என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரே ஏக்கரில் ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் வரை வருமானம்கொடுக்கும் சேலம் மாம்பழங்கள்
    X

    ஒரே ஏக்கரில் ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் வரை வருமானம்கொடுக்கும் சேலம் மாம்பழங்கள்

    • சேலம் மாவட்டத்தில் உற்பத்தி யாகும் மாம்பழங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.
    • மாவட்டம் முழுவதும் 6,200 ஏக்கரில் மாமரங்கள் உள்ளன. குறிப்பாக அல்போன்சா, குண்டு, மல்கோவா, செந்தூரா, இமாம் பசந்த் ரக பழங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    சேலம்:

    சேலம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது தித்திக்கும் மாம்பழங்கள் தான். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உற்பத்தி யாகும் மாம்பழங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.

    சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, தலைவாசல், வரகம்பாடி, ஜலகண்டா புரம், நங்கவள்ளி, மேச்சேரி, ஓமலூர், அயோத்தியா பட்டணம், குப்பனூர் உள்பட மாவட்டம் முழுவதும் 6,200 ஏக்கரில் மாமரங்கள் உள்ளன. குறிப்பாக அல்போன்சா, குண்டு, மல்கோவா, செந்தூரா, இமாம் பசந்த் ரக பழங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இதன் விளைச்சலை பொருத்தவரை டிசம்பரில் பூ பூக்கும். அதன் பிறகு நன்கு வளர்ந்து ஏப்ரல் மாத தொடக்கத்தில் விளைச்சல் தரும். சீசன் காலத்தில் மாவட்டத்தில் 48 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டன் வரை விளைச்சல் கிடைக்கும்.

    சேலம் மாம்பழம் ருசி மிகுந்தது என்பதால் சீசன் காலத்தில் எப்போதும் அதற்கு மவுசு இருக்கும். இந்த பழங்கள் பெரும்பாலும் உள்ளூர் வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்கப்படுகின்றன.

    மாவட்டத்தில் இருந்து 30 சதவீதம் மாம்பழங்கள் டெல்லி மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்க ளுக்கும், மலேசியா, துபாய், சிங்கப்பூர், லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக சேலம் அல்போன்சா பழங்கள் ஜூஸ் நிறுவனங்களுக்கு அதிக அளவில் ஏற்றுமதி ஆகின்றன .

    இது பற்றி சேலம் மாவட்ட விவசாயிகள் கூறுகையில், உழவு செய்து தண்ணீர் ஊற்றி உரங்கள் வைத்து மா மரங்கள் பராமரிக்கப்படுகின்றன. 2 முதல் 3 முறை மருந்து அடிக்க வேண்டும். பராமரிப்புக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை செலவாகிறது.

    ஏப்ரல் மாத தொடக்கத்தில் மா விளைச்சலுக்கு வந்து விடுகிறது. அதன் பிறகு விற்கப்படுகிறது. ஒரு ஏக்கரில் விளையும் மாங்காய் மூலம் ஒரு லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை தரத்தை பொறுத்து மாங்காய்கள் விற்பனை ஆகிறது. மொத்தமாக வியாபாரி களும் கொள்முதல் செய்து வெளிமாவட்டம், வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதன் மூலம் விவசாயிகள் வியாபா ரிகளுக்கு ஓராண்டு வருமானம் ஒரே மாதத்தில் கிடைப்பதாக விவசாயிகள் பெருமிதம் தெரிவித் துள்ளனர்.

    Next Story
    ×