என் மலர்
சிவகங்கை
- இளையான்குடியில் கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி நடந்தது.
- போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் காளிதாசன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஹாஜா நஜ்முதீன், ஐஸ்வர்யா ஆகியோர் செய்திருந்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கு இடையேயான கைப்பந்து போட்டி நடந்தது. ஆண்கள் மற்றும் மகளிருக்கான இருபிரிவிலும் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி அணி முதலிடம் பெற்றது. ஆண்கள் பிரிவில் இளையான்குடி, சாகிர் உசேன் கல்லூரி அணி 2-ம் இடமும், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரி அணி3-ம் இடமும், காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரி அணி 4-ம் இடமும் பெற்றது.
மகளிர் பிரிவில் காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரி அணி 2-ம் இடமும், தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி அணி 3-ம் இடமும், இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி அணி 4-ம் இடமும் பெற்றது. நிறைவு விழாவில் கல்லூரி ஆட்சிக்குழு பொருளாளர் அப்துல் அகமது, ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் சலீம், முதல்வர் அப்பாஸ் மந்திரி, சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா ஆகியோர் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு வழங்கினர். இதில் அழகப்பா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் செல்வம், இணைஒருங்கிணைப்பாளர் அசோக் உள்ளிட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் காளிதாசன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஹாஜா நஜ்முதீன், ஐஸ்வர்யா ஆகியோர் செய்திருந்தனர்.
- 6 -ந் தேதி மகம் நட்சத்திரத்தன்று மலைக்கோவிலில் காவடி செலுத்திய பின் நடந்தே வீடு திரும்புவார்கள்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் பாரம்பரியமிக்க நகரத்தார் காவடிகள் வந்து சேர்ந்தன. 291 சர்க்கரை காவடியுடன் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் இந்த காவடிகள் கடந்த 29-ந்தேதி குன்றக்குடியில் இருந்து 19 நாட்கள் பயணமாக புறப்பட்டு சிங்கம்புணரி வந்தடைந்தது.
நெற்குப்பை, கண்டனுார், காரைக்குடி அரண்மனை பொங்கல், உள்ளிட்ட நகரத்தார்கள் கடந்த 400 ஆண்டுகளாக பாதயாத்திரையாக சென்று பழனி முருகனுக்கு காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தி வருகிறார்கள். அதன்பின் நடந்தே வீடு திரும்புவது இவர்களது தனிச்சிறப்பு.
பிப்ரவரி 4-ந் தேதி தைப்பூச தினத்தன்று பழனி சென்றடைந்து அதன் பின் 6 -ந் தேதி மகம் நட்சத்திரத்தன்று மலைக்கோவிலில் காவடி செலுத்திய பின் நடந்தே வீடு திரும்புவார்கள்
சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோவிலில் நேற்று காலை மகேஸ்வர பூஜை நடந்தது. பக்தர்கள் முன்னிலையில் காவடி சிந்து பாடப்பட்டு காவடிகள் பழனியை நோக்கி புறப்பட்டன. சிங்கம்புணரியில் வணிகர்கள் சார்பில் நகரத்தார்கள் பாதயாத்திரை பக்தர்களுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
- தேவகோட்டையில் உரிய நேரத்தில் அரசு பஸ்கள் இயக்காததால் மாணவ-மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
- மாணவ-மாணவிகள் நிலையை கருத்தில் கொண்டு பள்ளி முடியும் நேரத்தில் அரசு பஸ்களை இயக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சுற்றி உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அரசு பஸ்கள் மூலம் தேவகோட்டையில் உள்ள பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இதற்காக காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வரு கின்றன. மாலையில் பள்ளி முடிந்து தேவகோட்டை பஸ் நிலையத்திற்கு செல்ல 4.30 மணிக்கு '3 ஏ' அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் கடந்த சில வாரங்களாக மாணவ-மாணவிகளை புறக்கணிக்கும் வகையில் குறிப்பிட்ட அரசு பஸ் முன்கூட்டியே 4.15 மணிக்கு சென்றுவிடுவதாக புகார் எழுந்துள்ளது.இதனால் மாணவ-மாணவிகள் பள்ளியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பஸ் நிலையத்திற்கு நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மாணவ-மாணவிகள் நிலையை கருத்தில் கொண்டு பள்ளி முடியும் நேரத்தில் அரசு பஸ்களை இயக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.10.78 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
- அமைச்சர் பெரியகருப்பன் சான்றிதழ் வழங்கினார்
சிவகங்கை
சிவகங்கையில் கூட்டுறவுத்துறை சார்பில் 371 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10.78 கோடி மதிப்பீட்டில் கடன் தள்ளுபடிக்கான சான்று மற்றும் 7 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.30.10 லட்சம் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.
இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களையும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகளையும் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 2022-23-ம் ஆண்டில் 472 பேருக்கு ரூ.14.65 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழு கடன் வழங்கப்பட்டுள்ளது. ேமலும் முதல்-அமைச்சரின் ஆணையின் படி தமிழகத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் அன்றைய தேதியில் நிலுவையில் இருக்கும் மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்ய அரசாணை வெளியி டப்பட்டது.
அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 732 மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 38 ஆயிரத்து 681 உறுப்பினர்களிடம் நிலுவையாக இருந்த ரூ.82.04 கோடி மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
அதற்கான தொடக்க நிகழ்வாக இன்றைய தினம் 371 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.10.78 கோடி மதிப்பீட்டில் கடன் தள்ளுபடிக்கான சான்றுகள் வழங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதை தவிர, 7 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.
அரசின் திட்டங்களின் மூலம் பயன்பெற்று வரும் பெண்கள், திட்டங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தங்களின் வாழ்வா தாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) கோ.ஜினு, மேலாண்மை இயக்குநர் (மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி) ரவிச்சந்திரன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகர் மன்றத் தலைவர் துரைஆனந்த், காரைக்குடி சரகத்துணை பதிவாளர் சீமான், சிவகங்கை துணை பதிவாளர் பாலச்சந்திரன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் பலர் பங்கேற்றனர்.
- தாய்-மகள் கொலை வழக்கு விசாரணை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- கொள்ளையர்கள் வீட்டை தீயிட்டு கொளுத்துவதும் நடந்து வந்தது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த 11-ந் தேதி கொள்ளையர்கள் வீடு புகுந்து தாய்-மகளை கொடூரமாக கொலை செய்து, திருமணத்திற்காக வைத்திருந்த 60 பவுன் தங்க நகைகளை கொள்ளை யடித்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தில் கொலையுண்ட வேலுமதியின் மகன் மூவரசு என்பவரையும் கொள்ளையர்கள் வெட்டி னர். இதில் படுகாயம் அடைந்த சிறுவன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான்.
தாய்-மகள் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் துப்பு துலக்குவதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் சில தடயங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை கொள்ைளயர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.
டி.ஐ.ஜி. துரை ஆலோசனையின்பேரில் விசாரணை அதிகாரியாக தேவகோட்டை டி.எஸ்.பி. கணேஷ் குமார் நியமிக்கப் பட்டார்.
தேவகோட்டை பகுதி களில் இதுவரை சுமார் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் கதவுகள் உடைக்கப்பட்டு விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டும், பொருட்கள் இல்லை என்றால், கொள்ளையர்கள் வீட்டை தீயிட்டு கொளுத்துவதும் நடந்து வந்தது.
இந்த நிலையில் வீட்டில் கொள்ளையடிக்க சென்ற மர்ம நபர்கள் தாய்-மகளை வெட்டி கொலை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இரட்டை கொலை நடந்து 19 நாட்கள் ஆகியும் துப்பு துலங்காதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே காரைக்குடியில் தனியார் இடத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை அகற்றியதால் காரைக்குடி தாசில்தார் மற்றும் தேவகோட்டை டி.எஸ்.பி. கணேஷ்குமார் ஆகியோர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
இரட்டைக் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக செயல்பட்ட கணேஷ்குமார் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதால் இரட்டை கொலை வழக்கு விசாரணை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இரட்டை கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளி களை உடனடியாக கைது செய்யாவிட்டால் கிராம மக்கள் ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.
- கருப்பர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை நாட்டார், நகரத்தார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள செவரக்கோட்டையில் வில்லுகாபுலி கருப்பர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக 2 நாட்கள் கால பூஜைகளாக லட்சுமி, கணபதி, நவக்கிரக ஹோமங்கள், கோ, தன பூஜை போன்ற பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு பூர்ணா குதி தீபாராதனையுடன் கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேக நீர் ஊற்றினர்.
இதில் திரளான பக்தர்கள்கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டார், நகரத்தார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
விழா குழு ஒருங்கிணைப்பு நிர்வாகிகளாக ஊர் அம்பலம் வ.டு. நாச்சியப்பன், நாட்டு கணக்கப்பிள்ளை குமரேசன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் செயல்பட்டனர்.
- மானாமதுரை, திருப்புவனம் இளையான்குடியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
- உதவிப் பேராசிரியர் ஆரிப் ரகுமான் தேசிய கொடி ஏற்றி பேசினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடிபகுதிகளில் 74-வது குடியரசு தின விழா நடந்தது.
மானாமதுரையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழரசி எம்.எல்.ஏ. தேசியக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் மாவட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.ஆர்.பி.முருகேசன், எம்.எல்.ஏ.வின் உதவியாளர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் சக்திவேல் தேசியக்கொடி ஏற்றினார். நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை யூனியன் அலுவலகத்தில் தலைவர் லதா அண்ணாதுரை தேசியக்கொடி ஏற்றினார்.துணைத்தலைவர் முத்துசாமி, கவுன்சிலர்கள் வழக்கறிஞர் அண்ணா துரை, மலைச்சாமி மற்றும் ஆணையாளர், அலுவலர்கள் கொடி வணக்கம் செலுத்தினர்.
திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சேங்கைமாறன் தேசியக் கொடி ஏற்றினார். இதில் செயல் அலுவலர் ஜெயராஜ், துணைத் தலைவர் ரகமத்துல்லாகான் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
இங்குள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் அதன் தலைவர் சேங்கைமாறன் தேசியக்கொடி ஏற்றினார். செயலாளர் கிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரியில் நடந்த குடியரசு தின விழாவுக்கு ஆட்சி குழுத் தலைவர் அகமது ஜலாலுதீன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜபருல்லாகான் முன்னிலை வகித்தார். முதல்வர் அப்பாஸ் மந்திரி வரவேற்றார். உதவிப் பேராசிரியர் ஆரிப் ரகுமான் தேசிய கொடி ஏற்றி பேசினார்.
விழாவில் மாணவ, மாணவிகள், ஆட்சிக் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
துணை முதல்வர் ஜஹாங்கீர் நன்றி கூறினார்.
இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் தலைவர் நஜூமுதீன் தேசிய கொடி ஏற்றினார். செயல் அலுவலர் கோபிநாத், துணைத் தலைவர் இப்ராஹிம் மற்றும் கவுன்சிலர்கள் ஊழியர்கள் பங்கேற்றனர்.
- ராணுவ வீரர் கவுரவிப்பு நிகழ்ச்சி நடந்தது.
- இதில் மாவட்டத்திலேயே ‘‘குப்பை இல்லா தூய்மை பேரூராட்சியாக’’ மாற அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் 74-ஆவது குடியரசு தின விழா நடந்தது. செயல் அலுவலர் வே.கணேசன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் அ.புசலான் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியதுடன், நகரின் தூய்மை குறித்து பேசினார்.
பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பேரூராட்சியாக மாற அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். முன்னாள் ராணுவ வீரர் சூரியகுமாருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. இளநிலை உதவியாளர் சேரலாதன், வரித்தண்டலர் துரைராஜ், கவுன்சிலர்கள் கண்ணன், தனபாக்கியம், சேக்கப்பன், அழகு, அமுதா, நிகார்பானு, சித்ரா, தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு மற்றும் அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் மாவட்டத்திலேயே ''குப்பை இல்லா தூய்மை பேரூராட்சியாக'' மாற அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 54 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை வழக்குபதிவு செய்துள்ளது.
- மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவிஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தெரிவித்தார்.
சிவகங்கை
சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழி லாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று சிவகங்கை மாவட்டத்தில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டத்தின்படி தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று கடைகள் மற்றும் நிறு வனங்கள், உணவு நிறுவ னங்கள்,மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். இந்த தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்க வேண்டு மானால் அவர்களுக்கு வேலைய ளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் சம்பளத்துடன் கூடிய மாற்று விடுப்பு அளிக்க வேண்டும்.
மேற்கண்ட தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு VA என்ற படிவத்திலும், உணவு நிறுவனங்களுக்கு IV EE என்ற படிவத்திலும், மோட்டார். போக்குவரத்து நிறுவனங்களுக்கு XIIA என்ற படிவத்திலும் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தன்று 24 மணி நேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட சிறப்பு விடுமுறை ஆய்வின் போது மேற்கண்ட சட்டவிதிகளை அனுசரிக்காமல் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய வகையில் சிவகங்கை மாவட்டத்தில் 54 நிறுவனங்களில் முரண்பா டுகள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து அந்த சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவிஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தெரிவித்தார்.
- காரைக்குடியில் குடியரசு தின கொண்டாட்டப்பட்டது.
- லெப்டினண்ட் கமாண்டர் பெல்லியப்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
காரைக்குடி
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் குடியரசு தின விழா நடந்தது. துணைவேந்தர் ரவி தேசிய கொடியை ஏற்றிவைத்து தேசிய மாணவர் படை மற்றும் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவுக்கு பள்ளியின் கல்வி இயக்குநர் டாக்டர் ராஜேசுவரி தலைமை தாங்கினார். தலைமை ஒருஙகிணைப்பாளர் சிவகாமி முத்துகருப்பன் வரவேற்றார். அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி பேராசிரியர் வைரவசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடி யேற்றினார். தாளாளர் சத்தியன் வாழ்த்து தெரிவித்தார்.
புதுவயல் வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் குமார் தேசிய கொடியை ஏற்றினார். மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன் தேசிய கொடியை ஏற்றினார். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் உஷாகுமாரி வரவேற்றார்.
சேர்மன் குமரேசன் தலைமை தாங்கினார்.துணை சேர்மன் அருண்குமார் முன்னிலை வகித்தார்.லெப்டினண்ட் கமாண்டர் பெல்லியப்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
காரைக்குடி முத்துப்பட்டினம் சரசுவதி ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியை மீனா கொடியேற்றி பேசினார்.
காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
பொறியாளர் கோவிந்த ராஜ், துணை பொறியாளர் சீமா, நகர்நல அலுவலர் டாக்டர் திவ்யா, கவுன் சிலர்கள், நகராட்சி அலுவலர்கள், சுகா தார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- செவரக்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.
- முதல் மூன்று இடங்களைப் பிடித்த வெற்றியாளர்களுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை விழா குழு சார்பில் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள செல்வரசன் கோட்டை என்ற செவரக்கோட்டையில் 74-ம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு குரு இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் மது, புகையிலை தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதலாம் ஆண்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள், மாணவ மாணவிகள் ஆர்வடன் கலந்து கொண்டனர். இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வெற்றி யாளர் களுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை விழா குழு சார்பில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லல் காவல் ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் குரு இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- ஊராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. மகாத்மா தேசிய ஊரக வளர்ச்சித் திட்டம், பிரதமரின் குடியிருப்பு திட்டம், டெங்கு காய்ச்சல் தடுப்பு, தூய்மை பாரத இயக்கம், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, கிராம ஊராட்சி பொது செலவினம், ஜல் ஜீவன் இயக்கம், சாலை விரிவாக்கம் ஆகிய வளர்ச்சி பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வக்குமார், ஊர் முக்கியஸ்தர் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்ரா, ஊராட்சி உறுப்பினர்கள் பொன்னையா, மகாலட்சுமி, சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.






