search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு பண்டக சாலைகளில் ரூ.1 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை
    X

    கூட்டுறவு பண்டக சாலைகளில் ரூ.1 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை

    • ஒவ்வொரு வருடமும் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் பட்டாசு விற்பனை நடைபெறுவது வழக்கம்.
    • கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் தள்ளுபடி விலையில் தரமான பட்டாசுகள் விற்பனை செய்வதால் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் சென்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப் பதாவது:-

    ஒவ்வொரு வருடமும் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் பட்டாசு விற்பனை நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த வருடமும் தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டத்தில் உள்ள பொன்னி கூட்டுறவு பண்டகசாலை, என்.ஜி.ஜி.ஓ கூட்டுறவு பண்டக சாலை, சுவர்ணபுரி கூட்டுறவு பண்டகசாலை, இளம்பிள்ளை கூட்டுறவு பண்டகசாலை, காடை யாம்பட்டி கூட்டுறவு பண்டக சாலை ஆகியவற்றின் மூலம் சிவகாசியில் உள்ள அங்கீக ரிக்கப்பட்ட பட்டாசுகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களி டமிருந்து பட்டாசுகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    பொன்னி கூட்டுறவு பண்டகசாலை மூலம் ரூ.70 லட்சம், சேலம் கூட்டுறவு வேளாண்மை விற்பனை சங்கம் மூலம் ரூ.9 லட்சம், ஆத்தூர் கூட்டுறவு வேளாண்மை விற்பனை சங்கம் மூலம் ரூ. 7.50 லட்சம், என்.ஜி.ஜி.ஓ கூட்டுறவு பண்டக சாலை மூலம் ரூ.4 லட்சம், சுவர்ணபுரி கூட்டுறவு பண்டகசாலை மூலம் ரூ.6 லட்சம், இளம்பிள்ளை கூட்டுறவு பண்டகசாலை மூலம் ரூ.2 லட்சம், காடையாம்பட்டி கூட்டுறவு பண்டகசாலை மூலம் ரூ.1.50 லட்சம் ஆக மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டது.

    கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் தள்ளுபடி விலையில் தரமான பட்டாசுகள் விற்பனை செய்வதால் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் சென்றனர். இந்த பட்டாசு விற்பனையானது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 சதவீதம் கூடுதலாக பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×