என் மலர்
நீங்கள் தேடியது "Change of school class time"
- பிளஸ்-1, பிளஸ்-1 வகுப்புகளுக்கு இந்த மாதம் பொதுத் தேர்வு தொடங்க உள்ளது.
- தேர்வு மையங்கள் அமைப்பதால் தேர்வு நடக்கும் காலை நேரத்தில் மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகளில் பாடம் நடக்காது.
ேசலம்:
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-1 வகுப்புகளுக்கு இந்த மாதம் பொதுத் தேர்வு தொடங்க உள்ளது.
இந்த தேர்வு நாட்களில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைப்பதால் தேர்வு நடக்கும் காலை நேரத்தில் மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகளில் பாடம் நடக்காது.
இந்த நிலையில் தேர்வு மையங்கள் அமைக்கப்–பட்டுள்ள பள்ளிகளில் மட்டும் பொதுத்தேர்வு நடக்கும் நாட்களில் எல்.கே.ஜி. முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகளை நடத்த வேண்டும் என பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் கல்வி பாதிக்காத வகையில் காலை பொதுத் தேர்வு முடிந்ததும், மதியம் மற்ற வகுப்புகளுக்கு பாடம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.






