என் மலர்
நீங்கள் தேடியது "Assault on teenager"
- சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கடந்த 2-ந்தேதி அங்கு வந்த சத்யநாதன் உள்ளிட்ட சிலர், வாகுவாதம் செய்து, ராஜசேகரை தாக்கினர்.
- அவரை தாக்கிய, சி.சி.டி.வி வீடியோ காட்சிகள் தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனால் இந்த சம்பவம் குறித்து தலைவாசல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பெரியேரியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 22). இவர் தலைவாசல் பஸ் நிலையத்தில் உள்ள தட்டச்சு பயிற்சி நிலையத்தல் தட்டச்சு பயிற்சி பெறுகிறார். கடந்த 2-ந்தேதி அங்கு வந்த சத்யநாதன் உள்ளிட்ட சிலர், வாகுவாதம் செய்து, ராஜசேகரை தாக்கினர். காயமடைந்த அவர், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தாக்கிய, சி.சி.டி.வி வீடியோ காட்சிகள் தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனால் இந்த சம்பவம் குறித்து தலைவாசல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ராஜசேகருக்கும் சத்யநாதனுக்கும் இடையே கபடி தொடர்பாக முன்விரோதம் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே ராஜசேகர் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம், என்றனர்.
- புதுவை வில்லியனூர் மெயின் ரோடு திருப்பதி பாலாஜி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ஜாக்சன்.
- பாத்திமா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து அண்ணன் இருதயராஜ் வீட்டில் வசித்து வருகிறார்
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் மெயின் ரோடு திருப்பதி பாலாஜி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ஜாக்சன் தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் சாமிபிள்ளை தோட்டத்தை சேர்ந்த பாத்திமா என்பவருக்கும் நட்பு ரீதியான பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
பாத்திமா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து அண்ணன் இருதயராஜ் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4-ந் தேதி இருதயராஜின் மனைவி வினிதாவிற்கும், பாத்திமாவிற்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
உடனே பாத்திமா ஜாக்சன் போன் செய்து தன்னை அழைத்து சென்று தனது தாய் வீட்டில் விடுமாறு கேட்டுள்ளார். உடனே ஜாக்சன் பாத்திமாவின் அண்ணன் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு பாத்திமாவிடம் ஜாக்சன் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது இருதயராஜ் நீ யார் என் தங்கையை அழைத்து செல்ல என கேட்டு தாக்க வந்துள்ளார். உடனே ஜாக்சன் அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில், இருதயராஜ், ஜாக்சனுக்கு போன் செய்து காமராஜர் மணிமண்டபம் அருகே வருமாறு அழைத்துள்ளார். ஜாக்சனும் அங்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இருதயராஜ் அவரது சித்தி மகன் அருள், மற்றும்
நண்பர்கள் ஜாக்சனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. ஜாக்சனும் பதிலுக்கு தாக்கியதாக தெரிகிறது. அங்கிருந்தவர்கள் உடனே இதுகுறித்து லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். லாஸ்பேட்டை போலீசார் விரைந்து சென்று அவர்களை சமா தான ப்படுத்தி போலீஸ் நிலையம் அழைத்து வந்து இருதரப்பி னர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






