரமணியன், பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






