என் மலர்tooltip icon

    சேலம்

    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் மூலம் நேற்று முதல் 14-ந் தேதி வரை சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
    • சேலம் மற்றும் திருவண்ணாமலைக்கும் என 400 சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் பயணிகள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக நேற்று முதல் 14-ந் தேதி வரை சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    சென்னையிலிருந்து சேலம், நாமக்கல், தர்மபுரி,

    கிருஷ்ணகிரி, ஓசூருக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படு கிறது. பெங்களூருவில் இருந்து சேலம், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணா மலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரிக்கும், ஓசூரிலிருந்து சேலம், திருச்சி, மதுரை, திருவண்ணா மலை, தர்மபுரி, கிருஷ்ணகிரிக்கும், சேலத்திலிருந்து மதுரை, திருச்சி, சிதம்பரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் மற்றும் விழுப்புரத்திற்கும், கோவை, திருப்பூரிலிருந்து சேலம் மற்றும் திருவண்ணாமலைக்கும் என 400 சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும், பண்டிகையை கொண்டாடி விட்டு திரும்ப ஏதுவாக, 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும், சேலம், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணா மலை, வேலூர், திருப்பத்தூர் கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களிலிருந்து பெங்களூருக்கும், சேலம், திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களிலிருந்து ஓசூருக்கும், மதுரை, கோவை, திருச்சி, சிதம்பரம், திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், விழுப்புரம் ஆகிய ஊர்களிலிருந்து சேலத்திற்கும், சேலத்திலிருந்து கோவை மற்றும் திருப்பூருக்கும் 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் கூடுதலாகவும் மற்றும் புறநகர் வழித்தட பேருந்துகள் மூலம் கூடுதல் நடைகளும் இயக்கப்படவுள்ளது. அனைத்து நேரங்களிலும் பயணிகள் தேவைக்கேற்ப கூடுதல் நகரப்பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று (12-ந் தேதி) முதல் 18-ந் தேதி வரை பயணிகள் கூட்டத்திற்கு ஏற்ப இரவு முழுவதும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • தாரமங்கலம் அருகி லுள்ள கருக்கல்வாடி கிரா மம், எருமைக்காரன் வளவு பகுதியில் 2 குழந்தைகளை தவிக்கவிட்டு சின்ன மாமனாருடன் பெண் ஓட்டம்.
    • தகவல் அறிந்து வந்த சின்னம்மாள் முத்துசாமி மீது தாரமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள கருக்கல்வாடி கிரா மம், எருமைக்காரன் வளவு பகுதியைசேர்ந்த பழனிசாமி முத்துசாமி (வயது 33) நெசவு தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த அண்ணன் மருமகள் உறவு முறை கொண்ட சுரேஷ்குமாரின் மனைவி கோமதி (27) என்பவருடன் கள்ள தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 10-ந்தேதி முத்துசாமியும், கோமதியும் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது, இதுபற்றி கோமதியின் மாமியார் சுந்தராம்பாள் பாணா புரத்தில் உள்ள கோமதியின் தாய் சின்னம்மாளுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வந்த சின்னம்மாள் முத்துசாமி மீது தாரமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோமதிக்கு 2 குழந்தை கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2 குழந்தைகளை தவிக்க விட்டு அவர் ஓடியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தமிழநாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
    • அதன்படி போட்டி நடத்துவதற்கான இடத்தை பவளத்தானுரில் 6 ஏக்கர் நிலம் தேர்வு செய்துள்ளனர். இந்த இடத்தை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு மாநில பேரவை தலைவர் வந்து இடத்தை ஆய்வு செய்தனர்.

    தாரமங்கலம்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தமிழநாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் கூலமேடு, தம்மம்பட்டி, நிலவாரபட்டி ஆகிய ஊர்களை தொடர்ந்து தற்போது தாரமங்கலம் அருகிலுள்ள குறுக்குபட்டி ஊராட்சி பவளத்தானுர் பகுதியில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தாரமங்கலம் பி ஆர் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் போட்டியை நடத்து

    வதற்கான முதற்கட்ட பணியை மேற்கொண்டுள்ளனர்.

    அதன்படி போட்டி நடத்துவதற்கான இடத்தை பவளத்தானுரில் 6 ஏக்கர் நிலம் தேர்வு செய்துள்ளனர். இந்த இடத்தை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு மாநில பேரவை தலைவர் ராஜசேகரன், செயலாளர் நாராயணன் ஆகியோர் வந்து இடத்தை ஆய்வு செய்தனர்.

    பின்னர் மாநில தலைவர் ராஜசேகரன் கூறுகையில், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டை அழியாமல் பார்த்துக்கொள்ளவும், நாட்டு இன காளைகளை வளர்க்கவும் நாங்கள் இந்த வீர விளையாட்டை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறோம் அதன்படி தமிழக அரசின் அனுமதியோடு அரசின் சட்ட நெறிகளுக்கு உட்பட்டு உரிய அனுமதி பெற்று விழா நடத்தி வருகிறோம்,

    அதன்படி இந்த ஆண்டு தாரமங்கலம் அருகில் பவளத்தானுர் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்த இடம் ஜல்லிக்கட்டு நடத்த தகுந்த இடமாக அமைந்துள்ளது, எனவே இந்த இடத்தில் விழா நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்,

    அப்போது விழா ஏற்பாட்டாளர்கள் தாரமங்கலம் நகராட்சி மன்ற தலைவர் குணசேகரன், துணைத்தலைவர் தனம்,குறுக்குப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாச்சலம்,ரகுபதி, ராஜேந்திரன்,தங்கராஜ், தாரமங்கலம் பிஆர் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,128 கன அடியாக சரிந்தது.
    • மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட, திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.

    இதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 1,327 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 1,547 கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி, நீர்வரத்து விநாடிக்கு 1,128 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் நீரின் அளவைவிட, திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 112.89 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 112.22 அடியாக சரிந்தது.

    • சிறையின் அருகில் உள்ள சாலையோரம் 20 வயதுடைய இளம்பெண் நின்று கொண்டிருந்தார்.
    • சேலம் சிறையில் வார்டர்களாக பணியாற்றும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் தென் அழகாபுரத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவரை சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றும் திருப்பத்தூர் அருகே உள்ள நரியனேரி கரியம்பட்டி பகுதியை சேர்ந்த அருண் (வயது 30) மற்றும் சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் (31) ஆகியோர் அஸ்தம்பட்டியில் உள்ள மத்திய சிறை காவலர்கள் குடியிருப்புக்கு அழைத்து சென்று அங்கு காலியாக உள்ள வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    மேலும் இதை வீடியோ, போட்டோ எடுத்து, அதை வைத்து மிரட்டி தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20-ந்தேதி முதல் கடந்த ஜனவரி மாதம் 4-ந்தேதி வரை பலமுறை இதுபோல் நடந்து கொண்டனர்.

    இதுபற்றி அந்த பெண், அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி சிறை வார்டன்கள் அருண், சிவ சங்கர் ஆகிய இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதான அருண், சிவசங்கர் ஆகியோர் உடனடியாக சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இருவரும் அரசு ஊழியர்கள் என்பதால், கைது செய்யப்பட்ட விவரம் குறித்து, சேலம் மத்திய சிறை நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசுக்கும் தகவல் தெரிவித்துள்ளது. கைதான இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கையை சேலம் சிறை துறை சூப்பிரண்டு தமிழ் செல்வன் தயாரித்து கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி சண்முகசுந்தரத்துக்கு அனுப்பி உள்ளார்.

    டி.ஐ.ஜி., சிறைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருவரையும் சஸ்பெண்டு செய்ய உள்ளார். இன்று மாலைக்குள் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என சிறை துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • திடீரென கலெக்டரின் அலுவலக நுழைவாயில் முன்பு, தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை கேனை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டு தீ பற்ற வைக்க முயன்றார்.
    • ஆடிட்டர் ஒருவர் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கட்டினால் 40 வாரத்தில் ரூ.2 லட்சமாக தருவதாக கூறினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கீரைபாப்பம்பாடி புதூர் பகுதியை சேர்ந்தவர் வைரவேல் (வயது 30). இவர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தார். பின்னர் திடீரென கலெக்டரின் அலுவலக நுழைவாயில் முன்பு, தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை கேனை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டு தீ பற்ற வைக்க முயன்றார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த, அங்கிருந்த அரசு வாகன ஓட்டுனர்கள், போலீசார் வைரவேலை தடுத்து நிறுத்தினர். பின்னர் அந்த வாலிபர் மீது போலீசார் தண்ணீர் ஊற்றினர். அவரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது வாலிபர் கூறும்போது, ஆடிட்டர் ஒருவர் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கட்டினால் 40 வாரத்தில் ரூ.2 லட்சமாக தருவதாக கூறினார். அதனை நம்பி பல்வேறு தவணைகள் மூலம் ரூ.6 லட்சம் கட்டினேன். இதுவரை எந்த பணமும் திருப்பி கொடுக்காத நிலையில், இதுகுறித்து ஆடிட்டரிடம் கேட்டபோது காலம் தாழ்த்தி வந்தார். ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மட்டும் திருப்பித் தந்த நிலையில், மீதமுள்ள ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை பலமுறை கேட்டும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்தார். நான் வங்கியில் பணம் பெற்ற நிலையில், வங்கிக்கு பணத்தை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதே சீட்டு நிறுவனத்தில் ரூ. 4 லட்சம் கடன் பெற்றேன். தற்போது அந்த சீட்டு பணத்தை கட்டச் சொல்லி மிரட்டி வருகிறார். ஏற்கனவே நான் வழங்கிய ரூ.6 லட்சத்தில், சீட்டு பணம் எடுத்து கொள்ள தெரிவித்தேன். ஆனால் இதை ஏற்க மறுத்து, என்னை பணம் கட்ட சொல்லி கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.

    இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் வேறு வழி இன்றி நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன். அதற்காகவே மரண வாக்குமூலம் எழுதியும் வைத்தேன். எனவே என்னை ஏமாற்றி கொலை மிரட்டல் விடுத்து வரும் ஆடிட்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    • ஒவ்வொரு ஊராட்சியிலும் பொங்கல் திருவிழாவானது சுகாதாரப் பொங்கல் மற்றும் சமத்துவப் பொங்கல் என்ற வகையில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
    • அனைத்து ஊராட்சிகளிலும் நாளை(வெள்ளிக்கிழமை) சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடப்பட உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டத்தில், ஒவ்வொரு ஊராட்சியிலும் பொங்கல் திருவிழாவானது சுகாதாரப் பொங்கல் மற்றும் சமத்துவப் பொங்கல் என்ற வகையில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் நாளை(வெள்ளிக்கிழமை) சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடப்பட உள்ளது.

    இந்நிகழ்வில் ஊராட்சியின் தலைவர், வார்டு உறுப்பினர்கள், அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

    ஊராட்சிகளில் பணி–யாற்றும் சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள் போன்ற ஊராட்சியின் அலுவலர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. கலைநிகழ்ச்சிகள், உள்ளூர் சார்ந்த விளையாட்டுகள், கோலப்போட்டிகள், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் போன்றவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கி வெற்றி பெற்றோரை பெருமைப்ப–டுத்தப்பட உள்ளது.

    சமத்துவ கருத்துக்களை வலியுறுத்தும் வகையில் பேச்சு போட்டி கோலப்போட்டி. குழுப்பாட்டு, நாடகம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட உள்ளது.

    மேலும், அனைத்து சமத்துவபுரங்களிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் அனைவரும் பொது இடத்தில் ஒன்று கூடி தங்களுக்குள் சமத்துவ உறுதி மொழியினை எடுத்துக் கொள்ள உள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பொங்கல் பண்டிகை வருகிற 15- ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தேவை அதிகரித்து, சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
    • கடந்த வாரம் மல்லிகை ஒரு கிலோ ரூ.1200, ரூ.1400, ரூ.1600 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.ஊ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பொங்கல் பண்டிகை வருகிற 15- ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தேவை அதிகரித்து, சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

    கடந்த வாரம் மல்லிகை ஒரு கிலோ ரூ.1200, ரூ.1400, ரூ.1600 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக மல்லிகை பூ கிலோ இன்று ரூ.2000- க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மற்ற பூக்களும் கணிசமாக விலை உயர்ந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்கள் இருக்கும் நிலையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது குறித்து வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் ( 1 கிலோ கணக்கில் ) வருமாறு :-

    மல்லிகை - ரூ.2000, முல்லை - ரூ.2000, ஜாதி மல்லி - ரூ.1000, காக்கட்டான் - ரூ.1000, கலர் காக்கட்டான் - ரூ.1000, மலை காக்கட்டான் - ரூ.900, சி.நந்தியா வட்டம் - ரூ.150, சம்பங்கி - ரூ.100, சாதா சம்பங்கி - ரூ.100, அரளி - ரூ.360, வெள்ளை அரளி - ரூ.360, மஞ்சள் அரளி - ரூ.360, செவ்வரளி - ரூ.400, ஐ.செவ்வரளி - ரூ.400, நந்தியா வட்டம் - ரூ.150.

    • கடந்த சில தினங்களாக வீச்சரிவால் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக போலீசாருக்கு கிடைத்தது.
    • இதையடுத்து மேட்டூர் ரயில் நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் மது அருந்த சென்ற போது அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் அருகே கருமலை கூடல் பகுதியைச் சேர்ந்த குமரவேல் மகன் சிபி வயது ( வயது 22 ). இவர் மீது கடந்த ஆண்டு கருமலை கூடல் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வீச்சரிவால் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து மேட்டூர் ரயில் நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் மது அருந்த சென்ற போது அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடி பாளையம் இந்திரா நகர் பகுதியில் மாட்டு கொட்டகையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
    • மேலும் இதில் மாட்டு கொட்டகை இருந்த பொருட்கள் உள்ளிட்டவர்கள் எரிந்து சேதமாகின.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடி பாளையம் இந்திரா நகர் பகுதியில் சேர்ந்தவர் தனபாக்கியம். இவருக்கு சொந்தமான தகரத்தால் வேயப்பட்ட மாட்டு கொட்டகையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சனைந்த அருகில் இருந்தவர்கள் மற்றும் தனபாக்கியம் உள்ளிட்டோர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தபோதும் தீ கொழுந்து விட்டு இருந்ததால் இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் இதில் மாட்டு கொட்டகை இருந்த பொருட்கள் உள்ளிட்டவர்கள் எரிந்து சேதமாகின.

    • சேலம் மாவட்டத்தில், ஒவ்வொரு ஊராட்சியிலும் பொங்கல் திருவிழாவானது சுகாதாரப் பொங்கல் மற்றும் சமத்துவப் பொங்கல் என்ற வகையில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
    • சமத்துவ கருத்துக்களை வலியுறுத்தும் வகையில் பேச்சு போட்டி கோலப்போட்டி. குழுப்பாட்டு, நாடகம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட உள்ளது. மேலும், அனைத்து சமத்துவபுரங்களிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டத்தில், ஒவ்வொரு ஊராட்சியிலும் பொங்கல் திருவிழாவானது சுகாதாரப் பொங்கல் மற்றும் சமத்துவப் பொங்கல் என்ற வகையில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் நாளை(வெள்ளிக்கிழமை) சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடப்பட உள்ளது.

    இந்நிகழ்வில் ஊராட்சியின் தலைவர், வார்டு உறுப்பினர்கள், அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

    ஊராட்சிகளில் பணி–யாற்றும் சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள் போன்ற ஊராட்சியின் அலுவலர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. கலைநிகழ்ச்சிகள், உள்ளூர் சார்ந்த விளையாட்டுகள், கோலப்போட்டிகள், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் போன்றவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கி வெற்றி பெற்றோரை பெருமைப்ப–டுத்தப்பட உள்ளது.

    சமத்துவ கருத்துக்களை வலியுறுத்தும் வகையில் பேச்சு போட்டி கோலப்போட்டி. குழுப்பாட்டு, நாடகம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட உள்ளது. மேலும், அனைத்து சமத்துவபுரங்களிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் அனைவரும் பொது இடத்தில் ஒன்று கூடி தங்களுக்குள் சமத்துவ உறுதி மொழியினை எடுத்துக் கொள்ள உள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அரசு மாதிரி ஆண்கள் மேல்நி லைப்பள்ளி போதைப் பொருள் தடுப்பு மன்றத்தின் சார்பில், சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரசார சைக்கிள் பேரணி மற்றும் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.
    • முன்னதாக, சாலை விதி மீறுதல், போதை பொருள்கள் உபயோகித்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மாணவர்களின் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில், அரசு மாதிரி ஆண்கள் மேல்நி லைப்பள்ளி போதைப் பொருள் தடுப்பு மன்றத்தின் சார்பில், சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரசார சைக்கிள் பேரணி மற்றும் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் ரவிசங்கர் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலைஞர்புகழ் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் குணாளன், கோபிநாத், தில்லையம்பலம், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வாழப்பாடி டி.எஸ்.பி ஹரிசங்கரி பேரணியை தொடங்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேருந்து நிலையம், தபால் நிலையம், அரசு மருத்துவமனை வரை சைக்கிளில் பேரணி

    யாக சென்று பொதுமக்களி டையே விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

    முன்னதாக, சாலை விதி மீறுதல், போதை பொருள்கள் உபயோகித்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மாணவர்களின் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில், வாழப்பாடி உதவி காவல் ஆய்வாளர்கள் கார்த்திக், சேட்டு, வீராங்கண்ணு, முகிலரசன், தலைமைக் காவலர் முருகன் மற்றும் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு

    களை, பள்ளி போதைப்பொ

    ருள் தடுப்பு மன்ற பொறுப்பா சிரியர் முனிரத்தினம், சாலை பாதுகாப்பு மன்ற

    பொறுப்பாசிரியர் சீனிவாசன், உடற்கல்வி இயக்குனர் குமார், ஆசிரியர்கள் பழனி முருகன், ராமமூர்த்தி, முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×