என் மலர்
சேலம்
- பாசன தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது.
- இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.79 அடியாக குறைந்தது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஜூலை மாதம் தொடக்கத்தில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து ஜூலை மாதம் 28-ந் தேதியில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கும், அதனை தொடர்ந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
பாசன தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென குறைந்து வருகிறது.
இந்த ஆண்டில் அணை 2-முறை நிரம்பினாலும், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.79 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 1537 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 700 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பாசனத்துக்கு அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 நாட்களுக்கு பிறகு 100 அடிக்கு கீழ் குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அணையில் 64.56 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.
- மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
- கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர்.
காடையாம்பட்டி:
ஓமலூர் அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி மலை பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் இருசா கவுண்டர். இவரது மனைவி குமாரி (50). இவர்களுக்கு ஒரு மகன் இருந்தார். இந்த நிலையில் மகனும், கணவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் குமாரி மட்டும் கூலி வேலைக்கு சென்று தனியாக வசித்து வந்தார்.
குமாரி அருகில் வசித்து வரும் நீலா என்பவரது வீட்டிற்கு தினமும் டி.வி. பார்க்க சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குமாரி நீலா வீட்டிற்கு டி.வி. பார்க்க செல்லவில்லை.
மேலும் குமாரியும் வீட்டிற்கு வெளியே வரவில்லை. இதனால சந்தேகமடைந்த உறவினர்கள் இன்று காலை குமாரி வீட்டிற்கு வந்தனர். அப்போது அவர் வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது தெரியவந்தது.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல், ஓமலூர் டி.எஸ்.பி. சஞ்சய் குமார், தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். பின்னர் போலீசார் கொலை செய்யப்பட்ட குமாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மூதாட்டி குமாரி சொத்து தகராறில் கொலை செய்யப்பட்டாரா? மேலும் வேறு என்ன காரணம் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காவிரி டெல்டா பாசனத்துக்கு அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.
- அணைக்கு வினாடிக்கு 1386 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.
அதே நேரம் அணைக்கு வரும் தண்ணீரை விட காவிரி டெல்டா பாசனத்துக்கு அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.37 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1386 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 20 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 67.94 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர்கள் அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர்.
- உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மதிவேந்தன் பெற்றோர்களிடம் தெரிவித்தார்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஒரு அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். இப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டட திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று மாலை அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் உமா, ஈரோடு திமு.க. எம்.பி. பிரகாஷ் ஆகியோர் வந்தனர்.
இதனிடையே அமைச்சரின் வருகையை அறிந்த பள்ளி மாணவிகள் சிலர் பெற்றோர்களுடன் முன்னதாக பள்ளியின் முன்பு காத்திருந்தனர். அமைச்சர் காரில் வந்தபோது மாணவிகள், பெற்றோர்கள் அமைச்சரின் காரை முற்றுகையிட்டு அமைச்சரிடம் இப்பள்ளியில் உள்ள ஆசிரியர் மாணவிகளை சில்மிஷம் செய்கிறார். இதனால் எங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. பள்ளிக்கு அனுப்புவதே தயக்கமாக உள்ளது. எனவே தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர்கள் அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர். உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மதிவேந்தன் பெற்றோர்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க திட்டமிட்ட அந்த நபர் டம்மி ஏ.டி.எம். கார்டை வசந்தாவிடம் கொடுத்து விட்டு அவரது கார்டை எடுத்து கொண்டார்.
- ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அந்த நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
சேலம்:
சேலம் காமநாயக்கன்பட்டி ராஜா பட்டறையை சேர்ந்தவர் மகேந்திரன், இவரது மனைவி வசந்தா (58), இவர்களுக்கு தினேஷ் என்ற மகனும், நிஷாந்தி என்ற மகளும் உள்ளனர். தினேஷ் தனியார் நிறுவனத்தில் டிரைவராக உள்ளார். நர்சாக பணி புரிந்து வரும் நிஷாந்தி சேலத்தில் உள்ள ஒரு கல்லூரி விடுதியில் தங்கி உள்ளார். கணவர் இறந்து விட்டதால் வசந்தாவும், அதே கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணி புரிந்து வருவதுடன் மகளுடன் தங்கி உள்ளார்.
இவர்களுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்ட திட்டமிட்ட வசந்தா, பி.எப். பணத்தை எடுக்க விண்ணப்பித்திருந்தார். கடந்த 12-ந் தேதி அவரது வங்கி கணக்கிற்கு பணம் வந்தது. நேற்று முன்தினம் மாலை சாரதா கல்லூரி சாலையில் அழகாபுரம் போலீஸ் நிலையம் அருகே உள்ள வங்கி ஏ.டி.எம். மையத்தில் 500 ரூபாயை எடுக்க முயன்றார்.
அப்போது அவரது பின்னால் நின்றிருந்த ஒருவர் எந்திரத்தில் கை வைத்த படி வசந்தாவை நகரும் படி கூறினார். தொடர்ந்து ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த வசந்தாவின் ஏ.டி.எம். கார்டை எடுத்து விட்டு டம்மியான ஒரு ஏ.டி.எம். கார்டை வசந்தாவிடம் கொடுத்தார். அதனை கவனிக்காத வசந்தா அந்த கார்டையும், 500 ரூபாயையும் வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றார்.
சற்று நேரத்தில் வசந்தாவின் வங்கி கணக்கில் இணைக்கப்பட்ட அவரது மகள் நிஷாந்தியின் செல்போனுக்கு அடுத்தடுத்து 2 லட்சம் ரூபாய் எடுத்ததற்கான குறுந்தகவல் வந்தது. உடனே வசந்தாவை தொடர்பு கொண்டு மகள் கேட்ட போது 500 ரூபாய் மட்டுமே எடுத்ததாக கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நிசாந்தி மற்றும் வசந்தா ஆகிய 2 பேரும் அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர். அப்போது வங்கி கணக்கை முடக்கி விட்டோம், நாளை வந்து புகார் கொடுங்கள் என்று கூறி அனுப்பினர். ஆனால் நேற்று காலை 8 மணிக்கு மீண்டும் அடுத்தடுத்து ரூ. 40 ஆயிரம் பணம் எடுத்ததாக குறுந்தகவல் வந்தது.
இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த வசந்தா கண்ணீர் மல்க கதறிய படி அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். புகாரை வாங்கிய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்திய போது, ஏ.டி.எம். மையத்தில் வசந்தா பணம் எடுக்க முயன்ற போது பின்னால் நின்றிருந்த நபர் ஏ.டி.எம்.கார்டின் ரகசிய குறியீட்டு எண்ணை பார்த்துள்ளார்.
தொடர்ந்து அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க திட்டமிட்ட அந்த நபர் டம்மி ஏ.டி.எம். கார்டை வசந்தாவிடம் கொடுத்து விட்டு அவரது கார்டை எடுத்து கொண்டார்.
பின்னர் அந்த ஏ.டி.எம். கார்டு மூலம் பணத்தை எடுத்தார். வை-பை கார்டு என்பதால் ஒரே நாளில் அதிக அளவில் பணத்தை அந்த நபர் எடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து ஏ.டி.எம். கார்டை நூதன முறையில் வாங்கி பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து சென்ற நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளார்.
தொடர்ந்து அவர் பணம் எடுத்த ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அந்த நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர். விரைவில் அவர் சிக்குவார் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.
- 75 வயதான பாட்டியை பேரனே கற்பழித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த ஆலச்சம்பாளையம், காளி கவுண்டன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ரங்ககவுண்டர். இவரது மனைவி வள்ளியம்மா (75), இவர்களுக்கு 4 மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.
வள்ளியம்மாளின் கணவர் இறந்துவிட்ட நிலையில், வள்ளியம்மாள் தனக்கு சொந்தமான வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார், விவசாய கூலி வேலை செய்து வந்த வள்ளியம்மாள் வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு படுக்க சென்று நிலையில் சுமார் 8 மணி அளவில் அவர் வீட்டு முன் அறையில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் இது குறித்து எடப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வள்ளியம்மாளின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை நடந்த நேரத்தில் வள்ளியம்மாளின் வீட்டிற்கு வந்து சென்றவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொலை செய்யப்பட்ட வள்ளியம்மாளின் மகள் சின்னப்பொண்ணுவின் மகன் விக்னேஷ் (22) குடிபோதையில் வள்ளியம்மாளின் வீட்டிற்கு வந்து சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து விக்னேஷை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில் மது போதையில் இருந்த விக்னேஷ் தனது பாட்டி வள்ளியம்மாள் வீட்டிற்கு சென்றதும், அங்கு அவரை பலவந்தப்படுத்தி கற்பழித்த நிலையில், அவர் சத்தம் போடவே அவரை தாக்கியதால் அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்ததையும் ஒப்புக்கொண்டார்.
இதனை அடுத்து அவரை கைது செய்த எடப்பாடி போலீசார் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
75 வயதான பாட்டியை பேரனே கற்பழித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மாரியப்பனை வரவேற்ற மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
- இதைத் தொர்ந்து அவர் மக்கள் புடைசூழ அழைத்து செல்லப்பட்டார்.
பாரீஸில் நடைபெற்ற 2024 பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்றவர் தமிழக தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு. ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
இது பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் வென்ற மூன்றாது பதக்கம் ஆகும். பாராலிம்பிக்ஸில் பங்கேற்று சொந்த ஊர் திரும்பிய மாரியப்பனுக்கு மேளதாளங்கள் முழங்க உற்பசாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சொந்த ஊரில் மாரியப்பனை வரவேற்ற மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். இதைத் தொர்ந்து அவர் மக்கள் புடைசூழ அழைத்து செல்லப்பட்டார்.
இந்த முறை வெண்கலம் வென்றிருந்த நிலையில், அடுத்த பாராலிம்பிக்ஸில் நிச்சயம் தங்கம் வெல்வது உறுதி என மாரியப்பன் தங்கவேலு தெரிவித்தார். உடல்நிலை மற்றும் தட்ப வெப்பநிலை காரணமாக இந்த முறை தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்ததாக அவர் தெரிவித்தார்.
- மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் இல்லாமல் இருந்தது.
- கோடை காலம் போல் சுட்டெரிக்கும் வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
சேலம்:
தமிழகத்தில் வழக்கமாக மார்ச் 20-ந் தேதிக்கு மேல் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால் நடப்பாண்டு பிப்ரவரி 3-வது வாரத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. கோடை மழை இல்லாமல் நடப்பாண்டு வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.
குறிப்பாக ஏப்ரல்மாதம் முழுக்க வெயிலின் கொடுமை அதிகமாக இருந்ததால், அந்தமாதம் முழுவதும் 102 டிகிரி முதல் 108 டிகிரி வரை வெப்பநிலை நீடித்தது. பின்னர் மே மாதத்தில் ஓரிருநாட்கள் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் மெல்ல, மெல்ல குறைய தொடங்கியது. கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்டில் அவ்வப்போது மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வறண்ட வானிலை நிலவுகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வழக்கத்தை காட்டிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெயில் காரணமாக குழந்தைகள் முதல் வயதானவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகள், அலுவலக பணிக்கு செல்வோர் வெயில் தாக்கம் காரணமாக அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் வீடுகளில் கடும் புழுக்கம் ஏற்பட்டு வருகிறது.
சேலத்தில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் 88 முதல் 92 டிகிரி வரை வெப்ப நிலை பதிவானது. ஆனால் நடப்பு மாதம் தொடக்கத்தில் வெயிலின் அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது செப். 1-ந் தேதி 94.7 டிகிரியாக பதிவானது. 2-ந் தேதி 94.2, 3-ந் தேதி 92.8, 4-ந் தேதி 89.6, 5-ந்தேதி 95, 6-ந் தேதி 95.6, 7-ந் தேதி 93, 8-ந்தேதி 93.5, 9-ந் தேதி 94.5, 10-ந் தேதி 96, 11-ந் தேதி 92.5, 12-ந் தேதி 96.9, 13-ந் தேதி 97.1, 14-ந் தேதி 94.5, 15-ந் தேதி 97.2, நேற்று (16-ந்தேதி) 99.4 டிகிரியாக வெப்பநிலை அதிகரித்தது.
கோடை காலம் போல் சுட்டெரிக்கும் வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெயிலின் தாக்கம் காரணமாக இளநீர், தர்பூசணி பழங்கள் விற்பனையும் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரம் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது சுட்டெரிக்கும் வெப்பத்தால் மக்கள் தவியாய் தவித்து வருகிறார்கள்.
- சித்தேசுவரர் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
- 21 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்.
சேலம்:
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கஞ்சமலை அடிவாரத்தில் சித்தர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்தேசுவரர் சாமி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு மகா கணபதி, வெற்றி விநாயகர், ஞானசற்குரு பாலமுருகன், காளியம்மன் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.
இந்த கோவில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும்.
மன்னன் அதியமான், அவ்வைக்கு கொடுத்த கருநெல்லி இந்த கஞ்சமலையில் விளைந்ததாகும். இவ்வாறு பிரசித்தி பெற்ற இக்கோவில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து 21 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
காலை 4.30 மணிக்கு மேல் திருப்பள்ளி எழுச்சி, தமிழ்திருமுறை பாராயணம், காலை 7 மணிக்கு மாகாதீபாராதனை, யாக சாலையில் இருந்து திருவருள், திருக்குடங்கள் புறப்பாடு, காலை, 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் மூலஸ்தான, ராஜ கோபுர கும்பாபிஷேகம், காலை 7.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் பால முருகன் கோவில் கும்பாபிஷேகம், காலை, 7.35 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் காளியம்மனுக்கு கும்பாபிஷேகம், காலை 9 மணிக்கு மேல் 10.45 மணிக்குள் கஞ்சமலை சித்தேஸ்வரசாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 750-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணி க்கப்பட்டன. மேலும் சாதாரண உடையிலும் போலீசாரும் கண்காணி த்தனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
- மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பியது.
- டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து அங்குள்ள அணைகள் நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வந்ததால் மேட்டூர் அணையும் கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி நிரம்பியது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரத்தை பொறுத்து அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழையின் காரணமாக மீண்டும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 619 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 11 ஆயிரத்து 631 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. மேலும் அணையின் நீர்மட்டம் 112.39 அடியாக இருந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 23 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது.
நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டாலும், அதை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தற்போது அணையில் 81.85 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 114.14 அடியாக இருந்தது.
- அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருவதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
சேலம்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 114.14 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 10 ஆயிரத்து 706 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 10 ஆயிரத்து 642 கனஅடியாக குறைந்து காணப்பட்டது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருவதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
- அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
- அணையில் தற்போது 85.58 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 114.91 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 11 ஆயிரத்து 736 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 10 ஆயிரத்து 706 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
அணையில் தற்போது 85.58 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.






