என் மலர்
சேலம்
- வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
- வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற 20-ந்தேதி சேலம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சார்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னனி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
பணிக்காலியிடங்களுக்கு நபர்களைத் தேர்வு செய்ய
வுள்ள தொழில் நிறுவனங்க ளும், சேலம் மாவட்டத்தைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் அதிக எண்ணிக்கையில் இம்முகா மில் கலந்துகொண்டு பய னடையலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
- அசோக் (வயது 20). தறி தொழிலாளி. இவர் நேற்று தன்னுடைய நண்பர்களுடன் கோரிமேட்டை அடுத்த ஜீவா நகரில் உள்ள கல்குவாரி அருகே மது அருந்திவிட்டு அங்குள்ள குட்டையில் குளித்தார்.
- அப்போது அசோக் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார்.
சேலம்:
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை நல்லறம் பட்டியலைச் சேர்ந்தவர் அசோக் (வயது 20). தறி தொழிலாளி. இவர் நேற்று தன்னுடைய நண்பர்களுடன் கோரிமேட்டை அடுத்த ஜீவா நகரில் உள்ள கல்குவாரி அருகே மது அருந்திவிட்டு அங்குள்ள குட்டையில் குளித்தார்.
அப்போது அசோக் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு தண்ணீரில் அசோக் மூழ்கியுள்ளார். அவருடைய நண்பர்கள் அவரை மீட்க முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார், செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் அசோக் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
அசோக் உடலை மீட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள் உடலை பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- சங்ககிரி போலீஸ் ஸ்டேஷன், போக்குவரத்து போலீஸ் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார இருசக்கர வாகன பேரணியை நடத்தியது.
- தியாகி தீரன்சின்னமலை நினைவு மண்டபம் வரை பேரணியாக சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி போலீஸ் ஸ்டேஷன், போக்குவரத்து போலீஸ் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார இருசக்கர வாகன பேரணியை நடத்தியது.
சங்ககிரி டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ், பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சங்ககிரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட போலீசார், இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரும் தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வி.என்.பாளையம், பட்டறைமேடு, பழைய பஸ் ஸ்டாண்ட், பவானி மெயின் ரோடு, பச்சக்காடு, பள்ளிபாளையம் பிரிவு சாலையில் உள்ள தியாகி தீரன்சின்னமலை நினைவு மண்டபம் வரை பேரணியாக சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
இதில் தலைக் கவசம் அணிவதின் அவசியம், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தேவி, தினகரன் (போக்குவரத்து), எஸ்.ஐ.க்கள் ஸ்ரீராமன், ராமச்சந்திரன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன முதன்மை மேலாளர், பொதுஜன தொடர்பு மற்றும் பாதுகாவல் அதிகாரி ஆத்மராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆத்தூரில் வாலிபரை தாக்கி முகமூடி கும்பல் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம், ஆத்தூர் 17-வது வார்டு வக்கீல் கிட்ட முஸ்தபா தெருவை சேர்ந்தவர் எலக்ட்ரீஷியன் நியாஸ் ( வயது 48). இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரது மகன் சையது அஸ்லாம் (18). இவர், நேற்றிரவு தனது நண்பரான சுல்தான் என்பவருடன் சேர்ந்து வீட்டில் டிவி பார்த்துக் கொண்டு இருந்தார். இருவரும் டீ குடிக்க வெளியே சென்றனர். பின்னர் மீண்டும் வீடு திரும்பியபோது, முகமூடி அணிந்த 3 பேர் வீட்டில் இருந்து வெளியே வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அவர்களை சையது அஸ்லாம் பிடிக்க முயற்சித்தார். அப்போது அந்த மர்மநபர்கள், திடீரென அஸ்லாமை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இதையடுத்து அஸ்லாம் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, 2 அறைகளில் இருந்த 2 பீரோவையும் உடைத்திருந்த மர்மநபர்கள், அதிலிருந்த ரூ.4.50 லட்சம், 20 பவுன் நகைகள், 1 1/2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஆத்தூர் நகர போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆத்தூரில் வாலிபரை தாக்கி முகமூடி கும்பல் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அணையிலிருந்து காவிரியில் 12,000 கன அடி தண்ணீரும், கால்வாயில் 400 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 12,400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1,328 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி சற்று அதிகரித்து விநாடிக்கு 1408 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது .
அணையிலிருந்து காவிரியில் 12,000 கன அடி தண்ணீரும், கால்வாயில் 400 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 12,400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
நேற்று 112.2 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று மேலும் சரிந்து 111.5 அடியாக சரிந்தது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இதே நிலையில் நீடித்தால், அணை நீர்மட்டம் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.
- சேலம் அன்னதானப்பட்டி அடுத்த மூலப்பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த தொழிலாளிக்கு கத்திகுத்து.
- பிரகாஷ் அருகில் இருந்த குவாட்டர் பாட்டிலை உடைத்து சுப்ரமணியை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் குடல் சரிந்து சுப்ரமணி மயங்கி விழுந்தார்.
அன்னதானப்பட்டி:
சேலம் அன்னதானப்பட்டி அடுத்த மூலப்பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுப்ரமணி ( வயது 60).
பிரகாஷ் (57). நண்பர்களான இவர்கள் இருவரும் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட் பகுதியில் மூட்டை
தூக்கும் கூலித் தொழிலாளர்க ளாக வேலை செய்து வருகின்ற னர்.
இந்த நிலையில் வேலை முடிந்து இருவரும் நேற்று இரவு தாதகாப்பட்டி சண்முக நகர் சந்திப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்த வந்தனர். தொடர்ந்து இருவரும் மது அருந்தி விட்டு பேசி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சுப்ரமணி பிரகாஷை தகாத வார்த்தைகளால் பேசியதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் அருகில் இருந்த குவாட்டர் பாட்டிலை உடைத்து சுப்ரமணியை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் குடல்
சரிந்து சுப்ரமணி மயங்கி விழுந்தார். இதனால் பதற்ற மடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அருகில் இருந்த வர்கள் படுகாயமடைந்த சுப்ர
மணியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2023-2024-ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் ெதாடங்குதல் , அங்கீகாரம் புதுப்பித்தல் தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பக் கட்ட ணமாக ரூ. 5 ஆயிரம் மற்றும் ஆய்வு கட்டணமாக ரூ. 8 ஆயிரம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.02.2023.
சேலம்:
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 2023-2024-ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் ெதாடங்குதல் , அங்கீகாரம் புதுப்பித்தல் தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
2023-2024-ஆம் கல்வி யாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போது
மானது. விண்ணப்பிக்க வுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பித்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்ட
ணம் மற்றும் ஆய்வுக்கட்ட ணம் RTGS, NEFT மூலம்
செலுத்த வேண்டும். அனைத்து தொழிற்பிரிவு களுக்கும் சேர்த்து விண்ணப்பக் கட்ட ணமாக ரூ. 5 ஆயிரம் மற்றும் ஆய்வு கட்டணமாக ரூ. 8 ஆயிரம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.02.2023. இதற்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேலும், அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறி
வுரைகளை அறிந்துகொள்ள www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், ricsalem7@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 94990 55827 என்ற கைப்பேசி எண் வாயிலாகவும் தொடர்பு கொண்டு பயனடையலாம் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
- வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. கடை வீதி, முதல் அக்ரஹாரம், ஓமலூர் சாலை, 5 ரோடு, பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அருணாச்சல ஆசாரி தெரு, சாரதா கல்லூரி சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து திருவிழா போல் காட்சியளித்தது.
- சேலம் புதிய பஸ்நிலையம், 5 ரோடு, அழகாபுரம் பகுதிகளில் கரும்புகள், மஞ்சள் குலைகள், விற்பனை களை கட்டி உள்ளது.
சேலம்:
உலகெங்கும் உள்ள தமிழ் மக்களால் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
பொங்கல் கொண்டாட்டம்
அனைவரும் புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கல் பொங்கி மேலே வரும்போது, அனைவரும் பொங்கலோ பொங்கல் என கூறி தங்கள் பொங்கல் வாழ்த்துக்களை ஒவ்வொருவருக்கும் பகிர்ந்து கொள்வார்கள். பொங்கல், கரும்பு, வெல்லம் மற்றும் தேங்காய் பழங்களைக் கொண்டு இறைவனுக்கு படையல் இட்டு அனைவருக்கும் பிரசாதமாக வழங்குவார்கள்.
இதையொட்டி, சேலத்தில் கரும்பு, மஞ்சள், பூைஜ பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்ற வருகிறது. அதுபோல் ஜவுளி நிறுவனங்களில் புது துணி எடுக்க பொதுமக்கள் படையெடுத்துள்ளனர்.
கடை வீதி, முதல் அக்ரஹாரம், ஓமலூர் சாலை, 5 ரோடு, பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அருணாச்சல ஆசாரி தெரு, சாரதா கல்லூரி சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து திருவிழா போல் காட்சியளித்தது.
ஆண்களும், பெண்களும் தங்களது குடும்பத்தி னருடன் ஜவுளி எடுக்க கடைவீதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். சேலம் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் ஜவுளி மற்றும் இதர பொருட்கள் வாங்குவதற்காக சேலத்திற்கு வந்திருந்தனர். சிறு, சிறு ஜவுளி கடைகளில் வியாபாரம் மும்முரமாக நடந்தது.செவ்வாய்ப்பேட்டை, சத்திரம், லீ பஜார், அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாப்பேட்டை, சேலம் புதிய பஸ்நிலையம், 5 ரோடு, அழகாபுரம் பகுதிகளில் கரும்புகள், மஞ்சள் குலைகள், விற்பனை களை கட்டி உள்ளது.
தற்காலிக கடைகள் ஆங்காங்கே அமைத்து விற்பனைக்கு மஞ்சள் குலைகள், கரும்புகள் குவித்து வைத்துள்ளனர். தினசரி சந்தைகள், வாழை பழங்கள் விற்பனை கடைகளும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து ஊர்காவல் படை, ஈடுபட்டுள்ளனர். மக்கள் கூடும் முக்கிய இடங்களில் போலீசார் அதிகளவு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். பல பகுதிகளில் பொறுத்தப்பட்ட நவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். உயர் போலீஸ் அதிகாரிகளும் வாகனங்களில் வந்து அடிக்கடி ரோந்து பணியில் வந்து கண்காணித்தப்படி சென்றனர்.
மாடுகளுக்கான அலங்கார பொருட்கள்
16-ந் தேதி மாட்டுப் பொங்கலன்று, மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவைகளை குளிப்பாட்டி, வர்ணம் பூசி, புது மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு கட்டப்படும். இதை யொட்டி, சேலத்தில் பல்வேறு பகுதி களில் மூக்கணாங்கயிறு, கழுத்து
கயிறு, ஜலங்கை உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்ப னைக்காக குவிக்கப்பட்டு உள்ளன. இது குறித்து
வியாபாரிகள் கூறுகையில், அயோத்தியாப்பட்டணத்தை சுற்றியுள்ளவலசையூர், ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலைபுதூர், சுக்கம்பட்டி, கூட்டாத்துப்பட்டி, பேளூர் உள்படபல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர்.
இவர்கள் பெரும்பாலும் அயோத்தி யாப்பட்ட ணத்திற்கு வந்து தங்கள் கால்ந டைகளுக்கு தேவையான அலங்கார பொருட்களை வாங்கிச் செல்வார்கள். இதற்காக மூக்கணாங்க யிறு, ஜலங்கை உள்பட பல்வேறு அலங்கார பொருட்கள் குவிக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு கயிறு ரூ.250 முதல் ரூ.750 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.
- சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
- 2-வது சனிக்கிழமை போகி பண்டிகை வருவதால் 3-வது சனிக்கிழமையான வருகிற 21-ந்தேதி ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் குறைதீர் முகாம் நடைபெறுகிறது
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளி
யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 2-வது சனிக்கிழமை போகி பண்டிகை வருவதால் 3-வது சனிக்கிழமையான வருகிற 21-ந்தேதி ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் குறைதீர் முகாம் நடைபெறுகிறது
இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து நிவர்த்தி பெறலாம். இக்குறைதீர் முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை வேண்டி முகாமில் கோரிக்கையினை அளிக்கும் பொதுமக்கள் மற்றும் அட்டைதாரர்கள் சார்பாக ஆன்லைன் பதிவுகளை அந்தந்த வட்ட அலுவலகங்கள் மூலமாக மேற்கொள்ளலாம்.
மேலும், செல்போன் எண் பதிவு , மாற்றம் செய்தலுக்கான தனியான கோரிக்கை மனு தேவைப்படின் அவற்றை யும் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளலாம். பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் அளிக்கலாம். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன்படி மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை முகாம்களில் அளித்து பயனடையலாம்.
இவ்வாறு அவர், அதில் தெரிவித்துள்ளார்.
- சேலம் மாவட்டம் பனம ரத்துப்பட்டி அருகே உள்ள கம்மாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தோட்டத்தில் 6 அடி நீளமுள்ள பெரிய புடலங்காய்.
- 1 கிலோ ரூ.20- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தைக்கு 3 அடி வரை நீளமுள்ள உள்ள புடலங்காய் விற்பனைக்கு வருவது வழக்கமாகும்.இந்த நிலையில் உழவர் சந்தைக்கு இன்று 6 அடி நீளமுள்ள பெரிய
புடலங்காய் விற்ப னைக்கு வந்தது. சேலம்
மாவட்டம் பனம ரத்துப்பட்டி அருகே உள்ள கம்மாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வள்ளி ( வயது 60) என்பவரின் தோட்டத்தில் இந்த புடலங்காய்கள் விளைந்துள்ளது.
இப்போது விற்ப னைக்கு வந்துள்ள புட லங்காய்கள் நாட்டு ரக பச்சை வரி புடலங்காய்கள் ஆகும். பந்தலில் விளைவித்த புடலங்காய்கள் என்பதால் இவை வழக்கமான புடலங்காய்களை விட நீளமான அளவில் உள்ளது. மேலும் இவற்றின் சுவை மற்ற ரகங்களை விட நன்றாகவே இருக்கும். 1 கிலோ ரூ.20- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவை வழக்கமான புடலங்காய்களை காட்டிலும் நீளமாக, பெரிய அளவில் இருப்பதால் இந்த புடலங்காய்களை உழவர் சந்தைக்கு வந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். மேலும் அவற்றின் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் வரை சீசன் காரணமாக இவற்றின் வரத்து அதிகமாக இருக்கும். என உழவர் சந்தை வேளாண் அலுவலர் மகேந்திரன் தகவல் தெரிவித்தார்.
- 15 தற்காலிக காலிப் பணியிடங்களுக்கும் தகுதி வாய்ந்த பணியாளர்கள் கொண்டு பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
- கணக்காளர் மற்றும் எழுத்தர் பதவிக்கு பி.காம் பட்டப் படிப்பு மற்றும் கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின்கீழ், தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி தேர்வு முகமை மூலம், வட்டார அளவில் காலியாக உள்ள, 2 வட்டார தொழில் நுட்ப மேலாளர் மற்றும் 12 உதவி தொழில் நுட்ப மேலாளர்கள், ஒரு கணக்காளர் மற்றும் எழுத்தர் என 15 தற்காலிக காலிப் பணியிடங்களுக்கும் தகுதி வாய்ந்த பணியாளர்கள் கொண்டு பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் பணியிடத்திற்கு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், கால்நடை மருத்துவ அறிவியல், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்புடன் கணினி இயக்கம் திறன் பெற்று இருக்க வேண்டும். உதவி தொழில் நுட்ப மேலாளர்களுக்கான பணியிடங்களுக்கு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொருளாதாரம், கால்நடை மருத்துவ அறிவியல், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆகிய பாடங்களில் இளநிலை பட்டப்படிப்புடன் கணினி இயக்கத் திறன் முடித்திருக்க வேண்டும். கணக்காளர் மற்றும் எழுத்தர் பதவிக்கு பி.காம் பட்டப் படிப்பு மற்றும் கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
இந்தபணியிடங்கள் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்படும். அரசு நிர்ணயித்துள்ள தொகுப்பூதியம் வழங்கப்படும். எனவே, அனுபவம் வாய்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற பணி நியமன முகமைகள், தங்களது முகமையின் அடிப்படை விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை திட்ட இயக்குநர்(வே.தொ.மே.மு), வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், நெ. 1, செரி ரோடு, திருவள்ளுவர் சிலை அருகில், சேலம் மாவட்டம்-636 001 என்ற முகவரிக்கு 10 நாட்களுக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
- 16-ந் தேதி மாட்டுப் பொங்கலன்று, மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவைகளை குளிப்பாட்டி, வர்ணம் பூசி, புது மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு கட்டப்படும்.
- ஜலங்கை உள்பட பல்வேறு அலங்கார பொருட்கள் குவிக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு கயிறு ரூ.250 முதல் ரூ.750 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.
சேலம்:
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. 16-ந் தேதி மாட்டுப் பொங்கலன்று, மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவைகளை குளிப்பாட்டி, வர்ணம் பூசி, புது மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு கட்டப்படும். இதை யொட்டி, சேலத்தில் பல்வேறு பகுதி களில் மூக்கணாங்கயிறு, கழுத்து
கயிறு, ஜலங்கை உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு உள்ளன. இது குறித்து
வியாபாரிகள் கூறுகையில், அயோத்தியாப்பட்டணத்தை சுற்றியுள்ள
வலசையூர்,ஆச்சாங்குட்டப்பட்டி, அடி மலைபுதூர், சுக்கம்பட்டி, கூட்டாத்துப்பட்டி, பேளூர் உள்படபல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அயோத்தியாப்பட்டணத்திற்கு வந்து தங்கள் கால்நடைகளுக்கு தேவையான அலங்கார பொருட்களை வாங்கிச் செல்வார்கள். இதற்காக மூக்கணாங்கயிறு, ஜலங்கை உள்பட பல்வேறு அலங்கார பொருட்கள் குவிக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு கயிறு ரூ.250 முதல் ரூ.750 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.






