search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.10.78 கோடி கடன் தள்ளுபடி
    X

    மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி மற்றும் பலர் உள்ளனர்.

    மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.10.78 கோடி கடன் தள்ளுபடி

    • மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.10.78 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
    • அமைச்சர் பெரியகருப்பன் சான்றிதழ் வழங்கினார்

    சிவகங்கை

    சிவகங்கையில் கூட்டுறவுத்துறை சார்பில் 371 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10.78 கோடி மதிப்பீட்டில் கடன் தள்ளுபடிக்கான சான்று மற்றும் 7 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.30.10 லட்சம் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

    இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களையும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகளையும் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 2022-23-ம் ஆண்டில் 472 பேருக்கு ரூ.14.65 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழு கடன் வழங்கப்பட்டுள்ளது. ேமலும் முதல்-அமைச்சரின் ஆணையின் படி தமிழகத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் அன்றைய தேதியில் நிலுவையில் இருக்கும் மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்ய அரசாணை வெளியி டப்பட்டது.

    அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 732 மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 38 ஆயிரத்து 681 உறுப்பினர்களிடம் நிலுவையாக இருந்த ரூ.82.04 கோடி மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

    அதற்கான தொடக்க நிகழ்வாக இன்றைய தினம் 371 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.10.78 கோடி மதிப்பீட்டில் கடன் தள்ளுபடிக்கான சான்றுகள் வழங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதை தவிர, 7 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

    அரசின் திட்டங்களின் மூலம் பயன்பெற்று வரும் பெண்கள், திட்டங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தங்களின் வாழ்வா தாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) கோ.ஜினு, மேலாண்மை இயக்குநர் (மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி) ரவிச்சந்திரன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகர் மன்றத் தலைவர் துரைஆனந்த், காரைக்குடி சரகத்துணை பதிவாளர் சீமான், சிவகங்கை துணை பதிவாளர் பாலச்சந்திரன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×