என் மலர்tooltip icon

    சேலம்

    • மழையை தொடர்ந்து பனி மூட்டம் நிலவி வருகிறது.
    • ஏற்காட்டில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் காபி தோட்ட தொழிலாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக ஏற்காட்டில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய மழை 6 மணி வரை கனமழையாக கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    பின்னர் நள்ளிரவு 12 மணி வரை சாரல் மழையாக நீடித்தது. மழையை தொடர்ந்து பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடும் குளிரால் ஏற்காட்டில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் காபி தோட்ட தொழிலாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சேலம் புறநகர் மாவட்ட பகுதிகளான தலைவாசல், காடையாம்பட்டி, ஆனைமடுவு உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது. சேலம் மாநகரில் லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 35 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. தலைவாசல் 19, காடையாம்பட்டி 14, ஆனைமடுவு 13, ஆத்தூர் 5.2, மேட்டூர் 44, சங்ககிரி 4.3, கரியகோவில் 4, ஓமலூர் 2, சேலம் 0.3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 101.2 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    • அணையில் இருந்து காவிரியில் 500 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
    • அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று 3 ஆயிரத்து 454 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 2 ஆயிரத்து 794 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரியில் 500 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 51.83 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 52.12 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

    • காடையாம்பட்டி அருகே தும்பிப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டியூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.
    • 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே தும்பிப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டியூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 130 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் காலை உணவு செய்வதற்கான சமையலறை உள்ளது.

    சமையல் பொருட்கள் திருட்டு

    அரசுப் பள்ளி மாணவர்களின் பசி, ஊட்டச்சத்து குறைபாட்டைபோக்கி, கல்வியை ஊக்குவிக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரவா உப்புமா, அரிசி உப்புமா, சேமியா உப்புமா, வெண் பொங்கல், ரவா பொங்கல், கோதுமை ரவா உப்புமா, காய்கறிச் சாம்பார் போன்ற உணவு குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

    இதற்காக பள்ளி சமையல் அறையில் அத்தியாவசிய உணவு பொருட்கள் வாங்கி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மர்ம நபர்கள் சமையல் கூடத்தின் கதவு, ஜன்னல் உள்ளிட்வைகளை இடித்து உள்ளே புகுந்து அங்கு வைத்திருந்த கியாஸ் சிலிண்டர், அரிசி, பருப்பு, முட்டை, மளிகை பொருட்கள் உள்ளிட்ட சமையல் பொருட்கள் அனைத்தையும் திருடி சென்றனர்.

    இன்று காலை உணவு சமையல் செய்வதற்கு எந்த பொருட்களும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று பார்த்தபோது சமையல் அறையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் மர்ம கும்பல் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

    அதிகாரிகள் பேச்சுவார்த்தை

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் தனிகாசலம், காடையாம்பட்டி தாசில்தார் மாதேஸ்வரன், ஓமலூர் தாசில்தார், ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், காடையாம்பட்டி மற்றும் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் ஆகியோர் பள்ளி குழந்தைகளின் பெற்றோரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அதிகாரிகள் கூறுகையில், பள்ளியில் புகுந்து சமையல் பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை கண்டுபிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கு பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும். எனவே பெற்றோர் அமைதி காக்க வேண்டும். குழந்தைகளுக்கு உணவு வழங்க மாற்று ஏற்பாடு செய்யப்படும் என சமாதானப்படுத்தினார்கள். 

    • சேலம் மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் கூட்ட அரங்கில் நடந்தது.
    • மாநகராட்சி வரி வசூலில் பல கோடி முறைகேடு நடந்துள்ளது. இதனால் ரூ.200 கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் கூட்ட அரங்கில் நடந்தது. ஆணையாளர் பொறுப்பு அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முறைகேடு

    கூட்டத்தில் கவுன்சிலர் இமயவர்மன் பேசுகையில், ஆண்டிப்பட்டி ஏரி புணரமைப்புக்கு ரூ.19 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் எந்த பணியும் செய்யாமல் மேலும் ரூ.5 கோடி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் பல கோடி ரூபாய் முறை கேடு நடந்துள்ளது. மாநகராட்சி வரி வசூலில் பல கோடி முறைகேடு நடந்துள்ளது. இதனால் ரூ.200 கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் யாதவமூர்த்தி பேசுகையில்,

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் நடைபாதையில் பல கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் அங்குள்ள பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதனை அகற்றி பயணிகள் எளிதாக சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும், பழைய பஸ் நிலையத்தில் கழிவறை கட்டணம் தனியாருக்கு செல்வதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அண்ணா பூங்கா டெண்டர் முடிந்தும் மறு ஏலம் விடாதது ஏன், இவ்வாறு அவர் பேசினார்.

    கவுன்சிலர் கே.சி. செல்வராஜ் பேசுகையில், எனது வார்டில் பிரசவ வார்டுடன் உள்ள ஆஸ்பத்திரியை 30 படுக்கைகளுடன் விரிவு படுத்த வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் ஈசன் இளங்கோ பேசுகையில், தமிழக முதல்வர் அனைவரும் நலனுடன் வாழ வேண்டும் என்பதில் முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் சேலம் மாநகரில் அதிக அளவில் நகர்புற துணை சுகாதார நிலையங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளார் அதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

    கவுன்சிலர் ஆனைவரதன் பேசுகையில், கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கவுன்சிலர்களுக்கு முறையான அழைப்பிதழ் வழங்கவில்லை. கவுன்சிலர்களுக்கு முறையாக மரியாதை வழங்கப்பட வில்லை என்றார்.

    தொடர்ந்து பேசிய கவுன்சிலர் சரவணன், தமிழ்நாடே வியக்கும் அளவிற்கு கோட்டை மாரியம்மன் கோவில் பணி விரைவாக முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் வேண்டும் என்றே சிலர் குறை கூறுகிறார்கள் என்றார்.

    அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி தலைவர் யாதவ மூர்த்தி, கவுன்சிலர் சரவணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர்.

    பின்னர் யாதவமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது- கோட்டை மாரியம்மன் கோவில் புணரமைப்பு பணி அ.தி.முக. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. நான்கரை ஆண்டுகள் பணி முடிந்த நிலையில் தற்போது ஒன்றரை ஆண்டுகளில் மீதம் இருந்த பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படவில்லை. வ.உ.சி மார்க்கெட் 5-வது முறையாக டெண்டர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் கோர்டில் வழக்கு தொடர்வோம் என்றார்.

    • கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் நடந்த வழிபாட்டின்போது குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • அதன்பேரில் தமிழகம் முழுவதும் ெரயில் நிலையங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் ஒரு கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் நடந்த வழிபாட்டின்போது குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

    ரெயில் நிலையங்கள்

    இதையடுத்து நாடு முழுவதும் ெரயில்வே நிலையங்களில் சோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் தமிழகம் முழுவதும் ெரயில் நிலையங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். நேற்று மாலை சேலம் ஜங்ஷன் ெரயில் நிலையத்தில் ெரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மோப்பநாய் பவானியை கொண்டு பார்சல் அலுவலகம், டிக்கெட் புக்கிங் அலுவலகம், வாகனம் நிறுத்துமிடம், முதலாவது நடைமேடை பகுதி ஆகிய இடங்களில் தீவிரமாக சோதனையிட்டனர்.

    சோதனை

    தொடர்ந்து சேலம்- விருத்தாச்சலம் ெரயிலில் ஏறி பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டு சோதனை செய்தனர். ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளின் உடைமைகளையும் சோதனை செய்தனர். ெரயில்வே ஜங்ஷன் நுழைவு வாயில் பகுதி மற்றும் தண்டவாளங்களிலும் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.

    2-வது நாளாக...

    2 -வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. சேலம் ெரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்துமிடம், பார்சல் முன்பதிவு செய்யும் இடம், நடைமேடைகள் என பல்வேறு இடங்களில் மோப்ப நாயுடன் சேலம் நகர வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    ெரயில்வே பாதுகாப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியசாமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் ஸ்மித், செந்தில்குமார் தலைமையிலான போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    கண்காணிப்பு

    இதில் குறிப்பாக பயணிகள் உடைமைகளை சோதனையிட்டு வருகின்றனர். தொடர்ந்து 24 மணி நேரமும் ெரயில் நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • சிவகுமார் (47), மாற்றுத்திறனாளி. இவர் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தார்.
    • அப்போது அவர் திடீரென கையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றினார். இதை பார்த்த பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் மணியனூர் திருவேங்கட நகரை சேர்ந்தவர் சிவகுமார் (47), மாற்றுத்திறனாளி. இவர் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது அவர் திடீரென கையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றினார். இதை பார்த்த பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் கூறுகையில், கடந்த 26-ந் தேதி எனது வீட்டிற்குள் புகுந்து 3 பேர் என்னை தாக்கினார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • காய்கறி விற்பனை தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்று 2-ம் ஆண்டு ெதாடக்க நாளையொட்டி சிறுதானிய உணவு மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட வேளாண் வணிக இணை இயக்குனர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி உழவர் சந்தையில் மாலை நேர காய்கறி விற்பனை தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்று 2-ம் ஆண்டு ெதாடக்க நாளையொட்டி சிறுதானிய உணவு மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட வேளாண் வணிக இணை இயக்குனர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். கஞ்சமலை பயறு சிறுதானிய உழவர் உற்பத்தியாளர்கள் குழுவினர் சார்பில் சிறுதானிய உணவுகளான தினை சர்க்கரை பொங்கல், வரகு காய்கறி சாதம், குதிரைவாலி சாம்பார் சாதம், சாமை வெண் பொங்கல், தயிர் சாதம், சிறுதானிய இனிப்பு, கார வகை உணவு ஆகியவை 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி வேளாண் அலுவலர் தங்கராசு, விவசாயி மாதேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 10-ந் தேதி காலை 6 மணியுடன் டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
    • கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த 10-ந் தேதி காலை 6 மணியுடன் டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று அணைக்கு வினாடிக்கு 4ஆயிரத்து 44 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 3 ஆயிரத்து 454 கனஅடியாக குறைந்தது. நீர்மட்டம் 51.83 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக தொடர்ந்து வினாடிக்கு 500கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 18.98 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    • சேலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது.
    • மதியம் 2.30 மணிக்கு சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் கன மழையாக கொட்டியது.

    சேலம்:

    சேலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. தொடர்ந்து நேற்று மதியம் திடீரென கரு மேகங்கள் திரண்டது.

    சூறைக்காற்றுடன் மழை

    மதியம் 2.30 மணிக்கு சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் கன மழையாக கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் இரு சக்கர வகனங்களில் சென்றவர்கள் பாலங்களின் கீழ் பகுதிகளில் ஒதுங்கினர்.

    ஜங்சன், சாரதா கல்லூரி சாலை, அத்வை ஆசிரம சாலை, மெய்யனூர், இட்டேரி ரோடு, தாதாகப்பட்டி, நெத்திேமடு, கிச்சிப்பாளையம் நாராயணநகர், பச்சப்பட்டி, சேலம் பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், 4 ரோடு, 5 ரோடு, ஜங்சன், அழகாபுரம், அஸ்தம்பட்டி உள்பட பல பகுதிகளில் தண்ணீர் சாலைகளில் கரை புரண்டு ஓடியதால் வாகன ஓட்டிகள் தத்தளித்த படியே சென்றனர்.

    போக்குவரத்து நெரிசல்

    இதனால் மழை நின்றதும் பல சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி நிலவியது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். மழை நின்றதும் பாத்திரங்களில் தண்ணீரை எடுத்து அப்புறப்படுத்தினர்.

    திருவாக்கவுண்டனூர் பகுதியில் சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேறிய கழிவு நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் வீட்டை சுற்றிலும் கழிவு நீர் தேங்கியதால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.

    இதே போல சேலம் மாவட்ட புறநகர் பகுதிகளான சங்ககிரி, மேட்டூர், வீரகனூர் பகுதிகளிலும் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளிலும் தண்ணீர் தேங்கியது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    129.10 மழை

    மாவட்டத்தில் அதிக பட்சமாக சங்ககிரியில் 31 மி.மீ. மழை பெய்துள்ளது. மேட்டூர் 29.4, வீரகனூர் 23, தலைவாசல் 12, தம்மம்பட்டி 9, சேலம் 8.5, கெங்கவல்லி 5, ஆத்தூர் 4.2, ஆனைமடுவு 4, ஏற்காடு 3 மி.மீ என மாவட்டம் முழுவதும் 129.10 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    நாமக்கல் மாவட்டம்

    நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, குமார பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது.

    பரமத்தி வேலூர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பாலப்பட்டி, மோகனூர், பாண்ட மங்கலம், கபிலர்மலை, பரமத்தி, மணியனூர், நல்லூர், சோழசிராமணி, ஜேடர்பாளையம், ஆனங்கூர், அண்ணாநகர், பிலிக்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    பலத்த மழை

    அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்து தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் , நடந்து சென்ற பொதுமக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர் .

    அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள் , பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் கனமழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

    குளிர்ச்சி

    இந்த மழையினால் வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக திருச்செங்கோட்டில் 33 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. குமாரபாளையம் 18.2, மங்களபுரம் 5.8, கொல்லி மலை 3, ராசிபுரம் 1.3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 61.3 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. 

    • ஜலகண்டாபுரம் பேரூராட்சி அருகே உள்ள பொது நூலகம் 1995 -ம் கட்டப்பட்டது.
    • இந்த நூலகத்திற்கு நூலக வாசிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் என 100 -க்கும் மேற்பட்டவர்கள் தினமும் வந்து புத்தகம் படிக்கின்றனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் பேரூராட்சி அருகே உள்ள பொது நூலகம் 1995 -ம் கட்டப்பட்டது. இங்கு 4,470 பேர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இந்த நூலகத்திற்கு நூலக வாசிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் என 100 -க்கும் மேற்பட்டவர்கள் தினமும் வந்து புத்தகம் படிக்கின்றனர்.

    மேற்கூரை சேதம்

    இந்த நிலையில் தற்போது கட்டிட மேற்கூரை ஆங்காங்கே இடிந்து மிகவும் சேதம் அடைந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது.

    இது குறித்து நூலக வாசிகள் கூறும்போது, இந்த கட்டிடத்தின் மேற்கூரை ஆங்காங்கே இடிந்து விழுவதால் அச்சம் அடைந்து மாணவ- மாணவிகள் படிக்க வருவதில்லை. பொதுமக்கள் பல ஆண்டுகளாக அரசு அதிகாரிகளுக்கு இது குறித்து பல முறை மனு கொடுத்தும் இது வரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே நூலகத்தை சரி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • அணையில் இருந்து குடிநீருக்காக தொடர்ந்து வினாடிக்கு 500கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • தற்போது அணையில் 18.98 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த 10-ந்தேதி காலை 6 மணியுடன் டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று அணைக்கு வினாடிக்கு 4ஆயிரத்து 44 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 3 ஆயிரத்து 454 கனஅடியாக குறைந்தது. நீர்மட்டம் 51.83 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக தொடர்ந்து வினாடிக்கு 500கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 18.98 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    • கடந்த சில நாட்களாக சேலம் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40 முதல் ரூ. 50- க்கும் சின்ன வெங்காயம் 50 ரூபாயக்கும் விற்பனையானது. தற்போது உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளில் பெரிய வெங்காயம் 70 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
    • 11 உழவர் சந்தைகள் மற்றும் தினசரி சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைகளுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மல்லூர், மேட்டூர், பனமரத்துப்பட்டி, வீராணம், வாழப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வந்து விற்கின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 11 உழவர் சந்தைகள் மற்றும் தினசரி சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைகளுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மல்லூர், மேட்டூர், பனமரத்துப்பட்டி, வீராணம், வாழப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வந்து விற்கின்றனர்.

    மேலும் ஆந்திரா, பெங்களூரு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சேலம் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40 முதல் ரூ. 50- க்கும் சின்ன வெங்காயம் 50 ரூபாயக்கும் விற்பனையானது. தற்போது உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளில் பெரிய வெங்காயம் 70 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோல் உழவர் சந்தைகள் மற்றும் திருமணிமுத்தாறு ஆற்றோரம், வ.உ.சி, பால் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் வரத்து குறைவால் விலை சற்று உயர்ந்துள்ளது.

    தக்காளி கிலோ ரூ.20 முதல் ரூ.25-க்கு விற்கிறது. கேரட் கிலோ ரூ.40, பீன்ஸ் ரூ.100, அவரை ரூ.50, உருளை ரூ.56, பாகற்காய் ரூ.35, கத்தரி ரூ. 24, வெண்டைக்காய் ரூ.25, முருங்கைக்காய் ரூ.50 முதல் ரூ.80 வரை, சுரக்காய் ரூ.15, முள்ளங்கி ரூ.20, மாங்காய் கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    ×