search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்ககிரியில் போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
    X

    சங்ககிரியில் நடைபெற்ற இருச்சக்கர வாகன பேரணியை டி.எஸ்.பி.ஆரோக்கியராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி. 

    சங்ககிரியில் போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

    • சங்ககிரி போலீஸ் ஸ்டேஷன், போக்குவரத்து போலீஸ் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார இருசக்கர வாகன பேரணியை நடத்தியது.
    • தியாகி தீரன்சின்னமலை நினைவு மண்டபம் வரை பேரணியாக சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி போலீஸ் ஸ்டேஷன், போக்குவரத்து போலீஸ் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார இருசக்கர வாகன பேரணியை நடத்தியது.

    சங்ககிரி டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ், பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சங்ககிரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட போலீசார், இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரும் தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வி.என்.பாளையம், பட்டறைமேடு, பழைய பஸ் ஸ்டாண்ட், பவானி மெயின் ரோடு, பச்சக்காடு, பள்ளிபாளையம் பிரிவு சாலையில் உள்ள தியாகி தீரன்சின்னமலை நினைவு மண்டபம் வரை பேரணியாக சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

    இதில் தலைக் கவசம் அணிவதின் அவசியம், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தேவி, தினகரன் (போக்குவரத்து), எஸ்.ஐ.க்கள் ஸ்ரீராமன், ராமச்சந்திரன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன முதன்மை மேலாளர், பொதுஜன தொடர்பு மற்றும் பாதுகாவல் அதிகாரி ஆத்மராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×