search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்து இயக்கம்
    X

    சேலத்தில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்து இயக்கம்

    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் மூலம் நேற்று முதல் 14-ந் தேதி வரை சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
    • சேலம் மற்றும் திருவண்ணாமலைக்கும் என 400 சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் பயணிகள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக நேற்று முதல் 14-ந் தேதி வரை சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    சென்னையிலிருந்து சேலம், நாமக்கல், தர்மபுரி,

    கிருஷ்ணகிரி, ஓசூருக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படு கிறது. பெங்களூருவில் இருந்து சேலம், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணா மலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரிக்கும், ஓசூரிலிருந்து சேலம், திருச்சி, மதுரை, திருவண்ணா மலை, தர்மபுரி, கிருஷ்ணகிரிக்கும், சேலத்திலிருந்து மதுரை, திருச்சி, சிதம்பரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் மற்றும் விழுப்புரத்திற்கும், கோவை, திருப்பூரிலிருந்து சேலம் மற்றும் திருவண்ணாமலைக்கும் என 400 சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும், பண்டிகையை கொண்டாடி விட்டு திரும்ப ஏதுவாக, 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும், சேலம், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணா மலை, வேலூர், திருப்பத்தூர் கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களிலிருந்து பெங்களூருக்கும், சேலம், திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களிலிருந்து ஓசூருக்கும், மதுரை, கோவை, திருச்சி, சிதம்பரம், திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், விழுப்புரம் ஆகிய ஊர்களிலிருந்து சேலத்திற்கும், சேலத்திலிருந்து கோவை மற்றும் திருப்பூருக்கும் 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் கூடுதலாகவும் மற்றும் புறநகர் வழித்தட பேருந்துகள் மூலம் கூடுதல் நடைகளும் இயக்கப்படவுள்ளது. அனைத்து நேரங்களிலும் பயணிகள் தேவைக்கேற்ப கூடுதல் நகரப்பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று (12-ந் தேதி) முதல் 18-ந் தேதி வரை பயணிகள் கூட்டத்திற்கு ஏற்ப இரவு முழுவதும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    Next Story
    ×