search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "finance company owner murder"

    • கொலை செய்யப்பட்ட நிதி நிறுவன அதிபர் சரவணன், கைதான நாகராஜ் வினோத் ஆகியோரிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.1 லட்சம் வாங்கியுள்ளார்.
    • சுமார் 4 வாரங்களில் ரூ.1 லட்சம் பணத்திற்கு இரட்டிப்பு தொகையை சரவணன் வழங்கினார்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் குமரி பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 47), நிதி நிறுவன அதிபர். இவர் நேற்று முன்தினம் கொல்லிமலையில் உள்ள தங்கும் விடுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கொலையாளிகள் கொல்லிமலையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து போலீசார் அங்கு சென்று தலைமறைவாக இருந்த நாகராஜ், வினோத், ஜோசப், கவின், நவீன், நிஷாந்த் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

    கொலை செய்யப்பட்ட நிதி நிறுவன அதிபர் சரவணன், கைதான நாகராஜ் வினோத் ஆகியோரிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.1 லட்சம் வாங்கியுள்ளார். இதை தொடர்ந்து சுமார் 4 வாரங்களில் அந்த பணத்திற்கு இரட்டிப்பு தொகையை வழங்கினார். இதை அடுத்து நாகராஜ் ,வினோத் ஆகிய இருவரும் மீண்டும் சரவணனிடம் ரூ.10 லட்சம் கொடுத்தனர். ஆனால் அதற்கான இரட்டிப்பு தொகை வழங்காமல் சரவணன் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் சரவணன் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கைதான நாகராஜ், வினோத் ஆகியோர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி சரவணன் எங்களிடம் ரூ.10 லட்சம் பெற்று ஏமாற்றிவிட்டார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். இதையடுத்து நாங்கள் சரவணனிடம் நைசாக பேசி கொல்லிமலைக்கு அழைத்து சென்றோம். பின்னர் அங்கு உள்ள விடுதி அறையில் சரவணனை அடைத்து வைத்து பணத்தை எப்போது திருப்பி தருவாய் என கேட்டோம். அதற்கு அவர் எங்களிடம் கோபமாக பேசினார். இதனால் எங்கள் நண்பர்கள் நாமக்கல் மேட்டு தெருவை சேர்ந்த ஜோசப், கவின் மற்றும் நாமக்கல் சேர்ந்த நவீத், நிஷாந்த், ஆகியோரை வரவழைத்து மிரட்டினோம். அப்போது நடந்த வாக்குவாதத்தில் சரவணனை தாக்கினோம். இதில் பலத்த காயமடைந்த சரவணன் இறந்தார். இதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். போலீசார் விசாரணை நடத்தி கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் இன்று அதிகாலை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    பொள்ளாச்சி நிதி நிறுவன அதிபர் கொலையில் 2 பேரிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் மணிமேகலை வீதியை சேர்ந்தவர் கந்தசாமி (47) நிதி நிறுவன அதிபர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள சிங்காநல்லூரில் புதரில் கந்தசாமி பிணமாக கிடந்தார். அவரது தலையில் வெட்டு காயம் இருந்தது. அவர் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    மேலும் அவர் அணிந்திருந்த செயின், சட்டை பையில் வைத்திருந்த பணம் ஆகியவை மாயமாகி இருந்தது. கந்தசாமியை கொலை செய்து விட்டு நகை, பணத்தையும் கொலையாளிகள் எடுத்து சென்றுள்ளனர். இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கந்தசாமி கொலை தொடர்பாக பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 2 பேரிடம் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தனிப்படையினர் தெரிவித்தனர். #Tamilnews
    பொள்ளாச்சியில் நிதி நிறுவன அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியை அடுத்த வடுகபாளையம் மணிமேகலை வீதியை சேர்ந்தவர் கந்தசாமி (47). நிதி நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து சென்ற கந்தசாமி பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் பொள்ளாச்சியை அடுத்துள்ள சிங்காநல்லூர் நீரேற்று நிலையம் அருகே உள்ள முட் புதரில் தலையில் பலத்த காயத்துடன் கந்தசாமி பிணமாக கிடந்தார்.

    அவரை யாரோ மர்ம நபர்கள் கடத்தி கொலை செய்து பிணத்தை புதருக்குள் வீசி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது.

    கொலையாளிகளை பிடிக்க வால்பாறை டி.எஸ்.பி. சுப்பிரமணியம் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் இன்ஸ்பெக்டர் அம்மாத்துரை மற்றும் போலீசார் இடம் பெற்றுள்ளனர். இந்த தனிப்படையினர் கந்தசாமியை கடத்தி கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கந்தசாமியின் உறவினர்கள், நண்பர்கள், தொழில் ரீதியாக தொடர்பில் உள்ளவர்கள் என பலரிடம் தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.

    கந்தசாமி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை கொலையாளிகள் எடுத்து சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. #Tamilnews
    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நிதிநிறுவன அதிபரை கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் மணிமேகலை வீதியை சேர்ந்தவர் கந்தசாமி(47). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கார் புரோக்கராகவும், கார் வாங்க நிதி உதவியும் செய்து வந்தார்.

    இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள சிங்காநல்லூரில் புதருக்குள் தலையில் வெட்டு காயத்துடன் ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக பொதுமக்கள் இன்று ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது பிணமாக கிடந்தவர் பொள்ளாச்சியை சேர்ந்த நிதிநிறுவன அதிபர் கந்தசாமி என்பது தெரியவந்தது. அவரது தலையில் பலத்த வெட்டு காயம் இருந்தது. அவரை மர்மநபர்கள் கடத்தி கொலை செய்துவிட்டு பிணத்தை புதருக்குள் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    ×