என் மலர்
சேலம்
- பிளஸ்-1, பிளஸ்-1 வகுப்புகளுக்கு இந்த மாதம் பொதுத் தேர்வு தொடங்க உள்ளது.
- தேர்வு மையங்கள் அமைப்பதால் தேர்வு நடக்கும் காலை நேரத்தில் மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகளில் பாடம் நடக்காது.
ேசலம்:
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-1 வகுப்புகளுக்கு இந்த மாதம் பொதுத் தேர்வு தொடங்க உள்ளது.
இந்த தேர்வு நாட்களில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைப்பதால் தேர்வு நடக்கும் காலை நேரத்தில் மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகளில் பாடம் நடக்காது.
இந்த நிலையில் தேர்வு மையங்கள் அமைக்கப்–பட்டுள்ள பள்ளிகளில் மட்டும் பொதுத்தேர்வு நடக்கும் நாட்களில் எல்.கே.ஜி. முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகளை நடத்த வேண்டும் என பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் கல்வி பாதிக்காத வகையில் காலை பொதுத் தேர்வு முடிந்ததும், மதியம் மற்ற வகுப்புகளுக்கு பாடம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.
- 2016-ம் ஆண்டு சிறுமியை கடத்திய குற்றத்திற்காக சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
- ஆனால் விசாரணைக்கு 6 மாதங்களாக அவர் ஆஜராகவில்லை.
சேலம்:
சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த நடுவனேரியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 28).
இவர் மீது கடந்த 2016-ம் ஆண்டு சிறுமியை கடத்திய குற்றத்திற்காக சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சேலம் ேகார்ட்டில் நடைபெற்று வந்தது.
ஆனால் விசாரணைக்கு 6 மாதங்களாக அவர் ஆஜராகவில்லை. இதனால் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று போலீசார், அவரை கைது செய்தனர்.
- சேலம் மாவட்டத்தில் தேர்வுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
- இதேபோல் ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கான முதன்மை கண்காணிப்பாளர்களாக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருப்பார்கள்.
ேசலம்:
தமிழகத்தில் நடப்பாண்டிற்கான பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. அதனை தொடர்ந்து 14-ந்தேதி முதல் பிளஸ்-1 தேர்வுகளும், அடுத்த மாதம் 6-ந்தேதி முதல் 10-ம் வகுப்பு தேர்வும் ெதாடங்குகிறது.
சேலம் மாவட்டம்...
சேலம் மாவட்டத்தில் தேர்வுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பொதுத்தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள அறை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், முதன்மை கண்காணிப்–பாளர்கள், வழித்தட அலு–வலர்கள், பறக்கும் படை அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் தேர்வு செய்து, பணி ஒதுக்கீடு, செய்யப்பட்டு வருகிறது.
பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு பணிகளை பொறுத்தவரை பெரும்பாலும் முதுகலை ஆசிரியர்களே ஈடுபடுத்தப்–படுவார்கள். கூடுதல் தேவை ஏற்படும் நிலையில் மட்டும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்படும்.
இதேபோல் ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கான முதன்மை கண்காணிப்–பாளர்களாக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருப்பார்கள். இதனிடையே நடப்பாண்டு மாநிலம் முழுவதும் ஏராளமான பள்ளிகளில் புதிதாக தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் முதன்மை கண்கா–ணிப்பாளர் பொறுப்பிற்கு போதுமான தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து நடப்பாண்டு மேல்நிலைப்–பள்ளிகளில் பணிபுரிந்து வரும் மூத்த முதுநிலை ஆசிரியர்களை முதன்மை கண்காணிப்பா–ளர்களாக நியமித்துக்–கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி–யுள்ளது.
முதன்மை கண்காணிப்பாளர்கள்
அதனை ெதாடர்ந்து சேலம் மாவட்டத்தில் தலைமை ஆசிரியர் இல்லாத தேர்வு மையங்களில் முதன்ைம கண்காணிப்–பாளர்களாக மூத்த முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட பள்ளிக்–கல்வித்துறை மும்முரமாக செய்து வருகிறது.
- 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் மத்திய அரசு சார்பில் (என்எம்எம்எஸ்) செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.
- இந்த தேர்வு மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உள்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
சேலம்:
நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் மத்திய அரசு சார்பில் (என்எம்எம்எஸ்) செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.
6,695 பேர் தேர்வு செய்யப்படுவர்
இந்த தேர்வு மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உள்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 முடிக்கும் வரை மாதம் ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
அதன்படி நடப்பு ஆண்டுக்கான தேர்வு கடந்த மாதம் 25-ந்தேதி (சனிக்கிழமை) நடை பெற்றது. மாநிலம் முழுவதும் 847 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை 2 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் ஆர்வமுடன் எழுதினர்.
சேலம் மாவட்டத்தில் 11,602 மாணவ, மாணவிகள் இந்த தேர்வினை எழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 42 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. காலை 9.30 மணி முதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும், 11.30 முதல் 1 மணி வரை படிப்பறிவுத் திறன் தேர்வும் நடந்தது. தேர்வில் மொத்தம் 11,407 பேர் கலந்து கொண்டு தேர்வெழுதினர்.
இந்த நிலையில் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு அரசு தேர்வுகள் இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ளது. அதை மாணவர்கள் அரசு தேர்வுகள் இயக்க இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அதன் விபரங்களை உரிய ஆவணங்களுடன் வருகிற 14-ந்தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
- தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு சராசரி வெப்ப நிலை உயர்ந்து வருகிறது.
- தற்போது கோடை காலத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சேலம்:
தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு சராசரி வெப்ப நிலை உயர்ந்து வருகிறது. வழக்கமாக கத்திரி வெயில் காலம் என்று அழைக்கப்படும் சித்திரை மாதத்தில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது கோடை காலத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சேலத்தில்...
சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. தினந்தோறும் சராசரியாக 97, 98, 99 டிகிரி என்ற அளவில் வெயில் பதிவாகிறது.
இதனால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குடைபிடித்தபடி செல்கின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள் தலை மற்றும் முகத்தில் வெயில் படாதபடி துணியை போர்த்தி பயணிக்கின்றனர்.
மதிய நேரங்களில் அனல் காற்று வீசுவதால், பொதுமக்கள் அவதி அடைகின்றனர். இதனால் கடை வீதிகள், சந்தைகளில் மக்கன் நடமாட்டம் குறைந்துள்ளது.
குளிர்ச்சியான பானங்கள்...
வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள பழச்சாறு, இளநீர், கம்மங்கூழ், தர்பூசணி, சர்பத், கரும்புச்சாறு உள்ளிட்ட கடைகளுக்கு படையெடுக்கின்றனர்.
இதனால் பழச்சாறு கடைகள், தர்பூசணி கடைகள், இளநீர் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
சுற்றுலா தலங்களுக்கு படையெடுப்பு
தற்போது பொதுமக்கள் வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்ள வார இறுதி நாட்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கின்றனர். இதனால் ஏற்காடு, மேட்டூர், குரும்பப்பட்டி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஏற்காட்டில், அந்த 2 நாட்களும் முகாமிட்டு, குளிர்ந்த காற்று மற்றும் இதமான சீதோஷ்ண நிலையை அனுபவிக்கின்றனர். அங்கு 2 நாட்களும் மகிழ்ச்சியுடன் இயற்கையை ரசித்து விட்டு மாலையில் வீடு திரும்புகின்றனர்.
டாக்டர்கள் அறிவுரை
பகல் மற்றும் இரவு நேரங்களில் வீடுகளில் புழுக்கம் அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். குழந்தைகளுக்கு வெப்ப அலர்சியும் ஏற்படுகிறது.
வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ள வீடு மற்றும் சுற்றுபுறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு உடலில் உள்ள வெப்ப நிலை அதிகரிக்காமல் சீராக வைத்திருப்பதற்கு இளநீர், நுங்கு, பதநீர், பழங்கள், சுத்தமான குடிநீர் உள்ளிட்ட ஆரோக்கியமான பானங்களை கொடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
- சேலம் அரிசிபாளையம் தெப்பகுளம் அருகில் விநாயகர் கோவில் உள்ளது.
- கோவில் உள்ள வெண்கல தட்டு, டம்ளர், பித்தளை மணி மற்றும் பூஜை பொருட்களை கேட் மேல் ஏறி குதித்து யாரோ மர்ம ஆசாமி திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
சேலம்:
சேலம் அரிசிபாளையம் தெப்பகுளம் அருகில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் 5 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் கோவிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவது வழக்கம். இங்கு பாதுகாப்புக்காக கோவிலை சுற்றி கம்பியால் காம்பவுண்டு போடப்பட்டுள்ளது.
நேற்று வழக்கம்போல் பூசாரி மற்றும் பக்தர்கள் கோவிலுக்கு சென்றனர். அப்போது கோவில் உள்ள வெண்கல தட்டு, டம்ளர், பித்தளை மணி மற்றும் பூஜை பொருட்களை கேட் மேல் ஏறி குதித்து யாரோ மர்ம ஆசாமி திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
கோவில் உண்டியலில் இருக்கும் பணத்தை கொள்ளையடித்து செல்லும் எண்ணத்துடன் வந்த திருடன் உண்டியல் இல்லாததால் அங்கிருந்த பொருட்களை எடுத்து சென்றுள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவில் வாசலில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது. அருகில் உள்ள கோவில்களில் பண்டிகை என்றால் இந்த கோவிலுக்கு வந்து சக்தி அழைப்பது வழக்கம். ஆண்டுதோறும் மார்கழி மாதம் அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறந்து சிறப்பு அலங்காரம் செய்யப்படும். இந்த கோவிலில் திருட்டு போய் இருப்பது அந்த பகுதி மக்களிடையே ச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரிசிபாளையம் சுளுக்கு பிள்ளையார் கோவிலுக்கு பக்தர்கள் கொடுத்த கோவில் மாடு திருட்டு போனது. கோவில்களில் தொடர்ந்து திருட்டுகள் நடப்பதால் இந்த செயல்களில் ஈடுபடும் மர்ம நபர்களை போலீசார் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் இதுபோல் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இரவு நேரங்களில் 12 மணிக்குமேல் அதிகாலை 4 மணிக்குள் போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்று கோவி லுக்கு வரும் பக்தர்களும், பொதுமக்களும் கூறுகிறார்கள்.
- சேலம் ஜான்சன்பேட்டை காவேரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
- தொடர்ந்து கோவில் விழா நேற்று மாவிளக்கு பூஜையுடன் தொடங்கியது.
சேலம்:
சேலம் ஜான்சன்பேட்டை காவேரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. தொடர்ந்து கோவில் விழா நேற்று மாவிளக்கு பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து ஜான்சன்பேட்டை பக்தர்கள் திரளானவர்கள் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வந்தனர். பின்னர் கோவிலில் பூஜை செய்யப்பட்டது. அதன்பிறகு மேளதாளம், ஆட்டம், பாட்டத்துடன் மாவிளக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ஜான்சன்பேட்டை காவேரி மாரியம்மன் நண்பர்கள் குழு தலைவர் தேவதாஸ், செயலாளர் சண்முகவேல், பொருளாளர் ஏழுமலை, துணை செயலாளர்கள் கரிகாலன், பழனி, சிலம்பரசன், மோகன் ஆகியோர் செய்திருந்தனர்.
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
- நேற்று 103.52 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 103.51 அடியாக சரிந்தது.
மேட்டூர்:
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்துள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1,500 கன அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1,373 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,211 கன அடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று 103.52 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 103.51 அடியாக சரிந்தது.
- வடபத்திர காளியம்மன் கோவி திருவிழா நடைபெற்றது.
- மாலையில் நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாட்டில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.
வாழப்பாடி:
வாழப்பாடி காளியம்மன் நகர் பாப்பான் ஏரிக்கரையில் உள்ள வடபத்திர காளியம்மன் கோவி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மன் கோவிலில் இருந்து காளியம்மன் கோவிலுக்கு, மாரியம்மன், செல்லியம்மன் மற்றும் முனியப்பன் சுவாமிகள் விருந்துக்கு அழைத்தல் நிகழ்ச்சியும், மறுநாள் காலை சாமி குடியழைத்தல், அரண்மனை கிடா பலியிடுதல் மற்றும் ஊரணி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
நேற்று பக்தர்கள் கரகம் எடுத்தல், அலகு குத்துதல் மற்றும் அங்கபிரசங்கம் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சிகளும், சுவாமிக்கு எருமைக்கிடா பலி கொடுக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாட்டில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். புஷ்ப அலங்காரத்தில் மூலவரான வடபத்திர காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவையொட்டி, பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற தெருக்கூத்து
நாடகத்தை நுாற்றுக்கணக்கா னோர், இரவு முழுக்க கண்விழித்திருந்து கண்டுகளித்தனர். நிறைவாக, இன்று (செவ்வாய்க்கிழமை) சுவாமி அலங்காரம், வாண
வேடிக்கை, உற்ச மூர்த்தி
திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது. விழா விற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா அய்யாகவுண்டர் குடும்பத்தினர் செய்திருந்தனர்.
- கல்வ ராயன்மலை கருமந்துறையில் குடியிருப்புகள், அரசு அலு வலகங்கள், வாரச்சந்தை மற்றும் கடைவீதி அமைந்துள்ள பிரதான சாலையில், தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது.
- கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென இப்பகுதி மக்கள் கடந்த 4 ஆண்டாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வாழப்பாடி:
வாழப்பாடி அருகே கல்வ ராயன்மலை கருமந்துறையில் குடியிருப்புகள், அரசு அலு வலகங்கள், வாரச்சந்தை மற்றும் கடைவீதி அமைந்துள்ள பிரதான சாலையில், தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. இதனால், இப்பகுதியில் குடிமகன்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென இப்பகுதி மக்கள் கடந்த 4 ஆண்டாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், டாஸ்மாக் கடை இடம் மாற்றம் செய்யப்ப டாததால் ஆத்திரமடைந்த இப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு சென்று டாஸ்மாக் கடை முன்பாக அமர்ந்து மறியி லில் ஈடுபட்டதோடு, உடனடியாக இடம் மாற்றம் செய்யக்கோரி ஆர்பாட்டம் செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் அன்புசெழியன், டாஸ்மாக் மேலாளர் குப்பு சாமி, வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி. ஹரிசங்கரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் டாஸ்மாக் கடை இடம் மாற்றம் செய்யப்ப டுமென, அதிகாரிகள் உறுதியளித்ததால், போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.
இதனால், 2 மணி நேரம் நீடித்த பொதுமக்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஓரிரு மாதங்களில் டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்யாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என மக்கள் தெரிவித்து கலைந்து சென்றனர்.
- சம்பத் (வயது 65). இவரது மனைவி நியாய விலை கடையில் பணிபுரிந்து வருகிறார்.
- இரும்பாலை போலீசாரும் சூரமங்கலம் தீயணைப்பு வீரர்களும் வந்து தீயை போராடி அணைத்தனர்.
சேலம்:
சேலம் திருமலைகிரி பெரிய மாரியம்மன் கோவில் அருகில் வசித்து வருபவர் சம்பத் (வயது 65). இவரது மனைவி நியாய விலை கடையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று சம்பத் வீட்டை பூட்டிக் கொண்டு மனைவியுடன் வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மதியம் இவரது வீடு தீப்பற்றி எரிந்தது.
இரும்பாலை போலீசாரும் சூரமங்கலம் தீயணைப்பு வீரர்களும் வந்து தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் வீட்டிலிருந்த சொகுசு கார் மற்றும் குளிர்சாதன பெட்டி, டி.வி., மெத்தை, கம்ப்யூட்டர், பீரோ உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ராஜ்குமார் வேலை செய்து வருகிறார்.
- சித்தா காலேஜ் அருகே சென்று கொண்டி ருந்தபோது சாலையில் இருந்த மண்ணில் சிக்கி 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
சேலம்:
சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்பட்டி கார் காடு பகுதி சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ராஜ்குமார் (வயது 27). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். ஈரோட்டில் உள்ள ஒரு தனி யார் நிறுவனத்தில் ராஜ்கு மார் வேலை செய்து வரு கிறார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 8.30 மணி அளவில் ராஜ்குமார் ஒரு மோட்டார் சைக்கிளில் இளம்பிள்ளை அருகே உள்ள எருமாத்தனூர் பகுதியைச் சேர்ந்த வெங்க டாசல மகன் தமிழ்ச்செல்வன் (23),பெரு மாம்பட்டி ஏரிக்காடு பகுதி சேர்ந்த பரமசிவம் மகன் வைத்தீஸ்வரன்(18) ஆகி யோருடன் சித்தர் கோயில் மெயின் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
தனியார் சித்தா காலேஜ் அருகே சென்று கொண்டி ருந்தபோது சாலையில் இருந்த மண்ணில் சிக்கி 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜ்கு மார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் தமிழ்ச்செல்வன் மற்றும் வைத்தீஸ்வரன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து புகாரின் பேரில் இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






