20 பவுன் நகை, ரூ.15 ஆயிரத்துடன் இளம்பெண் மாயம்

அதிர்ஷ்ட மூர்த்தி (27), இவர் கடந்த 28-ந் தேதி கேரளாவில் வேலைக்கு செல்வதற்காக தனது மனைவி புஷ்பாவுடன் சேலம் ரெயில் நிலையம் வந்தார்.நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிர்ஷ்ட மூர்த்தி பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
20 பவுன் நகை, ரூ.15 ஆயிரத்துடன் இளம்பெண் மாயம்
Published on

சேலம்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர் அதிர்ஷ்ட மூர்த்தி (27), இவர் கடந்த 28-ந் தேதி கேரளாவில் வேலைக்கு செல்வதற்காக தனது மனைவி புஷ்பாவுடன் சேலம் ரெயில் நிலையம் வந்தார். பின்னர் நடை மேடை 1-ல் சேலம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது புஷ்பா கழிவறைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிர்ஷ்ட மூர்த்தி பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து அதிர்ஷ்ட மூர்த்தி சேலம் ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மனைவியுடன் சேலம் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு செல்ல வந்தேன். அப்போது கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற எனது மனைவி மீண்டும் திரும்பி வரவில்லை.

ஆனால் எனது தாயாரின் நகை 20 பவுன், 15 ஆயிரத்தை எடுத்து சென்று விட்டார். அவரை மீட்டு தர வேண்டும் என்று கூறி இருந்தார். அதன் பேரில் நேற்று வழக்குப்பதிவு செய்த போலீசார் நகை, பணத்துடன் மாயமான பெண்ணை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com