என் மலர்
நீங்கள் தேடியது "The teenager tried to set himself on fire. வாலிபர் தீக்குளிக்க முயற்சி"
- திடீரென கலெக்டரின் அலுவலக நுழைவாயில் முன்பு, தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை கேனை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டு தீ பற்ற வைக்க முயன்றார்.
- ஆடிட்டர் ஒருவர் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கட்டினால் 40 வாரத்தில் ரூ.2 லட்சமாக தருவதாக கூறினார்.
சேலம்:
சேலம் மாவட்டம் கீரைபாப்பம்பாடி புதூர் பகுதியை சேர்ந்தவர் வைரவேல் (வயது 30). இவர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தார். பின்னர் திடீரென கலெக்டரின் அலுவலக நுழைவாயில் முன்பு, தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை கேனை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டு தீ பற்ற வைக்க முயன்றார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த, அங்கிருந்த அரசு வாகன ஓட்டுனர்கள், போலீசார் வைரவேலை தடுத்து நிறுத்தினர். பின்னர் அந்த வாலிபர் மீது போலீசார் தண்ணீர் ஊற்றினர். அவரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது வாலிபர் கூறும்போது, ஆடிட்டர் ஒருவர் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கட்டினால் 40 வாரத்தில் ரூ.2 லட்சமாக தருவதாக கூறினார். அதனை நம்பி பல்வேறு தவணைகள் மூலம் ரூ.6 லட்சம் கட்டினேன். இதுவரை எந்த பணமும் திருப்பி கொடுக்காத நிலையில், இதுகுறித்து ஆடிட்டரிடம் கேட்டபோது காலம் தாழ்த்தி வந்தார். ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மட்டும் திருப்பித் தந்த நிலையில், மீதமுள்ள ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை பலமுறை கேட்டும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்தார். நான் வங்கியில் பணம் பெற்ற நிலையில், வங்கிக்கு பணத்தை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதே சீட்டு நிறுவனத்தில் ரூ. 4 லட்சம் கடன் பெற்றேன். தற்போது அந்த சீட்டு பணத்தை கட்டச் சொல்லி மிரட்டி வருகிறார். ஏற்கனவே நான் வழங்கிய ரூ.6 லட்சத்தில், சீட்டு பணம் எடுத்து கொள்ள தெரிவித்தேன். ஆனால் இதை ஏற்க மறுத்து, என்னை பணம் கட்ட சொல்லி கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.
இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் வேறு வழி இன்றி நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன். அதற்காகவே மரண வாக்குமூலம் எழுதியும் வைத்தேன். எனவே என்னை ஏமாற்றி கொலை மிரட்டல் விடுத்து வரும் ஆடிட்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.






