என் மலர்tooltip icon

    சேலம்

    • ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • வட்டாட்சி யர் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மார்ச் மாதம் 2-வது சனிக்கிழமையான வருகிற 11-ந்தேதி ஒவ்வொரு வட்டாட்சி யர் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்.

    இந்த முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், கைபேசி எண் பதிவு மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்தலுக்கான மனு பெற்ற உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதன்பேரில் உரிய நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • அம்மன் கோவில் அருகே கன்னங்குறிச்சி, சின்னண்ணன் தெருவை சேர்ந்த ராஜா என்பவரை வழிமறித்து 2,800 ரூபாயை பறித்தார்.
    • இதை தட்டிக்கேட்ட பொது மக்களை, கத்தியை காட்டி மிரட்டி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    சேலம்:

    சேலம் கோரிமேடு சீதா கார்டனை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 40). பிரபல ரவுடி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்ேததி பெரிய கொல்லப்பட்டி அம்மன் கோவில் அருகே கன்னங்குறிச்சி, சின்னண்ணன் தெருவை சேர்ந்த ராஜா என்பவரை வழிமறித்து 2,800 ரூபாயை பறித்தார். இதை தட்டிக்கேட்ட பொது மக்களை, கத்தியை காட்டி மிரட்டி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர். விசாரணையில், அவர் மீது 2022-ல் கன்னங்குறிச்சி, அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் வழிப்பறி வழக்கு தற்போது நிலுவையில் இருப்பதும், மேலும் 2005, 2014, 2017, 2018, 2020- ஆகிய ஆண்டுகளில் வரிசையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.

    இந்த நிலையில் அவர் ஜாமீனில் வெளியே வந்து தொடர்ந்து குற்றச் செயல்க ளில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜய குமாரி நேற்று உத்தர விட்டார். அதன்படி போலீ சார், கார்த்திக்கை கைது செய்து சேலம் மத்திய சிறை யில் அடைத்தனர். இதனை தொடர்ந்து 6-வது முறை யாக அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது,

    • தமிழகத்தில் நடப்பாண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வருகிற 13-ந்ேததியும், பிளஸ்-1 பொதுத் தேர்வுகள் வருகிற 14-ந்தேதி யும் தொடங்குகிறது.
    • இந்த தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசு தேர்வுகள் இயக்ககம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழகத்தில் நடப்பாண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வருகிற 13-ந்ேததியும், பிளஸ்-1 பொதுத் தேர்வுகள் வருகிற 14-ந்தேதி யும் தொடங்குகிறது.

    மாநிலம் முழுவதும் சுமார் 15 லட்சம் மாண வர்கள் எழுதும் இந்த தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசு தேர்வுகள் இயக்ககம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்க ளுக்கான செய்முறை தேர்வு கள் கடந்த 1-ந்தேதி நேற்று முன்தினம் (7-ந்தேதி) முடிவடைந்தது.

    சேலம்

    சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 325 அரசு பள்ளிகள், மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளை சேர்ந்த 16,706 மாணவர்கள், 19,436 மாணவிகள் என மொத்தம் 36,142 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதுகின்றனர்.

    இதேபோல் 18,830 மாண வர்கள் 20,443 மாணவிகள் என மொத்தம் 39,273 பேர் பிளஸ்-2 தேர்வு எழுது கின்றனர். இதுதவிர தனித்தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர்.

    விடைத்தாள்

    பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம் அடுத்த மாதம் 10-ந்தேதி தொடங்க உள்ளது. முதல் நாளில் தலைமை விடை திருத்துனர் மட்டும் திருத்த பணிகளை மேற்கொள்வார். அதன் பிறகு 11-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை உதவி விடை திருத்துனர்கள் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வர். இந்த பணிகள் ஏப்ரல் மாத கடைசி வாரத்தில் முடிவடைகிறது.

    • தளவாய்பட்டியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
    • நாளை காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை சந்தாதாரர்கள், பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை தொழில் அதிபர்கள், மாலை 4 மணி முதல் 5 மணி வரை விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ளலாம்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை ரோடு தளவாய்பட்டியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சிவகுமார் தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் ஹிமான்ஷூ தலைமையிலும், ஈரோடு மாவட்ட அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் வீரேஷ் தலைமையிலும் நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

    நாளை காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை சந்தாதாரர்கள், பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை தொழில் அதிபர்கள், மாலை 4 மணி முதல் 5 மணி வரை விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ளலாம்.

    இக்கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அது குறித்த விவரங்களுடன் தங்களது பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், யு.ஏ.என். எண், தொலைபேசி எண் மற்றும் செல்போன் எண்கள் ஆகிய விவரங்களுடன் கலந்து கொள்ளலாம் என்று சேலம் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மத்திய அரசால் திறக்கப்பட்டுள்ள 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் மூலம் அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.
    • இந்த மருந்தகங்களில் கிடைக்கும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் பிரபல நிறுவனங்க ளின் விலையைவிட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவாக இருக்கின்றன.

    சேலம்:

    மக்களுக்கு குறைவான விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதை நோக்க மாகக் கொண்டு, நாடு முழுவ தும் மக்கள் நல மருந்தகங்கள் எனும் மலிவு விலை மருந்தகங்களை மத்திய அரசு திறந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மத்திய அரசால் திறக்கப்பட்டுள்ள 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்த கங்கள் மூலம் அனைத்து மக்க ளுக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.இந்த மருந்தகங்களில் கிடைக்கும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் பிரபல நிறுவனங்க ளின் விலையைவிட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவாக இருக்கின்றன. குறைவான விலையில் மருந்து கிடைப்பதால், அதிக விலையுடைய மருந்துகளை வாங்கும் நெருக்கடியில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.

    சேலத்தில்...

    தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவையில் 56, ஈரோட்டில் 29, சேலத்தில் 27, திருப்பூரில் 13, நாமக்கல்- 13, மக்கள் நல மருந்த கங்கள் செயல்படுகின்றன.

    இந்த நிலையில் மத்திய அரசு இவற்றின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவ தும் மக்கள் மருந்த கங்களின் எண்ணிக்கையை 10,000-ஆக அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு மும்முரமாக பணியாற்றி வருகிறது.

    • தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ் நாட்டு வைத்தியம், பாரம்பரிய மருத்துவ பயிற்சி குறித்தான கருத்தரங்கம் நடைபெற்றது.
    • இதில் ஏற்காடு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வனத்துறை சார்பில், சேலம் மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமி முன்னிலையில் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ் நாட்டு வைத்தியம், பாரம்பரிய மருத்துவ பயிற்சி குறித்தான கருத்தரங்கம் நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கில் சேலம் மாவட்ட வன அலுவலர் ஷசாங் ரவி, உதவி வனபாதுகாவலர்கள் கண்ணன் மற்றும் சிவகுமார், இமாசல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா மாவட்ட வனப்பாதுகாவலர் ரெஜினால்டு ராய்டன், ஏற்காடு உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் பாலமுருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

    இதில் ஏற்காடு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். கருத்தரங்கில் பேசிய சேலம் மாவட்ட வனப்பாதுகாவலர் பெரியசாமி, வனத்தையும், வனப்பகுதியில் உள்ள மூலிகை செடிகளையும் எவ்வாறு பாதுகாப்பது என்று பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்.

    பின்னர் பேசிய சித்த மருத்துவர் பாலமுருகன், நம் அதிகம் பயன்படுத்தும் நெல்லிக்காய், எலுமிச்சை, முருங்கை, முடக்கத்தான் கீரை, கீழாநெல்லி, சீத்தாப்பழம், கருவேப்பிலை, புதினா, வேம்பு போன்றவற்றின் பலன்களை விளக்கி கூறினார். முடிவில் ஏற்காடு வனச்சரக அலுவலர் பழனிவேல் நன்றி கூறினார்.

    • விவசாய நிலம் ராயணம்பட்டி அருகே உள்ள வையாபுரி காட்டுவளவு என்னும் பகுதியில் உள்ளது.
    • அவரது வயலில் 2 மயில்கள் இறந்து கிடப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் கொங்கணா புரம் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, கோரணம் பட்டி ஊராட்சி, ராயணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சித்தன் (வயது 50).

    இவருக்கு சொந்தமான விவசாய நிலம் ராயணம்பட்டி அருகே உள்ள வையாபுரி காட்டுவளவு என்னும் பகுதியில் உள்ளது. அதில் சித்தன் ராகி பயிர் சாகுபடி செய்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை அவரது வயலில் 2 மயில்கள் இறந்து கிடப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் கொங்கணா புரம் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மயில்களின் உடல்களை கைப்பற்றினர்.

    சித்தன் ராகி வயலில் பூச்சிக்கொல்லி மருந்து வைத்த நிலையில், அவற்றை சாப்பிட்ட மயில்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில், விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என்றும் விசாரணை நடக்கிறது.

    விவசாய நிலத்தில் மயில்கள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இயற்கை பூச்சி விரட்டியான ஐந்திலைக் கரைசலின் தயாரிப்பு முறை மற்றும் அதனை உபயோகிக்கும் முறை பற்றிய செயல் விளக்கத்தினை அளித்தனர்.
    • இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதால் செயற்கை பூச்சி விரட்டி களின் உபயோகத்தினை குறைத்து , சுற்றுச்சூழல் மாசுபாட்டினைக் குறைக்கிறது என்று கூறினர்.

    மகுடஞ்சாவடி:

    மகுடஞ்சாவடி அருகே உள்ள கூடலூர் கிராமத்தில் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி மாணவிகள் நடத்தும் கிராம வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் சார்பாக விவசாயிகளுக்கு இயற்கை பூச்சி விரட்டியான ஐந்திலைக் கரைசலின் தயாரிப்பு முறை மற்றும் அதனை உபயோகிக்கும் முறை பற்றிய செயல் விளக்கத்தினை அளித்தனர். இக்கரைசலானது வேப்பிலை, புங்கம், ஆடாதோடா, எருக்கு, ஊமத்தை ஆகிய இலைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டு நிழலுள்ள பகுதியில் வைத்து சேமிக்கப்படுகிறது.

    இது இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதால் செயற்கை பூச்சி விரட்டி களின் உபயோகத்தினை குறைத்து , சுற்றுச்சூழல் மாசுபாட்டினைக் குறைக்கிறது என்று கூறினர். நிகழ்ச்சியில் ஏராளமனா விவசயிகள் காலந்து கொண்டனர்.

    • மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
    • நேற்று 103.51 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 103.50 அடியானது.

    மேட்டூர்:

    காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1,500 கன அடியாக நீடிக்கிறது. அதேசமயம் மேட்டூர்அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 1,211 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,223 கன அடியாக அதிகரித்து உள்ளது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று 103.51 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 103.50 அடியானது.

    • கோவிந்தன் என்பவரின் குடும்பத்திற்கும் நிலபிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
    • மாற்றுதிறனாளி தங்கையை கோவிந்தனின் மகன் செல்வமணி (24) தகாத வார்த்தையால் திட்டி அடித்து காயப்படுத்தியதாக தெரிகிறது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள செம்மண் கூடல் காலனி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பொண்ணு (வயது 44). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் குடும்பத்திற்கும் நிலபிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று சின்னபொண்ணுவின் மாற்றுதிறனாளி தங்கையை கோவிந்தனின் மகன் செல்வமணி (24) தகாத வார்த்தையால் திட்டி அடித்து காயப்படுத்தியதாக தெரிகிறது.

    இதுபற்றி செல்வமணி மீது சின்னபொண்ணு தாரமங்கலம் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வமணியை கைது செய்தனர்.

    • அரசு நகர்புற மருத்துவ நிலையங்களில் தற்காலிகமாக டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர் நிலை-2 மற்றும் உதவியாளர்கள் பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
    • இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு நகர்புற மருத்துவ நிலையங்களில் தற்காலிகமாக டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர் நிலை-2 மற்றும் உதவியாளர்கள் பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 84 பதவிகள் நிரப்பப்படுகிறது.

    இதில் டாக்டர்கள்- 28, பல்நோக்கு சுகாதார பணியா ளர்கள்- 28, உதவியாளர்கள்-28 பதவிடங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாளை மறுநாள் (10-ந்தேதி) அன்று மாலை 5.45 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

    டாக்டர்கள் பதவிக்கு கல்வித்தகுதி எம்.பி.பி.எஸ், அல்லது அதற்கு மேற்பட்ட மருத்துவ படிப்பு படித்திருக்க வேண்டும். பல்நோக்கு சுகாதார பணியாளர் பதவிக்கு பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி பட்டம் பெற்று இருக்க வேண்டும். உதவியாளர்கள் பதவிக்கு 8-ம் வகுப்பு சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் படிவங்கள் நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் பழைய நாட்டாண்மை கழக கட்டட வளாகம்சே லம் மாவட்டம்-636001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    • அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜி (வயது 71). இவருக்கு 2 மகனும் மஞ்சு (28) என்ற ஒரு மகளும் உள்ளனர்.
    • இளம்பிள்ளைக்கு சேலை மடிக்கும் வேலைக்கு சென்று வந்தார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் 7-வது வார்டு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜி (வயது 71). இவருக்கு 2 மகனும் மஞ்சு (28) என்ற ஒரு மகளும் உள்ளனர். மஞ்சுவிற்கு திருமணம் ஆகிவிட்டது. அவர் கணவரை பிரிந்து தந்தை ராஜி வீட்டில் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மேலும் இளம்பிள்ளைக்கு சேலை மடிக்கும் வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 3-ந்தேதி வேலைக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை.

    அக்கம் பக்கம் உறவினர் வீடுக்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுபற்றி ராஜி தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மஞ்சுவை தேடி வருகின்றனர்.

    ×