என் மலர்
சேலம்
- ஒரு வாரத்துக்கு முன் கிலோ வெண்டைக்காய் ரூ.45-க்கு விற்றது.
- அதே வேளையில் வெளி மார்க்கெட்டில் வெண்டைக் காய் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டம் பனம ரத்துப்பட்டி வட்டாரத்தில் பாரப்பட்டி, வாணியம்பாடி, கம்மாளப்பட்டி, திப்பம்பட்டி, நாழிக்கல்பட்டி உள்ளிட்ட இடங்களில் 150 ஏக்கரில் வெண்டைக்காய் பயிரிடப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்படும் காய்களை சேலம் உழவர் சந்தையில் விவசாயிகள் விற்கின்றனர். குறிப்பாக தாதகாப்பட்டி உழவர் சந்தையில் ஒரு வாரத்துக்கு முன் கிலோ வெண்டைக்காய் ரூ.45-க்கு விற்றது. அப்போது வெளி மார்க்கெட்டுக்கள், மளிகை கடைகள், வணிக வளா கத்தில் உள்ள கடைகளில் 75 ரூபாய்க்கு விற்றது.
இந்த நிலையில் சில நாட்களாக வெண்டைக் காய்க்குதட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உழவர் சந்தையில் ஒரு கிலோ 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் வெளி மார்க்கெட்டில் வெண்டைக் காய் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இது குறித்து பன மரத்துப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் குமரவேல் கூறுகையில், பண்டிகை காலம் என்பதால் தேவை அதிகரித்து தட்டுப்பாட்டால் வெண்டைக்காய் விலை உயர்ந்துள்ளது, என்றார்.
- ஏற்காடு வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் உதவி திட்ட அலுவலர் தலைமையில் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
- இதில் 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக ஏற்காடு வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் உதவி திட்ட அலுவலர் சம்பத்குமார் தலைமையில் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
முகாமில் மகளிர் திட்டத்தின் திட்ட அலுவலர் பெரியசாமி, ஆணையாளர் அன்புராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன் மற்றும் மகளிர் திட்ட ஏற்காடு வட்டார மேலாளர் மகா லிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமை தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜா தொடங்கி வைத்தார்.
இதில் 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். முகா மில் 10 தனியார் துறை நிறு வனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய ஆட்களை தேர்ந்தெடுத்தனர். இதில் நேரடி வேலை வாய்ப்பாக 48 இளைஞர்களும், ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் வழங்கப்படும் கட்டணமில்லா மெக்கானிக், சில்லரை விற்பனை மற்றும் சந்தை படுத்துதல், சர்வீஸ் அட்வைசர், வாட்ச்மேன், சூப்பர்வைசர், கணக்காளர், நர்சிங் போன்ற பல பயிற்சி களுக்கு 56 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வானவர்களுக்கு மகளிர் திட்ட இயக்குனர் பெரியசாமி பணி ஆணையை வழங்கினார். முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிலம்பரசன் மற்றும் பெரியசாமி ஆகியோர் செய்திருந்தார்கள்.
- வாழப்பாடியில், பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- 2022 ஆகஸ்ட்டில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து கோஷமிட்டனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடியில், பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வாழப்பாடி வட்டத் தலை வர் வருவாய் ஆய்வாளர் கார்த்திக் வரவேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, வட்டாட்சியர்களுக்கு துணை ஆட்சியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி துணை வட்டாட்சியர் பதவியிறக்கத்தை ரத்து செய்து பதவி உயர்வை வழங்க ஆணை வெளியிட வேண்டும். அலுவலக உதவியாளர் காலி பணியி டங்களை நிரப்ப வேண்டும். இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர்களின் பதவி பெயர் மாற்ற அர சாணை வழங்க வேண்டும். 2022 ஆகஸ்ட்டில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து கோஷமிட்டனர். துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- பிற மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவியதால், இந்த தொழி லாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வகையில் ஆய்வு நடத்திட காவல்துறை யினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- அயோத்தியாப்பட்டணம் மற்றும் காரிப்பட்டி பகுதி யில் பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் தனியார் தொழிற்சாலைகள், அரிசி ஆலைகளில் வாழப்பாடி போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.
வாழப்பாடி:
தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவியதால், இந்த தொழி லாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வகையில் ஆய்வு நடத்திட காவல்துறை யினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அயோத்தியாப்பட்டணம் மற்றும் காரிப்பட்டி பகுதி யில் பிற மாநில தொழிலா ளர்கள் பணிபுரியும் தனியார் தொழிற்சாலைகள், அரிசி ஆலைகளில் வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி. ஹரிசங்கரி தலை மையில், இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் உள்ளிட்ட போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.
பிற மாநில தொழிலா ளர்களின் பாதுகாப்பை உறுதி செய்த போலீஸார், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். எவ்வித அச்சுறுத்தலும் பயமுமின்றி பணிபுரிந்து வருவதாக தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
- அரசு மேம்ப டுத்தப்பட்ட ஆரம்ப சுகா தார நிலையம், கடந்த 2016–-ம் ஆண்டு ஏப்ரல் 1–-ந்தேதி அரசு மருத்துவமனை யாக தரம் உயர்த்தப்பட்டது.
- இந்த மருத்துவமனையில், வாழப்பாடி பேரூராட்சி மற்றும் சுற்றுப்புற கிரா மங்களை சேர்ந்த நுாற்றுக்க ணக்கானோர் தினந்தோறும் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.
வாழப்பாடி:
வாழப்பாடி சுற்றுப்புற கிராம மக்களின் நலன் கருதி, வாழப்பாடியில் இயங்கி வந்த அரசு மேம்ப டுத்தப்பட்ட ஆரம்ப சுகா தார நிலையம், கடந்த 2016–-ம் ஆண்டு ஏப்ரல் 1–-ந்தேதி அரசு மருத்துவமனை யாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த மருத்துவமனையில், வாழப்பாடி பேரூராட்சி மற்றும் சுற்றுப்புற கிரா மங்களை சேர்ந்த நுாற்றுக்க ணக்கானோர் தினந்தோறும் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.
இதை 150 படுக்கை கொண்ட மருத்துவமனை யாக தரம் உயர்த்தி, மகப்பேறு, எழும்பு முறிவு, பொது மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ நிபுநர்கள், செவிலியர் உள்ளிட்ட மருத்துவ பணி யாளர்கள், இரவு காவலர் மற்றும் துாய்மை பணியாளர்கள் நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
வாழப்பாடி ஒன்றியத்தில் மக்கள் தொகை 1.30 லட்ச மாக உயர்ந்துள்ள நிலையில், சிங்கிபுரம் மற்றும் புழு திக்குட்டை ஆகிய இரு இடங்களிலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சேலத்தில் கலெக்டர் கார்மேகம் தலை மையில் நடைபெற்ற மாவட்ட சுகாதார பேரவை கூட்டத்தில், மக்கள் பிரதி நிதிகள் மற்றும் தன்னார்வ இயக்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறை வேற்றிக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக, மாவட்ட மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை உயர் அலுவலர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்றன.
- தேர்வர்கள் தங்களின் ஒரு முறை பதிவேற்றம் வழியாக நுழைந்து ஹால்டிக்கெட் பதிவிறக்கலாம்.
சேலம்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் அடங்கிய கால்நடை உதவி மருத்துவர்- 731 பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவையில் மருத்துவ உளவியலாளர் மற்றும் உளவியல் பிரிவு உதவி பேராசிரியர்- 33 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து தமிழகம் முழுவதிலும் இருந்து கால்நடை உதவி மருத்துவர் பணிக்கு கால்நடை இள நிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், ஆராய்ச்சி படிப்பு படித்தவர்களும், உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் பணிக்கு இது தொடர்பான இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பித்தனர். குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.
இந்த நிலையில் தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்கனவே அறிவித்தபடி கால்நடை உதவி மருத்துவர் பணிகளுக்கான தேர்வு 15-ந்தேதியும், மருத்துவ உளவியலாளர் மற்றும் உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் பணிகளுக்கான தேர்வு வருகிற 14-ம் தேதியும் கணினி வழி தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வுகள் 2 தாள்கள் கொண்டதாகும். தாள்-1 தேர்வு காலையிலும், தாள் -2 தேர்வு பிற்பகலிலும் நடைபெறுகிறது. இரண்டு தேர்வுகளும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்றன. தேர்வர்கள் தங்களின் ஒரு முறை பதிவேற்றம் வழியாக நுழைந்து ஹால்டிக்கெட் பதிவிறக்கலாம்.
- வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை முறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாநிலமும் தனியாகச் சட்டம் கொண்டு வந்துள்ளது.
- இருவருடைய உடல்களும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கந்து வட்டி, மீட்டர் வட்டி பெயரில் பல்வேறு வகைகளில் கடன் கொடுக்கப்படுகிறது. மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக கடன் வாங்கியவர்கள், சரியான நேரத்தில் கடன் தொகையை செலுத்தியும் கூட அவை வட்டிக்கே கழிந்து விட்டதாக கடன் கொடுத்தவர்கள் கூறுகிறார்கள். இதனால் கடன் வாங்கியவர்கள் சொத்துக்களை இழந்ததுடன், கடைசியில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
மாவட்டத்தில் காய்கறி சந்தை வியாபாரிகள் முதல் பெரிய, பெரிய முதலாளிகள் வரை இந்த கந்து வட்டி கும்பலிடம் சிக்கி திணறி வருகிறார்கள்.
கந்து வட்டி வசூலில் அரசியல் முக்கிய புள்ளிகளும் கோலோச்சி வருகிறார்கள். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் பலர் கந்துவட்டி கொடுத்து வருகிறார்கள்.
5 சதவீதம், 7 சதவீதம், 10 சதவீத வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்க தொடங்கி இருக்கிறார்கள். நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் பெண்கள் வட்டி தொழிலில் இறங்கி உள்ளனர். தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள் சில சுய உதவிக்குழு நடத்தி வரும் பெண்கள் சிலரை, தங்களது பணியாளர்களாக நியமித்து அவர்கள் மூலம் பெண்களுக்கு கடன் கொடுக்கிறார்கள். இது தவிர பெண்கள் சிலர் பைனான்ஸ் நிறுவனங்களில் கடன் பெற்று, அந்த கடன் தொகையை மீட்டர் வட்டி, கந்து வட்டி பெயரில் குடும்ப பெண்களுக்கு கொடுத்து வசூலிக்கிறார்கள்.
குழந்தைகளின் கல்வி செலவு, கணவரின் மருத்துவ செலவு உள்பட பல்வேறு அவசர தேவைகளுக்காக கடன் தொகையை வாங்கிய பெண்கள், அந்த கடன் தொகைக்கு மேல் செலுத்தியும் இன்னும் தீர்ந்தபாடில்லை. இதனால் செய்வதறியாமல் தவித்து வருகிறார்கள். கடன் கொடுத்த நபர்கள் கும்பலாக சென்று மிரட்டுவதால், கடன் வாங்கிய பெண்கள் கடைசியில் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்துக்கு வந்து புகார் அளிக்கலாம் என்ற நிலையை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
சேலத்தில் கந்து வட்டி கொடுமையால் லேத் பட்டறை உரிமையாளர் தங்கராஜ், அவரது மனைவி விஜயா, தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அடுத்து சிகிச்சை அளித்த தனியார் ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருவருடைய உடல்களும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரேத பரிசோதனை கூடம் முன்பு உறவினர்கள் திரண்டு கந்து வட்டிக்கு பணம் கொடுத்த நபரை கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும் என போலீசாரிடம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். மேலும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கந்துவட்டி கொடுமையால் கணவன்-மனைவி தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில்,
வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை முறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாநிலமும் தனியாகச் சட்டம் கொண்டு வந்துள்ளது. அதில் தமிழ்நாடு 1957-லிலிருந்து வட்டிக்குப் பணம் கொடுப்பதை நெறிப்படுத்தும் சட்டம் நடைமுறையில் உள்ளது.
அதன்படி வட்டிக்குப் பணம் கொடுப்பதைத் தொழிலாக நடத்துபவர்கள் முறைப்படி தாசில்தாரிடம் அனுமதி பெற்று நடத்த வேண்டும். இது தனி நபர், கூட்டாக பங்குதாரர்களாக நடத்தலாம். அடகு கடை வைத்திருப்பவர்கள் லைசென்ஸ் வாங்குவது போல் இதற்கும், 'மணி லெண்டர்ஸ் ஆக்ட் 1957'-ன் கீழ் உள்ள சட்டத்தின் கீழ் லைசென்ஸ் வாங்க வேண்டும். அப்படி இல்லாமல் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை முழுநேரத் தொழிலாக செய்வது சட்டப்படி குற்றம். அது மட்டுமின்றி, வட்டி பணம் கட்டாதவர்களை மிரட்டுவது, தொந்தரவு கொடுப்பது குற்றமாகும்.
இதனிடையே ராஜா, கந்து வட்டிக்கு பணம் கொடுத்துள்ளதால் அவர் மீது சட்டபடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- சேலத்தில் கந்து வட்டி கொடுமையால் கணவன்-மனைவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் ரெட்டியூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (வயது 65). இவர் மணக்காடு பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி விஜயா (58).
தங்கராஜ், அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரிடம் 2 லட்சம் பணம் கந்து வட்டிக்கு கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தங்கராஜ், கொஞ்சம் கொஞ்சமாக வட்டி பணம் மட்டும் கொடுத்து வந்தார். இந்த நிலையில் நாளடைவில் லேத் பட்டறையில் போதுமான வருமானம் கிடைக்கவில்லை. இதனால் தங்கராஜினால் வட்டி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் வட்டிக்கு பணம் கொடுத்த ராஜா அடிக்கடி அவரிடம் அசல் மற்றும் வட்டி பணத்தை சேர்த்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு தங்கராஜ், தன்னிடம் இப்போது பணம் இல்லை, சில நாட்கள் கால அவகாசம் கொடுங்கள். அதற்குள் பணம் கட்டி விடுகிறேன் என கூறியதாக தெரிகிறது. இருப்பினும் வருமானம் இல்லாததால் பணம் கொடுக்க முடியாமல் தங்கராஜ் தவித்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா, வட்டி மற்றும் அசல் பணம் கேட்டு அவருக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார். இதனால் மனமுடைந்த தங்கராஜ் விஷம் குடித்து மாமாங்கம் பகுதியில் மயங்கி கிடந்தார்.
அக்கம் பக்கத்தினர் பார்த்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உறவினர்கள் அங்கு சென்று அவரை மீட்டு சேலம் காந்தி விளையாட்டு மைதானம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தங்கராஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதனால் அவரது மனைவி விஜயா, கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். இது பார்க்க பரிதாபமாக இருந்தது. கணவரின் இந்த சாவுக்கு கந்து வட்டி கொடுமையே என எண்ணி கதறி துடித்த விஜயா, இனிமேல் இங்கு வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்தார். தொடர்ந்து அழுதபடியே கணவர் இறந்த துக்கத்தில் விஜயா ஆஸ்பத்திரியில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அஸ்தம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் சரவணகுமார், இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தங்கராஜ்-விஜயா ஆகியோர் உடல்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் வட்டிக்கு பணம் கொடுத்த ராஜா என்பவர், காவல்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து முறையாக அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.
பணம் கொடுக்காதவர்களை மிரட்டியும் வந்துள்ளார். அந்த வகையில் கந்து வட்டி கேட்டு தங்கராஜை அடிக்கடி மிரட்டி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனால் போலீசார், ராஜாவை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் கந்து வட்டி கொடுமையால் கணவன்-மனைவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1,500 கன அடியாக நீடிக்கிறது.
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்:
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்துள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1,500 கன அடியாக நீடிக்கிறது. அதேசமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1,223 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,224 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று 103.50 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 103.49 அடியாக சரிந்தது.
- சேலம் சூரமங்கலம் காசக்காரனூர் மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்தவரிடம் தனது வங்கிக் கணக்கில் இருந்து மோசடி நபர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு ரூ.9.75 லட்சத்தை பரிமாற்றம் செய்துள்ளார்.
- பின்னர் சூர்யாவிற்கு ஆன்லைன் வேலை உறுதி செய்யப்பட்டதாக தகவல் அனுப்பி விட்டு மர்ம நபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். அதன்பிறகு அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்ட சூர்யா தன் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் காசக்காரனூர் மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்தவர் மகேஷ் குமார். இவரது மனைவி சூர்யா (வயது 31).
இவரது செல்போனில் வாட்ஸ் அப் மூலம் வந்த ஒரு தகவல் வந்தது. அதில் குறிப்பிட்டுள்ள டாஸ்க்குகளை முடித்தால் ஆன்லைன் மூலம் வேலை தருவதாக கூறி ஒரு லிங்கை அனுப்பியுள்ளார்கள்.
இதை நம்பிய சூர்யா அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது சூர்யா தனது வங்கிக் கணக்கில் இருந்து மோசடி நபர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு ரூ.9.75 லட்சத்தை பரிமாற்றம் செய்துள்ளார்.
பின்னர் சூர்யாவிற்கு ஆன்லைன் வேலை உறுதி செய்யப்பட்டதாக தகவல் அனுப்பி விட்டு மர்ம நபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். அதன்பிறகு அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்ட சூர்யா தன் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இந்நலவாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள், மாவட்ட சிறுபான்மையினார் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
- கண் கண்ணாடி உதவித்தொகை ரூ.500, முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) ரூ.1,000 போன்ற நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று சேல்சம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.
சேலம்:
தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோகளின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக நலவாரியம் அமைக்க தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டு உள்ளது.
இந்நலவாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள், மாவட்ட சிறுபான்மையினார் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட எல்லைக்கு உட்பட்ட ரோமன் கத்தோலிக் திருச்சபை அதன் பேராயர்ள் மற்றும் ஆயர்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயர்கள், சினாட் ஆப் பெண்டகோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இந்த திருச்சபைகளின் பரிதுரையின் அடிப்படையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும். இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி உதவித் தொகை 10-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ பாலிடெக்னிக் படிப்பு, தொழிற்கல்வி, பட்டப்படிப்பு வரை, விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ.1 லட்சம், விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித் தொகை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை, இயற்கை மரணம் உதவித்தொகை ரூ.20 ஆயிரம், ஈமச்சடங்கு உதவித் தொகை ரூ.5 ஆயிரம், திருமண உதவித் தொகை ஆண்களுக்கு ரூ.3 ஆயிரம், பெண்களுக்கு ரூ.5 ஆயிரம், மகப்பேறு உதவித்தொகை ரூ.6 ஆயிரம், கருச்சிதைவு, கருக்கலைப்பு உதவித்தொகை ரூ.3 ஆயிரம், கண் கண்ணாடி உதவித்தொகை ரூ.500, முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) ரூ.1,000 போன்ற நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று சேல்சம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.
- கொங்கணாபுரம் போலீசார் இன்று காலை அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
- அப்போது அங்குள்ள பேக்கரி கடை அருகில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதை கண்ட போலீசார், அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
எடப்பாடி:
கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட, சமுத்திரம் ஊராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக எழுந்த புகாரின் பேரில், கொங்கணாபுரம் போலீசார் இன்று காலை அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பேக்கரி கடை அருகில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதை கண்ட போலீசார், அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்லதுரை (49) என்பதும், அவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கிராமப் பகுதி மக்களிடம் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்து ரொக்க பணம் ரூ.1100 மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு மாநில லாட்டரி சீட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






