என் மலர்
சேலம்
- தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு சராசரி வெப்ப நிலை உயர்ந்து வருகிறது.
- வழக்கமாக கத்திரி வெயில் காலம் என்று அழைக்கப்படும் சித்திரை மாதத்தில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
சேலம்:
தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு சராசரி வெப்ப நிலை உயர்ந்து வருகிறது. வழக்கமாக கத்திரி வெயில் காலம் என்று அழைக்கப்படும் சித்திரை மாதத்தில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது கோடை காலம் தொடங்கும் முன்பே, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் 97.9 டிகிரி வெயில் பதிவானது.
நேற்று 97.8டிகிரியாக பதிவாகி உள்ளது. வெப்பநிலை அதிகரித்து வருவதால், மதிய நேரங்களில் கடை வீதிகளில் மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக சேலத்தில் பழச்சாறு கடைகள், தர்பூசணி கடைகள், இளநீர் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் வீடுகளில் புழுக்கம் அதிகமாக உள்ளது.
- கலெக்டர் கார்மேகம் உத்தரவின் அடிப்படையில் பொது ஏலம் விடப்படும் என்று கடந்த 28-ந் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
- அரசு பணிமனை பொறியாளர் மதிப்பீட்டின்படி இந்த வாகனங்களுக்கு குறைந்த பட்ச தொகை நிர்ணயம் செய்து ஏலம் விடப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை சட்டத்தின்படி குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவின் அடிப்படையில் பொது ஏலம் விடப்படும் என்று கடந்த 28-ந் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுத படை மைதானத்தில் இன்று பொது ஏலம் விடப்பட்டது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், கூடுதல் காவல் கண்கா ணிப்பாளர் கென்னடி, காலால் உதவி ஆணையர் மாறன் உள்ளிட்டோர் தலைமையில் இந்த ஏலம் நடந்தது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சட்டத்தின்படி பறிமுதல் செய்யப்பட்ட 2, 3, 4 சக்கர வாகனங்களில் மொத்தம் 132 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.
அரசு பணிமனை பொறியாளர் மதிப்பீட்டின்படி இந்த வாகனங்களுக்கு குறைந்த பட்ச தொகை நிர்ணயம் செய்து ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் வாகனங்களை எடுப்ப தற்காக முன் பணம் கட்டிய 200-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். ஏலம் விடப்பட்ட வாகனங்களை அவரவர் விருப்பத்திற்கேற்ற வாறு ஏலத்தில் வாகனத்தை எடுத்து மீதி தொகையும் செலுத்திவிட்டு வாக னங்களை வாங்கி சென்றனர்.
- ஏற்காடு காக்கம்பாடியை சேர்ந்த பழனிகவுண்டர் மகன் சிவக்குமார் (வயது 40). மர வியாபாரம் செய்து வருகிறார்.
- கந்துவட்டி தொழில் செய்து வருபவரிடம் புரோக்கர் மூலம் எனது மாமனார் 2 அசல் பத்திரங்களை கொடுத்து ரூ.10 லட்சம் வாங்கினார்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காடு காக்கம்பாடியை சேர்ந்த பழனிகவுண்டர் மகன் சிவக்குமார் (வயது 40). மர வியாபாரம் செய்து வருகிறார். இவர் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
ஏற்காடு காக்கம்பாடி பகுதியில் கந்துவட்டி தொழில் செய்து வருபவரிடம் புரோக்கர் மூலம் எனது மாமனார் 2 அசல் பத்திரங்களை கொடுத்து ரூ.10 லட்சம் வாங்கினார். தற்போது வட்டி மற்றும் அசலை கட்டிவிட்டார்.
இதையடுத்து அசல் பத்தி ரத்தை திருப்பிக்கொடுங்கள் என்று நானும், மாமனாரும் கேட்டு வந்தோம். அவர் கொடுக்காமல் காலம் கடந்தி வந்தார்.
இந்நிலையில் கடந்த 1-ந் தேதி இரவு தோட்டத்திற்கு அழைத்துச் சென்ற கும்பல் தோட்டத்தில் வைத்திருந்த காப்பி கொட்டையை நான் திருடியதாக பொய்யாக கூறி மரத்தில் கட்டிவைத்து என்னை அடித்து துன்புறுத்தினார்கள். பின்னர் துப்பாக்கியை நெஞ்சில் வைத்து சுட்டுவிடுவேன் எனவும் மிரட்டினார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்து எனது மாமனார் மற்றும் மாமியார் அந்த இடத்திற்கு வந்து ஏன் அடிக்கின்றீர்கள் என்று கேட்டனர். அவர்களையும் மிரட்டிவிட்டு என்னை ஏற்காடு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
இன்ஸ்பெக்டர் என்னிடம் விசாரணை செய்துவிட்டு, நான் திருடியிருக்க மாட்டேன் எனக்கூறி என்மீது புகார் எதுவும் பதிவு செய்யாமல் எனது மாமனார், மாமியாருடன் அனுப்பி வைத்தார்.
தற்போது நான் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். எந்த தவறும் செய்யாத என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.
இதே புகார் மனுவினை சிவக்குமார் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் அனுப்பி உள்ளார்.
- கொலை செய்யப்பட்ட நிதி நிறுவன அதிபர் சரவணன், கைதான நாகராஜ் வினோத் ஆகியோரிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.1 லட்சம் வாங்கியுள்ளார்.
- சுமார் 4 வாரங்களில் ரூ.1 லட்சம் பணத்திற்கு இரட்டிப்பு தொகையை சரவணன் வழங்கினார்.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் குமரி பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 47), நிதி நிறுவன அதிபர். இவர் நேற்று முன்தினம் கொல்லிமலையில் உள்ள தங்கும் விடுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கொலையாளிகள் கொல்லிமலையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து போலீசார் அங்கு சென்று தலைமறைவாக இருந்த நாகராஜ், வினோத், ஜோசப், கவின், நவீன், நிஷாந்த் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட நிதி நிறுவன அதிபர் சரவணன், கைதான நாகராஜ் வினோத் ஆகியோரிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.1 லட்சம் வாங்கியுள்ளார். இதை தொடர்ந்து சுமார் 4 வாரங்களில் அந்த பணத்திற்கு இரட்டிப்பு தொகையை வழங்கினார். இதை அடுத்து நாகராஜ் ,வினோத் ஆகிய இருவரும் மீண்டும் சரவணனிடம் ரூ.10 லட்சம் கொடுத்தனர். ஆனால் அதற்கான இரட்டிப்பு தொகை வழங்காமல் சரவணன் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் சரவணன் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கைதான நாகராஜ், வினோத் ஆகியோர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி சரவணன் எங்களிடம் ரூ.10 லட்சம் பெற்று ஏமாற்றிவிட்டார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். இதையடுத்து நாங்கள் சரவணனிடம் நைசாக பேசி கொல்லிமலைக்கு அழைத்து சென்றோம். பின்னர் அங்கு உள்ள விடுதி அறையில் சரவணனை அடைத்து வைத்து பணத்தை எப்போது திருப்பி தருவாய் என கேட்டோம். அதற்கு அவர் எங்களிடம் கோபமாக பேசினார். இதனால் எங்கள் நண்பர்கள் நாமக்கல் மேட்டு தெருவை சேர்ந்த ஜோசப், கவின் மற்றும் நாமக்கல் சேர்ந்த நவீத், நிஷாந்த், ஆகியோரை வரவழைத்து மிரட்டினோம். அப்போது நடந்த வாக்குவாதத்தில் சரவணனை தாக்கினோம். இதில் பலத்த காயமடைந்த சரவணன் இறந்தார். இதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். போலீசார் விசாரணை நடத்தி கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் இன்று அதிகாலை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
- அணையின் நீர்மட்டம் இன்றும் 103.52 அடியாக நீடிக்கிறது. தற்போது 239 நாளாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக உள்ளது.
சேலம்:
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. தொடர் மழை காரணமாக அணை நிரம்பியது. பின்னர் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்ததால் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1,500 கன அடியாக நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1224 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 1373 கன அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் இன்றும் 103.52 அடியாக நீடிக்கிறது. தற்போது 239 நாளாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக உள்ளது.
- ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் துணிக்கடை, மளிகை கடை உள்ளிட்டவை உள்ளன.
- கடைகளில் நேற்று நள்ளிரவில் 5 இடங்களில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட முயற்சித்துள்ளனர்.
காகாபாளையம்:
சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையான காக்காபாளையம் பகுதியில் மளிகை கடை, பேன்சி ஸ்டோர், டீக்கடை மற்றும் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் துணிக்கடை, மளிகை கடை உள்ளிட்டவை உள்ளன. இந்த கடைகளில் நேற்று நள்ளிரவில் 5 இடங்களில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட முயற்சித்துள்ளனர்.
இது மட்டும் அல்லாமல் இப்பகுதியில் தொடர் திருட்டு மர்மமாகவே நடைபெற்று வருகிறது .இதனால் போலீசார் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .கடந்த வாரத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் இரண்டு முறை திருட முயற்சி நடந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள வீடு, கடைகளில் அடிக்கடி திருட்டு நடைபெறுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர். அதுவும் போலீஸ் நிலையம் மிக அருகாமையில் இருந்தும் திருடர்களின் துணிச்சலால் பொதுமக்கள் பயந்து போய் உள்ளனர். இதனை போலீசார் தீவிரமாக கண்காணித்து திருட்டு மர்ம நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடை உரிமையாளர்களும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டி இருப்பதாக புகார் எழுந்தது.
- நகராட்சி பணியாளர்கள் அப்பகுதிக்கு சென்று அளவீடு செய்து, ஜே.சி.பி வாகனங்கள் மூலம், அங்கு ஆக்கிரமித்து கட்டியுள்ள குடியிருப்புகளை இடித்து அகற்ற முற்பட்டனர்.
எடப்பாடி:
எடப்பாடி நகராட்சி 24-வது வார்டுக்கு உப்பட்ட, ஆலச்சம்பாளையம் பகுதியில் உள்ள வடக்கு தெருவில், சிலர் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டி இருப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து இன்று நகராட்சி பணியாளர்கள் அப்பகுதிக்கு சென்று அளவீடு செய்து, ஜே.சி.பி வாகனங்கள் மூலம், அங்கு ஆக்கிரமித்து கட்டியுள்ள குடியிருப்புகளை இடித்து அகற்ற முற்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த குடியிருப்பில் வசிக்கும் சித்ரா (37), பெருமாயி (57), பத்மா (23), அமுதா (33) ஆகிய 4 பெண்கள் திடீரென தங்கள் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ குளித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஆவேசமாக அப்பகுதியில் ஓடி வந்தனர். இதனால், அங்கு பதட்டமும் பரபரப்பும் நிலவியது.
சமாதான பேச்சுவார்த்தை
இதனை கண்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றியதுடன், அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த எடப்பாடி தாசில்தார் லெனின் தலைமையிலான வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட குடியிருப்பு வாசிகளிடம் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- காதர்கான் (வயது 23). இவர் லைன்மேடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
- டீக்கடை மாடியில் இருக்கும் அறையில் தங்குவது வழக்கம்.
சேலம்:
சேலம் லைன்மேடு மெகபூப் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பஷீர்கான். இவரது மகன் காதர்கான் (வயது 23). இவர் லைன்மேடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்து டீக்கடை மாடியில் இருக்கும் அறையில் தங்குவது வழக்கம்.
நேற்று வழக்கம் போல் வேலை முடிந்து அறைக்கு சென்று தங்கி உள்ளார். இன்று காலை வெகு நேரம் ஆகியும் கடைக்கு வராததால் சந்தேகம் அடைந்த கடையின் உரிமையாளர் அறைக்கு சென்று பார்த்த போது அங்கு காதர்கான் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றி அவர், உடனடியாக அன்ன தானப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் காதர்கானுக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள், பணத்தை அடிக்கடி கேட்டு, தொல்லை கொடுத்தனர். கடனை கட்ட முடியததால் மனமுடைந்த காதர்கான் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
- தமிழ்நாடு அரசு டாஸ்மாக் நிறுவனம் பல மண்ட ங்களாக செயல்பட்டு வருகிறது.
- கோடை காலத்தில் வெயில் கடுமையாக சுட்டெரிப்பதால் பீர் வகைகள் வாங்க வேண்டி டாஸ்மாக் கடைகளில் மதியம், மாலை நேரங்களில் குடிமகன்கள் அதிகம் பேர் கூடுகின்றனர்.
ேசலம்:
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் நிறுவனம் சேலம், திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி என மண்ட லங்களாக செயல்பட்டு வருகிறது. இதில் சேலம் மண்டலம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திரு வண்ணா மலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கியது.
ரூ.5 கோடி வருமானம்
இம்மாவட்டங்களில் 700-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சேலம் மாவட்டத்தில் 220 டாஸ்மாக் கடைகள் இருக்கி றது. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ. 4 கோடி முதல் ரூ.5 கோடி மதுபானங்கள் விற்பனை நடக்கிறது.
நடப்பாண்டு கோடை காலம் தொடங்கி உள்ளதால் பீர் வகைகளின் விற்பனை வழக்கத்தை விட 75 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே வேளையில் பிராந்தி, விஸ்கி, ரம் உள்ளிட்வை களின் விற்பனை 50 சதவீதம் சரிந்துள்ளது.
சுட்டெரிக்கும் வெயில்
கோடை காலத்தில் வெயில் கடுமையாக சுட்டெரிப்பதால் பீர் வகைகள் வாங்க வேண்டி டாஸ்மாக் கடைகளில் மதியம், மாலை நேரங்களில் குடிமகன்கள் அதிகம் பேர் கூடுகின்றனர். இதைத்தவிர வாரத்தின் வெள்ளிக்கி ழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கி ழமையில் டாஸ்மாக் கடை களில் கூட்டம் அலைமோது கிறது. இதில் இளைஞர்கள் தான் அதிகம் எண்ணிக்கையில் உள்ளனர்.
பீர் தட்டுப்பாடு
இதனால் டாஸ்டாக் கடைகளில் பீர் லோடுகள் வந்து இறங்கிய அடுத்த ஒரு சில மணி நேரங்களிலேயே அனைத்தும் விற்பனையாகி விடுகிறது. இதனால் பீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மது பிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கோடை காலம் என்பதால் பீர் வகைகள் அதிகளவில் விற்பனைக்கு அனுப்ப வேண்டும். கடைகளுக்கு எவ்வித பாகுபாடு இல்லாமல் மது பான சரக்குகள் சரா சரியாக இறக்குமதி செய்ய வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிமகன்கள் கூறுகின்றனர்.
இது குறித்து ஊழியர்க ளிடம் கேட்டபோது கோடை காலத்தில் பீர் வகைகள் மாவட்டத்தில் சில கடைகளுக்கு மட்டுமே டாஸ்மாக் நிர்வாகம் அதிக அளவில் அனுப்பி வைக்கிறது.
விற்பனை குறைவாக நடக்கும் மற்ற கடைகளுக்கு பிரிமீயம் சரக்குகள் அதிக ளவில் அனுப்பப்படுகிறது. குறிப்பாக இக்கடைகளுக்கு விலை குறைந்த மதுபானங்க ளும் குறைந்த எண்ணிக்கை யில் தான் வழங்கப்படுகிறது.
குறிப்பாக டாஸ்மாக் நிர்வாகம் சேலம் மண்ட லத்திற்கு குறைவாக பீர் வகை களை இறக்குமதி செய்வதே, இந்த தட்டுப்பாடுக்கு காரணம் என தெரிவித்தனர்.
- சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- சமையல் எரிவாயு விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்து வருகின்றனர்.
சேலம்:
மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமையல் எரிவாயு விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி கியாஸ் சிலிண்ட ருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மத்திய அரசு சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். திரும்பப் பெறாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்த னர். இந்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- ஏற்காடு பெட்பெட் ரோடு பகுதியில் பூசாரி தோட்டம் என்னும் தனியார் தோட்டத்தில் ஆண் மான் ஒன்று கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது.
- மானை கைப்பற்றி ஏற்காடு சூழல் சுற்றுலா பூங்காவிற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக வைத்தார்.
ஏற்காடு:
ஏற்காடு வனப்பகுதியில் மான்கள். காட்டெருமை, குரங்கு போன்ற வனவிலங்குகள் இருக்கின்றன. தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் ஏற்காடு பெட்பெட் ரோடு பகுதியில் பூசாரி தோட்டம் என்னும் தனியார் தோட்டத்தில் ஆண் மான் ஒன்று கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது. இதை தோட்டத்தில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்கள் பார்த்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.இதை தொடர்ந்து வனவர் சக்தி வேல் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மானை கைப்பற்றி ஏற்காடு சூழல் சுற்றுலா பூங்காவிற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக வைத்தார்.
இது குறித்து ஏற்காடு வனக்காப்பாளர் பழனிவேல் கூறுகையில், இறந்த மானுக்கு சுமார் 4 வயது இருக்கும். மர்ம விலங்கு கடித்ததில் மான் இறந்துள்ளது. மர்ம விலங்கு வீடுகளில் வளர்க்கப்படும் நாயாக இருக்கலாம். எனி னும் கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்தால் தான் அந்த மான் இறப்பு குறித்து தெரியவரும் என்றார்.
- குருசாமிபாளையம் சிவம் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பாக விழிப்புணர்வு சிலம்பம் உலகசாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- ஒரு மணி நேரம் ஒரு கையை கட்டிக்கொண்டும், ஒரு மணி நேரம் ஒரு கண்ணை கட்டிக்கொண்டும் தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றினர்.
சேலம்:
நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் மாற்றுத்திறனாளிகளின் ஊக்குவிக்கும் விதமாக சிவம் சிலம்பம் அறக்கட்டளை மற்றும் குருசாமிபாளையம் சிவம் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பாக விழிப்புணர்வு சிலம்பம் உலகசாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 3வயது முதல் 21வயது வரை உள்ள மாணவ- மாணவிகள் சுமார் 300 பேர் கலந்து கொண்டு, ஒரு மணி நேரம் கால்களை முட்டி போட்டுக் கொண்டும், ஒரு மணி நேரம் ஒரு கையை கட்டிக்கொண்டும், ஒரு மணி நேரம் ஒரு கண்ணை கட்டிக்கொண்டும் தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றினர்.
மேலும் 7 வயது மாணவன் பரித்ராஜ் மற்றும் 12-வயது மாணவி இனியா ஆகியோர் 15அடி உயரத்தில் 6200ஆணிகள் பதித்த ஆணி பலகையின் மீது நின்று ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி அசத்தினர். இந்த உலக சாதனை நிகழ்ச்சியை குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளி செயலாளர் அர்த்தனாரி "மாதிரி ஒலிம்பிக் தீபம்" ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஜெட்லி புக் ஆப் நிறுவனம் மாணவர்க ளின் முயற்சியை உலக சாதனையாக அங்கீகரித்து, அதன் நிறுவனர் ஜெட்லி மாணவர்களுக்கு உலகசாதனை சான்றிதழ், மெடல் வழங்கினார்,
மேலும் சிவம் சிலம்பம் அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டது,
நிகழ்ச்சியை சிவம் சிலம்பம் அறக்கட்டளை நிறுவனரும் சிலம்பம் தற்காப்புக்கலை பயிற்சியக தலைமை ஆசானுமான வே.மாதையன் தலைமையில் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் முன்நின்று நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குருசாமி பாளையம் சிவம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் பயிற்சியாளரும்,மல்லூர் ஆல் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவரு மான தமிழ்ச்செல்வன் செய்தி ருந்தார்.






