என் மலர்tooltip icon

    சேலம்

    • வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள பழச்சாறு, இளநீர், கம்மங்கூழ், தர்பூசணி ஆகியவற்றை மக்கள் அதிகளவில் சாப்பிட்டு வருகின்றனர்.
    • சேலம் மார்க்கெட்டுக்கு முலாம் பழம் வரத்து அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.25 என்பதால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

    ேசலம்:

    சேலம் மாவட்டத்தில் தினமும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. முழுமையான கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே 97 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருகிறது. மதிய நேரங்களில் வெயில் தாக்கம் அதிகளவில் இருப்பதால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்ப டுகிறது.

    முலாம் பழம்

    வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள பழச்சாறு, இளநீர், கம்மங்கூழ், தர்பூசணி ஆகியவற்றை மக்கள் அதிகளவில் சாப்பிட்டு வருகின்றனர்.

    நடப்பாண்டில் ஆந்திரா மாநிலம் கடப்பாவில் முலாம்பழம் விளைச்சல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அங்கு முலாம் பழம் அறுவடை செய்து லாரிகளில் லோடு ஏற்றி சேலம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதனால் சேலம் மார்க்கெட்டுக்கு முலாம் பழம் வரத்து அதிகரித்துள்ளது.

    குவிப்பு

    ஒரு கிலோ ரூ.25 என்பதால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். அதேபோல் சாலையோர கடைகளிலும் முலாம்பழம் அதிகளவில் குவித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • தமிழகம்‌ முழுவதும்‌ போலி மற்றும்‌ காலாவதியான குடிநீர்‌, குளிர்பானம்‌ விற்பனையை தடுக்க, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்‌ பல்வேறு பகுதிகளிலும்‌ ஆய்வு செய்து வருகின்றனர்‌.
    • அதன்படி சேலம்‌ பழைய பஸ் நிலையம், புதிய பேருந்து நிலைய கடைகளில்‌, காலாவதி குளிர்‌பானங்கள்‌ விற்பனை செய்‌யப் படுகிறதா? என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்‌ கண்காணித்து வருகின்றனர்‌.

    சேலம்:

    கோடை காலம் தொடங்கியதை அடுத்து, தமிழகம் முழுவதும் போலி மற்றும் காலாவதியான குடிநீர், குளிர்பானம் விற்பனையை தடுக்க, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கண்காணிப்பு

    அதன்படி சேலம் பழைய பஸ் நிலையம், புதிய பேருந்து நிலைய கடைகளில், காலாவதி குளிர்பானங்கள் விற்பனை செய்யப் படுகிறதா? என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    குறிப்பாக மக்கள் நடமாட்டம் மிகுந்திருப்பதால் காலா வதியான குளிர்பா னங்களை கொடுத்தாலும், கவனிக்காமல் குடித்து விட்டு சென்று விடுவார்கள் என்ற எண்ணம் பெரும்பாலான கடைக்காரர்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே, சுகாதார அலுவலர்கள் முதலில் பேருந்து நிலைய கடைகளை குறி வைத்து களம் இறங்கியுள்ளனர். குடிநீர் பாட்டில் வாங்கும்போது ஐஎஸ்ஐ முத்திரை, அதன்மேல் பகுதியில் ஐஎஸ் எண், முத்திரைக்கு கீழ் பகுதியில் சிஎம்எல் எண்கள் இருக்க வேண்டும். பாட்டிலில் அடைக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி விவரங்களை பார்த்து நுகர்வோர் வாங்க வேண்டும்.

    கோடை சீசனில், கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்கள்தான் மிகவும் அச்சுறுத்தக்கூடியது. கார்பைடு கல்லில் இருக்கக்கூடிய அசிட்டிலீன் வாயு மூலம் மா, வாழை போன்றவை ½ மணி நேரம் முதல் 24 மணி நேரத்துக்குள் பழுக்க வைக்கப்படுகிறது. அவசரமாக கல்லா கட்டும் நோக்கத்தில், வியாபாரிகள் பலர் செயற்கையாக பழங்களை பழுக்க வைக்கின்றனர்.

    செயற்கையாக பழுக்க வைக்கப்படும் பழங்களை தொடர்ந்து உண்பதன் மூலம், நரம்பு மண்டலம், கல்லீரல், குடல், இரைப்பை பாதிக்கும். குழந்தைகள், முதியவர்கள் உட்கொண்டால் அவர்களுக்கு கடும் வயிற்றுப்போக்கு, ஓவ்வாமை ஏற்படலாம்.

    எனவே செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பொதுமக்கள் தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • சேலம் லைன்மேடு மெகபூப் நகர் பகுதியில் டீ மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கடனை கட்ட முடியததால் மனமுடைந்த காதர்கான் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சேலம்:

    சேலம் லைன்மேடு மெகபூப் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பஷீர்கான். இவரது மகன் காதர்கான் (வயது 23). இவர் லைன்மேடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்து டீக்கடை மாடியில் இருக்கும் அறையில் தங்குவது வழக்கம்.

    நேற்று வழக்கம் போல் வேலை முடிந்து அறைக்கு சென்று தங்கி உள்ளார். இன்று காலை வெகு நேரம் ஆகியும் கடைக்கு வராததால் சந்தேகம் அடைந்த கடையின் உரிமையாளர் அறைக்கு சென்று பார்த்த போது அங்கு காதர்கான் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது பற்றி அவர், உடனடியாக அன்ன தானப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் காதர்கானுக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள், பணத்தை அடிக்கடி கேட்டு, தொல்லை கொடுத்தனர். கடனை கட்ட முடியததால் மனமுடைந்த காதர்கான் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • சேலம் நெத்திமேடு, புத்தூர் இட்டேரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கீதா நேற்று வேலையில் இருந்த போது, கீதாவின் இடது கையில் போட்டிருந்த வளையல்கள் எந்திரத்தில் திடீரென மாட்டிக் கொண்டது.
    • இதில் கண்ணிமைக்கும் கண நேரத்தில், இயந்திரத்தோடு சேர்ந்து கையும் சுழன்றது. இதில் அவரின் மணிக்கட்டு பகுதி நசுங்கியது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் நெத்திமேடு, புத்தூர் இட்டேரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கீதா (வயது 52). இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர் நெத்திமேடு அருகே உள்ள பருப்பு மில்லில் வேலை செய்து வருகிறார்.

    நேற்று வேலையில் இருந்த போது, கீதாவின் இடது கையில் போட்டிருந்த வளையல்கள் எந்திரத்தில் திடீரென மாட்டிக் கொண்டது. இதில் கண்ணிமைக்கும் கண நேரத்தில், இயந்திரத்தோடு சேர்ந்து கையும் சுழன்றது. இதில் அவரின் மணிக்கட்டு பகுதி நசுங்கியது.

    படுகாயமடைந்து வலியால் துடித்த அவரை உடன் பணிபுரிவோர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1212 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 1224 கன அதிகரித்துள்ளது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1,500 கன அடியாக நீடிக்கிறது.

    அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1212 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 1224 கன அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 103.53 அடியில் இருந்து, 103.52 அடியாக சரிந்துள்ளது.

    • வாய்க்கால் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக, வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
    • பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 45 சென்ட் அரசு நிலத்தை மீட்டனர்.

    எடப்பாடி:

    எடப்பாடி அருகே அரசிராமணி ஒடசக்கரை பகுதியில் பொதுப்பணித்துறை வாய்க்கால் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக, வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சங்ககிரி தாசில்தார் பானுமதி உத்தரவின் பேரில் தேவூர் வருவாய் ஆய்வாளர் சத்தியராஜ் தலைமையில் கிராம நிர்வாக அலுவலகர் ஸ்ரீதர், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் விஜயராகவன் உள்ளிட்டோர் அங்கு சென்று, பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 45 சென்ட் அரசு நிலத்தை மீட்டனர்.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மருத்துவமனையின் டாக்டராக உள்ளார்.
    • ஏ.வி.ஆர் ரவுண்டாவில் உள்ள ஸ்டிக்கர் கடை வைத்திருக்கும் உதயகுமார் என்ப ருடன் பழக்கம் ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் ஜாகீர் அம்மாபா ளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மருத்துவமனையின் டாக்டராக உள்ளார். இவரது மனைவியும் சேலம் மாவட்டம் சங்ககிரியில் அரசு டாக்டராக உள்ளார். இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் மகனுக்கு, ஏ.வி.ஆர் ரவுண்டாவில் உள்ள ஸ்டிக்கர் கடை வைத்திருக்கும் உதயகுமார் என்ப ருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த சிறுவனின் அரை நிர்வாணம் படத்தை எடுத்து உதயகுமார், மாணவி ஒருவருடைய படத்துடன் மார்பிங் செய்து அந்த படத்தை டாக்டர் ரமேஷிடம் காட்டி 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டினார்.

    இந்த படத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த டாக்டர் ரமேஷ், தனது மகன் படத்தை ஏன் இப்படி செய்தீர்கள்? என கேட்டு எச்சரித்து அனுப்பினார்.

    இதனால் கோபம் அடைந்த உதயகுமார், தனது கடையில் வேலை செய்யும் தொளசம்பட்டியை சேர்ந்த கார்த்திக் (24), ஞானசேகரன் (22) ஆகியோரிடம் இது பற்றி தெரிவித்தார்.

    இதையடுத்து ஊழியர்கள் இருவரும் டாக்டர் வீட்டுக்கு சென்று அந்த படத்தை மீண்டும் காண்பித்து, அந்த படத்தில் இருக்கும் மாணவியின் தாய் விஷம் குடித்து மயங்கி விட்டதாகவும் கூறி 10 லட்சம் பணம் கேட்டு டாக்டரிடம் மிரட்டி உள்ளனர்.

    அங்கு அவர்கள் இரு வரையும் உட்கார வைத்து விட்டு சூரமங்கலம் போலீசா ருக்கு போனில் டாக்டர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார்த்திக், ஞானசேகரன் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் உதயகுமார், மற்றும் அவரது உறவுகார பெண்ணையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அம்மாப்பேட்டையில் பிரசித்தி பெற்ற குஞ்சு காளியம்மன் கோவில் உள்ளது.
    • நள்ளிரவில் நோட்டம் போட்டு அவற்றை மர்ம நபர்கள் திருடியிருப்பது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டையில் பிரசித்தி பெற்ற குஞ்சு காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரி நேற்று கோவிலில் பூஜை முடித்து விட்டு கதவை பூட்டி விட்டு சென்றார். பின்னர் இன்று காலை வந்து பார்த்தபோது அம்மனின் சூலாயுதம், கலசம் திருடு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நள்ளிரவில் நோட்டம் போட்டு அவற்றை மர்ம நபர்கள் திருடியிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து பூசாரி, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். அம்மாப்பேட்டை சுப்பிரமணிசாமி கோவில் அறநிலைய துறை செயல் அதிகாரி விமலா, அங்கு வந்து கோவிலில் நடந்த ெகாள்ளை குறித்து விசாரணை நடத்தினார்.

    தொடர்ந்து அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கைலாசநாதர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
    • பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு சிவ பெருமானை தரிசனம் செய்ய சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு சிவ பெருமானை தரிசனம் செய்ய சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அவ்வாறு நேற்றும் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், நெய் அபிஷேகம் செய்து மகா தீப ஆராதனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அலங்கரிக் கபட்ட சிவ பெருமான் ரிஷப வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டு கோவில் வளாகத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    • சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கடந்த 2-ந்தேதி அங்கு வந்த சத்யநாதன் உள்ளிட்ட சிலர், வாகுவாதம் செய்து, ராஜசேகரை தாக்கினர்.
    • அவரை தாக்கிய, சி.சி.டி.வி வீடியோ காட்சிகள் தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனால் இந்த சம்பவம் குறித்து தலைவாசல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பெரியேரியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 22). இவர் தலைவாசல் பஸ் நிலையத்தில் உள்ள தட்டச்சு பயிற்சி நிலையத்தல் தட்டச்சு பயிற்சி பெறுகிறார். கடந்த 2-ந்தேதி அங்கு வந்த சத்யநாதன் உள்ளிட்ட சிலர், வாகுவாதம் செய்து, ராஜசேகரை தாக்கினர். காயமடைந்த அவர், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தாக்கிய, சி.சி.டி.வி வீடியோ காட்சிகள் தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனால் இந்த சம்பவம் குறித்து தலைவாசல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், ராஜசேகருக்கும் சத்யநாதனுக்கும் இடையே கபடி தொடர்பாக முன்விரோதம் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே ராஜசேகர் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம், என்றனர்.

    • விபத்தில் மெய்யழகனுக்கு தலை, கை, கால்கள் படுகாயம் ஏற்பட்டது.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருப்பூர்:

    சேலம் அருகே உள்ள கருப்பூர் கொல்லத் தெரு பகுதி சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாரதா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

    இதில் மகன் மெய்யரசு ( வயது 16) சேலத்தில் உள்ள பள்ளியில் கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மீண்டும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயாராகி வந்தான், இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி கருப்பூர் அருகே காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

    இந்த திருவிழாவை காண செல்வதாக வீட்டில் கூறி விட்டு மெய்யரசு மோட்டார் சைக்கிளில் சென்றார் . அப்பொழுது கருப்பூர் ரெயில்வே சுரங்க பாலம் அருகே எதிரில் தனியார் பள்ளி பேருந்தும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராமல் பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் மெய்யழகனுக்கு தலை, கை, கால்கள் முறிந்தது. அவரை சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மெய்யரசு பரிதாபமாக இறந்தான். இந்த விபத்து குறித்து கருப்பூர் இன்ஸ்பெக்டர் தமிழரசி, வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மிட்டாய் தருகிறேன் என்று கூறி செல்வராஜ், சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.
    • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் செல்வராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் மேட்டுப்பாளையம் லத்துவாடி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 74). இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை வைத்து உள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி 8 வயது சிறுமி மிட்டாய் வாங்க பெட்டிக்கடைக்கு சென்றாள்.

    அப்போது மிட்டாய் தருகிறேன் என்று கூறி செல்வராஜ், சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதுகுறித்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் செல்வராஜை கைது செய்தனர்.

    இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் செல்வராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.

    மேலும் ஆயுள் தண்டனை பெற்ற செல்வராஜை கோவை மத்திய ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசார், அவரை அழைத்துச் சென்று கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    ×