என் மலர்tooltip icon

    சேலம்

    • கடன் தொல்லையும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் நேற்றிரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சேலம் சூரமங்கலம் பெருமாம்பாளையம் ரோடு பகுதிைய சேர்ந்தவர் முருகானந்தம், இவர் சொந்த மாக கார்கள் வைத்து வாடகைக்கு இயக்கி வந்தார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் பெருமாம்பாளையம் ரோடு பகுதிைய சேர்ந்தவர் முருகானந்தம் (40), இவர் சொந்த மாக கார்கள் வைத்து வாடகைக்கு இயக்கி வந்தார்.

    இந்த நிலையில் கடன் தொல்லையும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் நேற்றிரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த மனைவி மற்றும் குழந்தைகள் கதறி துடித்தனர். பின்னர் சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இஸ்ரேலுக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு ஜாமியா மஜித் முத்தவல்லி அன்வர் தலைமை தாங்கினார். செயலாளர் நசீர் அகமத், ஜாமியா மஸ்ஜித் இமாம் சுஹேல் அகமது காஸிமி ஆகியோர் வரவேற்று பேசினார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட அனைத்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் இஸ்ரேலுக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாமியா மஜித் முத்தவல்லி அன்வர் தலைமை தாங்கினார். செயலாளர் நசீர் அகமத், ஜாமியா மஸ்ஜித் இமாம் சுஹேல் அகமது காஸிமி ஆகியோர் வரவேற்று பேசினார்.

    இதில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, காங்கிரஸ் மாவட்ட தலைவர் பாஸ்கர், இந்திய முஸ்லிம் லீக் அன்சர் பாஷா, மனிதநேய மக்கள் கட்சி பாரூக், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் காஜாமைதீன், பொதுக்குழு உறுப்பினர் நாசர்கான் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில் லைன்மேடு முத்தவல்லி ஆப்சல் ஷெரீப் நன்றி கூறினார்.

    • பாவளி பண்டிகையை யொட்டி கடந்த 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    • கடந்த ஆண்டை விட 1.33 லட்சம் கி.மீ.. கூடுதலாக இயக்கி 65.26 லட்சம் ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்பட அனைத்து பணியா ளர்களின் கூட்டு முயற்சியே இத்தகைய இலக்கை அடைய முடிந்தது

    சேலம்:

    சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது-

    தீபாவளி பண்டிகையை யொட்டி கடந்த 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அத்துடன் மாற்று பஸ்கள், வழித்தட பஸ்கள், தட நீட்டிப்பு, கூடுதல் நடைகளும் இயக்கப் பட்டன. இதன்மூலம் 4 நாட்களில் டவுன் பஸ்களில் 39 லட்சம் பயணிகள், புறநகர் பஸ்களில் 23 லட்சம் பயணிகள் என மொத்தம் 62 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

    தினமும் சராசரியை விட டவுன் பஸ்களில் கூடுதலாக 45 ஆயிரம் பேர், புறநகர் பஸ்களில் 56 ஆயிரம் பேர் என மொத்தம் 1 லட்சத்து ஆயிரம் பேர் கூடுதலாக பயணித்து உள்ளனர். அவர்களுக்காக 39 லட்சம் கி.மீ. பஸ்கள் இயக்கப்பட்டு 11.03 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டை விட 1.33 லட்சம் கி.மீ.. கூடுதலாக இயக்கி 65.26 லட்சம் ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்பட அனைத்து பணியா ளர்களின் கூட்டு முயற்சியே இத்தகைய இலக்கை அடைய முடிந்தது என அவர் அதில் கூறி உள்ளார்.

    • பகல், இரவு நேரங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது.
    • தற்போது தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டது.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க ஆண்டுதோறுமே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் இங்குள்ள காட்சி முனைகளை ரசித்து பார்த்து படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்வார்கள்.

    குறிப்பாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகையால் ஏற்காடு நகரமே களை கட்டும்.

    கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைப்பாதையில் உள்ள பல்வேறு அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அந்த அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள். மேலும் தொடர் மழையின் காரணமாக குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.

    பகல், இரவு நேரங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சுவட்டர், உல்லன் ஆடைகளை அணிந்து வந்து செல்கிறார்கள். மேலும் பஸ் நிலைய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் டிரைவர்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

    மதியம் 3 மணிக்கு மேல் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. அது காலை 10 மணி வரை நீடிக்கிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலைகள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடி வந்து செல்கிறது. மேலும் சுற்றுலா பயணிகள் சிலர் உல்லன் ஆடைகளை அணிந்து கொண்டு பனிமூட்டத்தில் நடைபயிற்சி சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் சிலர் பனிமூட்டத்தில் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    தற்போது தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டது. ஆனால் சேலம் மற்றும் ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பேர் தினமும் வந்து செல்கிறார்கள். அவர்கள் ஏற்காட்டில் நிலவி வரும் ரம்மியமான சூழலை அனுபவித்து வருகிறார்கள்.

    • கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் பருவமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
    • இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60.41 அடியாக இருந்தது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது. இதன் காரணமாக கடந்த மாதம் 10-ந்தேதியுடன் பாசனத்துக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து இந்த மாதம் திறந்து விட வேண்டிய தண்ணீரையும் திறந்து விடவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் பருவமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60.41 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 3297 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று அது 3320 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அதே போல் தொடர்ந்து குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வியாழக் கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    ேசலம்:

    சேலம் அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாைள மறுநாள் (வியாழக் கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அஸ்தம்பட்டி, காந்திரோடு, வின்சென்ட் மரவனேரி, மணக்காடு, சின்ன திருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புது ஏரி, ஹவுசிங் போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்ப நாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா ரோடு, அழகாபுரம், ராஜா ராம் நகர், சங்கர் நகர், கம்பர் தெரு, பாரதி நகர், 4 ரோடு, மிட்டா பெரியபுதூர், சாரதா கல்லூரி ரோடு, செட்டிசாவடி, விநாயகம்பட்டி, நகரமலை அடிவாரம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை சேலம் கிழக்கு மின்வாரிய செயற் பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார். 

    • நடிகை நமிதாவின் கணவர் சவுத்ரிக்கு ரூ. 4 கோடி பெற்றுக் கொண்டு மாநில சேர்மன் பதவி வழங்கியதாகவும் தெரிவித்தார்.
    • தன்னிடம் ரூ.50 லட்சம் கொடுத்தால் ஒரு மாத காலத்திற்குள் உங்களுக்கு மாநில சேர்மன் பதவி பெற்று தருவதாகவும் முத்துராமன் கூறினார்.

    சேலம்:

    சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபால்சாமி (வயது 45). இவர் இரும்பாலை சாலையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாண் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் தனது தொழிலினை விரிவுப்படுத்திட முத்துராமன் என்பவரை அணுகினார். அப்போது முத்துராமன் அவரிடம் தான் எம்.எஸ்.எம்.இ. கவுன்சில் தேசிய சேர்மன் பதவி வகிப்பதாகவும், மேலும் நடிகை நமிதாவின் கணவர் சவுத்ரிக்கு ரூ. 4 கோடி பெற்றுக் கொண்டு மாநில சேர்மன் பதவி வழங்கியதாகவும் தெரிவித்தார்.

    தன்னிடம் ரூ.50 லட்சம் கொடுத்தால் ஒரு மாத காலத்திற்குள் உங்களுக்கு மாநில சேர்மன் பதவி பெற்று தருவதாகவும் முத்துராமன் கூறினார்.

    இதை நம்பி கோபால்சாமி கடந்த ஜூலை மாதம் 10-ந்ேததி முத்துராமன் மற்றும் அவரது கூட்டாளியான துஷ்வந்த் யாதவ் ஆகியோரிடம் ரூ.50 லட்சம் கொடுத்தார். ஆனால் கூறியபடி அவர்கள் இருவரும் கோபால்சாமிக்கு மாநில சேர்மன் பதவி வாங்கி கொடுக்க வில்லை. பணத்தையும் திரும்ப வழங்கவில்லை. இது குறித்து கோபால்சாமி அளித்த புகாரின்பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராமன் மற்றும் துஷ்வந்த் யாதவ் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் இந்த வழக்கின் புலன் விசாரணை தற்போது சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவிற்கு (சி.சி.பி) மாற்றப்பட்டது.

    இதையடுத்து மோசடி புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகை நமிதாவின் கணவர் சவுத்ரி, பா.ஜ.க. மாநில ஊடகப்பிரிவு துணை தலைவர் மஞ்சுநாத் உள்பட 2 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் மழை பெய்தது.
    • றிப்பாக நேற்று வீரகனூர், தலைவாசல் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் மழை பெய்தது.

    பரவலாக மழை

    குறிப்பாக நேற்று வீரகனூர், தலைவாசல் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிக ரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஏற்காட்டில் நேற்றிரவு பெய்த மழையால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சேலம் மாநகரில் இன்று காலை 5.30 மணி முதல் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் சென்ற வர்கள் அவதிப்பட்டனர். மழையை தொடர்ந்து ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    33.9 மி.மீ. மழை

    மாவட்டத்தில் அதிக பட்சமாக வீரகனூரில் 9 மி.மீ. மழை பெய்துள்ளது. தலைவாசல் 8, ஆத்தூர் 3, ஆனைமடுவு 3, கரியகோவில் 3, ஏற்காடு 2.4, கெங்கவல்லி 2, தம்மம்பட்டி 2, பெத்தநாயக்கன்பாளையம் 1, கரியகோவில் 0.5 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 33.9 மி.மீ. மழை பெய்துள்ளது.  

    • ஒவ்வொரு வருடமும் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் பட்டாசு விற்பனை நடைபெறுவது வழக்கம்.
    • கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் தள்ளுபடி விலையில் தரமான பட்டாசுகள் விற்பனை செய்வதால் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் சென்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப் பதாவது:-

    ஒவ்வொரு வருடமும் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் பட்டாசு விற்பனை நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த வருடமும் தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டத்தில் உள்ள பொன்னி கூட்டுறவு பண்டகசாலை, என்.ஜி.ஜி.ஓ கூட்டுறவு பண்டக சாலை, சுவர்ணபுரி கூட்டுறவு பண்டகசாலை, இளம்பிள்ளை கூட்டுறவு பண்டகசாலை, காடை யாம்பட்டி கூட்டுறவு பண்டக சாலை ஆகியவற்றின் மூலம் சிவகாசியில் உள்ள அங்கீக ரிக்கப்பட்ட பட்டாசுகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களி டமிருந்து பட்டாசுகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    பொன்னி கூட்டுறவு பண்டகசாலை மூலம் ரூ.70 லட்சம், சேலம் கூட்டுறவு வேளாண்மை விற்பனை சங்கம் மூலம் ரூ.9 லட்சம், ஆத்தூர் கூட்டுறவு வேளாண்மை விற்பனை சங்கம் மூலம் ரூ. 7.50 லட்சம், என்.ஜி.ஜி.ஓ கூட்டுறவு பண்டக சாலை மூலம் ரூ.4 லட்சம், சுவர்ணபுரி கூட்டுறவு பண்டகசாலை மூலம் ரூ.6 லட்சம், இளம்பிள்ளை கூட்டுறவு பண்டகசாலை மூலம் ரூ.2 லட்சம், காடையாம்பட்டி கூட்டுறவு பண்டகசாலை மூலம் ரூ.1.50 லட்சம் ஆக மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டது.

    கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் தள்ளுபடி விலையில் தரமான பட்டாசுகள் விற்பனை செய்வதால் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் சென்றனர். இந்த பட்டாசு விற்பனையானது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 சதவீதம் கூடுதலாக பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிங்கபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சிங்கபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. எனவே சிங்கபுரம், வாழப்பாடி, பெரியகிருஷ்ணாபுரம், கொட்டவாடி, துக்கியாம்பாளையம், அத்தனூர்பட்டி, பேளூர், முத்தம்பட்டி, மண்நாயக்கன்பட்டி, திம்மநாயக்கன் பட்டி, மேற்கு ராஜாபாளையம், புதுப்பாளையம், பழனியாபுரம், மன்னார்பாளையம், மங்களபுரம், மத்தூர் ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை வாழப்பாடி மின்வாரிய செயற் பொறியாளர் முல்லை தெரிவித்துள்ளார்.

    • ஓமலூர் கோட்டத்தில் மாதந்தோறும் 3-வது புதன் கிழமை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
    • மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் ஓமலூர் கோட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    சேலம்:

    மேட்டூர் மின் பகிர்மான வட்டம் ஓமலூர் கோட்டத்தில் மாதந்தோறும் 3-வது புதன் கிழமை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி நாளை (புதன்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேட்டூர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் ஓமலூர் கோட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன்பெறுமாறு ஓமலூர் மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    • சேலம் மாவட்டத்தில் உற்பத்தி யாகும் மாம்பழங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.
    • மாவட்டம் முழுவதும் 6,200 ஏக்கரில் மாமரங்கள் உள்ளன. குறிப்பாக அல்போன்சா, குண்டு, மல்கோவா, செந்தூரா, இமாம் பசந்த் ரக பழங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    சேலம்:

    சேலம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது தித்திக்கும் மாம்பழங்கள் தான். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உற்பத்தி யாகும் மாம்பழங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.

    சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, தலைவாசல், வரகம்பாடி, ஜலகண்டா புரம், நங்கவள்ளி, மேச்சேரி, ஓமலூர், அயோத்தியா பட்டணம், குப்பனூர் உள்பட மாவட்டம் முழுவதும் 6,200 ஏக்கரில் மாமரங்கள் உள்ளன. குறிப்பாக அல்போன்சா, குண்டு, மல்கோவா, செந்தூரா, இமாம் பசந்த் ரக பழங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இதன் விளைச்சலை பொருத்தவரை டிசம்பரில் பூ பூக்கும். அதன் பிறகு நன்கு வளர்ந்து ஏப்ரல் மாத தொடக்கத்தில் விளைச்சல் தரும். சீசன் காலத்தில் மாவட்டத்தில் 48 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டன் வரை விளைச்சல் கிடைக்கும்.

    சேலம் மாம்பழம் ருசி மிகுந்தது என்பதால் சீசன் காலத்தில் எப்போதும் அதற்கு மவுசு இருக்கும். இந்த பழங்கள் பெரும்பாலும் உள்ளூர் வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்கப்படுகின்றன.

    மாவட்டத்தில் இருந்து 30 சதவீதம் மாம்பழங்கள் டெல்லி மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்க ளுக்கும், மலேசியா, துபாய், சிங்கப்பூர், லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக சேலம் அல்போன்சா பழங்கள் ஜூஸ் நிறுவனங்களுக்கு அதிக அளவில் ஏற்றுமதி ஆகின்றன .

    இது பற்றி சேலம் மாவட்ட விவசாயிகள் கூறுகையில், உழவு செய்து தண்ணீர் ஊற்றி உரங்கள் வைத்து மா மரங்கள் பராமரிக்கப்படுகின்றன. 2 முதல் 3 முறை மருந்து அடிக்க வேண்டும். பராமரிப்புக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை செலவாகிறது.

    ஏப்ரல் மாத தொடக்கத்தில் மா விளைச்சலுக்கு வந்து விடுகிறது. அதன் பிறகு விற்கப்படுகிறது. ஒரு ஏக்கரில் விளையும் மாங்காய் மூலம் ஒரு லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை தரத்தை பொறுத்து மாங்காய்கள் விற்பனை ஆகிறது. மொத்தமாக வியாபாரி களும் கொள்முதல் செய்து வெளிமாவட்டம், வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதன் மூலம் விவசாயிகள் வியாபா ரிகளுக்கு ஓராண்டு வருமானம் ஒரே மாதத்தில் கிடைப்பதாக விவசாயிகள் பெருமிதம் தெரிவித் துள்ளனர்.

    ×