என் மலர்
நீங்கள் தேடியது "E-Consumer Association"
- ஓமலூர் கோட்டத்தில் மாதந்தோறும் 3-வது புதன் கிழமை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
- மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் ஓமலூர் கோட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது.
சேலம்:
மேட்டூர் மின் பகிர்மான வட்டம் ஓமலூர் கோட்டத்தில் மாதந்தோறும் 3-வது புதன் கிழமை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி நாளை (புதன்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேட்டூர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் ஓமலூர் கோட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன்பெறுமாறு ஓமலூர் மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- மின் நிலைய வளாகத்தில் உள்ள பராமரிப்பு மின் செயற்பொறியாளர் இயக்கத்தில் நடைபெற உள்ளது.
- பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தாம்பரம் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (11-ந் தேதி) காலை 11 மணியளவில் தாம்பரம், புது தாங்கல் துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள பராமரிப்பு மின் செயற்பொறியாளர் இயக்கத்தில் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






