என் மலர்
சேலம்
- வாழப்பாடி பஸ் நிலைய பழைய கட்டடங்கள் அகற்றப்பட்டு, ரூ.8.70 கோடி செலவில், நவீன ஈரடுக்கு பஸ் நிலையமாக தரம் உயர்த்தும் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
- நவீன ஈரடுக்கு பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல நுழைவு வாயில் அமைக்கப்பட்டு உள்ளது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பஸ் நிலைய பழைய கட்டடங்கள் அகற்றப்பட்டு, ரூ.8.70 கோடி செலவில், நவீன ஈரடுக்கு பஸ் நிலையமாக தரம் உயர்த்தும் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
எதிர்வரும் மே மாத இறுதிக்குள் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வாழப்பாடி பஸ் நிலையத்தின் நுழைவு வாயிலில் மறைந்த தேசிய தலைவர் அம்பேத்கர், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் ஆகியோரது முழு உருவ சிமெண்ட கான்கிரீட் சிலைகள் உள்ளன.
தலைவர்களின் சிலைகள் அமைந்துள்ள பகுதியில் தான், நவீன ஈரடுக்கு பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல நுழைவு வாயில் அமைக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த சிலைகளை அகற்றி வேறு இடத்தில் வைத்துக்கொள்ளு மாறு பேரூராட்சி நிர்வாகம், சிலைகளை அமைத்து பாராமரித்து வரும் அரசியல் கட்சியினரை கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் தலைமையில், நேற்று அமைதிக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், வருவாய் ஆய்வாளர் கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல், தி.மு.க ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத் தலைவர் அத்தனூர்பட்டி ராஜா, அ.தி.மு.க நிர்வாகிகள் செல்லையா, குமரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி முல்லை வாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தலைவர்கள் சிலைகளை அகற்றி, பேரூராட்சி மேல்நிலை குடிநீர் தொட்டி நீரேற்று நிலையம் அருகே அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது குறித்து நாளை மறுநாள் இடத்தை உறுதி செய்து, சிலைகளை மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- வாழப்பாடி பகுதியில் பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் தனியார் தொழிற்சாலைகளில் வாழப்பாடி இன்ஸ்பெக்டர் நேற்று ஆய்வு செய்தனர்.
- பிற மாநில தொழிலா ளர்களிடம் கலந்துரையாடி பாதுகாப்பை உறுதி செய்த போலீசார், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாமென அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாழப்பாடி:
தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, சமூக ஊடகங்களில் வதந்தி பரவியதால், இந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வகையில் ஆய்வு நடத்திட காவல் துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, வாழப்பாடி பகுதியில் பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் தனியார் தொழிற்சாலைகளில் வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையில் போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.
பிற மாநில தொழிலா ளர்களிடம் கலந்துரையாடி பாதுகாப்பை உறுதி செய்த போலீசார், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாமென அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, எவ்வித அச்சுறுத்தலும் பயமுமின்றி பணிபுரிந்து வருவதாக தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
- வாழப்பாடி அக்ரஹாரத்தில், 204 ஆண்டுகள் பழமையான பூதேவி, சீதேவி சமேத சென்றாயப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
- இக்கோவிலுக்கு ஆகமவிதிப்படி இலுப்பை மரத்தில், சிற்ப வேலைப்பாடுகளுடன் ரூ.25 லட்சம் செலவில் புதிய மரத்தேர் வடிவமைக்கப்பட்டது. இந்த புதிய மரத்தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரத்தில், 204 ஆண்டுகள் பழமையான பூதேவி, சீதேவி சமேத சென்றாயப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலுக்கு ஆகமவிதிப்படி இலுப்பை மரத்தில், சிற்ப வேலைப்பாடுகளுடன் ரூ.25 லட்சம் செலவில் புதிய மரத்தேர் வடிவமைக்கப்பட்டது. இந்த புதிய மரத்தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது.
வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தேரோடும் வீதிகளில் வீடுகள் தோறும் தாம்பூலம், அவுள், கடலை, வெல்லத்தோடு, திருவீதி உலா வந்த சுவாமிக்கு படையல் வைத்தனர். மேலும் பொரி உருண்டை, வாழைப்பழம் ஆகியவற்றை தேரின் மீது வீசி பக்தர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தேர் வெள்ளோட்ட த்தையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்றாய பெருமாள், மலர் மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்
- ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1,500 கன அடியாக நீடிக்கிறது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்துள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1,500 கன அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1,224 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1223 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்து குறைவாக உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 103.49 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 103.48 அடியாக சரிந்தது.
- தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள நெருப்பாண்டி குப்பம் பகுதியை சேர்ந்தவர் உறவினரை பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சேலம் அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவிற்கு வந்தவர்.
- உள்ளே சென்று உறவினரை பார்த்துவிட்டு திரும்பி வந்தார். அப்போது இவரது மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் மாற்றுச் சாவி மூலம் திறந்து கொண்டிருந்தார்.
சேலம்:
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள நெருப்பாண்டி குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமஜெயம் (வயது 33). இவர் நேற்று மாலை உறவினரை பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சேலம் அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவிற்கு வந்தவர்.
அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, உள்ளே சென்று உறவினரை பார்த்துவிட்டு திரும்பி வந்தார். அப்போது இவரது மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் மாற்றுச் சாவி மூலம் திறந்து கொண்டிருந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராமஜெயம் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து, அரசு ஆஸ்பத்திரி புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள தேக்கலூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நந்தகுமார் (26) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சீலநாயக்கன்பட்டி இரட்டை கோவில் அருகே கொத்தனார் மூர்த்தியை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்துச் சென்றார்.
- இது குறித்த புகாரின் பேரில் அன்னதா னப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து நிர்மல் தாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் எருமாபாளையம் சன்னியாசிகுண்டு பாறைக்காடு பகுதியை சேர்ந்தவர் நிர்மல் தாஸ் (வயது 22). இவர் கடந்த மாதம் 2-ந் தேதி சீலநாயக்கன்பட்டி இரட்டை கோவில் அருகே கொத்தனார் மூர்த்தியை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்துச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதா னப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து நிர்மல் தாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர் மீது ஏற்கனவே கிச்சிப் பாளையம், கொண்ட லாம்பட்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி வழக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பி டத்தக்கது. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் அவரை கைது செய்ய போலீஸ் கமிஷனர் விஜயகுமாரிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை ஏற்று நிர்மல் தாஸை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் உத்தரவிட்டார். இதற்கான ஆணையை சேலம் மத்திய சிறையில் உள்ள அவரிடம் போலீசார் வழங்கினர்.
- சேலம் நெடுஞ்சாலை நகர் நர்மதா தெருவை சேர்ந்த 41 வயது திருமணமான பெண்மணிக்கு, கடந்த 2 1/2 ஆண்டுகளாக போன் மூலம் தகாத முறையில் பேசியும், ஆபாச குறுந்தகல்களையும் வாலிபர் ஒருவர் தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார்.
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வடகம் பகுதியை சேர்ந்தவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சேலம்:
சேலம் நெடுஞ்சாலை நகர் நர்மதா தெருவை சேர்ந்த 41 வயது திருமணமான பெண்மணிக்கு, கடந்த 2 1/2 ஆண்டுகளாக போன் மூலம் தகாத முறையில் பேசியும், ஆபாச குறுந்தகல்களையும் வாலிபர் ஒருவர் தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார்.
பலமுறை கண்டித்தும், வாலிபர் தொடர்ந்து போன் மூலம் தொல்லை கொடுத்ததால், இதுகுறித்து அந்த பெண் சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்த நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வடகம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் பூபதி (வயது 36) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவேரி ஆற்றின் கரையோரப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கல்ல கொண்டான் முனியப்ப சாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை விமர்சையாக நடைபெற்றது.
- காவிரி ஆற்றங்கரையிலிருந்து தீர்த்த குடம் சுமந்த பக்தர்கள், நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து யாக சாலையில் சேர்த்தனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவேரி ஆற்றின் கரையோரப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கல்ல கொண்டான் முனியப்ப சாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை விமர்சையாக நடைபெற்றது.
பூலாம்பட்டி - மேட்டூர் பிரதான சாலையை ஒட்டிய காவிரி ஆற்றங்கரையோரம், கல்ல கொண்டான் முனி யப்பன் மற்றும் எல்லை முனியப்பன் பரிவார தெய்வங்கள் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோ வில் பகுதியில் இருந்து, அப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்காக தண்ணீர் பெற்று வருவதால் விவசாயி களின் காவல் தெய்வமாக அமைந்துள்ள கல்ல கொண்டான் முனியப்ப சாமி கோவில், சுற்று வட்டார பகுதி கிராம மக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது.
இக்கோவிலின் புனரமைப்பு பணிகள் அண்மையில் நிறைவுற்ற நிலையில், கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றங்கரையிலிருந்து தீர்த்த குடம் சுமந்த பக்தர்கள், நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து யாக சாலையில் சேர்த்தனர்.
கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, கும்ப பூஜை, நாடி சந்தானம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாக வேள்விகளை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற கோ பூஜையில் கன்றுடன் அழைத்து வரப்பட்ட பசு மாட்டின் முன், 7 சிறுமிகள் அலங்கரிக்கப்பட்டு அவர்களுக்கு பாத பூஜை செய்த பக்தர்கள் தெய்வமாக வழிபாடு செய்தனர்.
இந்த விழாவில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாக குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா விற்கான ஏற்பாடுகளை கல்லகொண்டான் முனி யப்ப சாமி ஆலய நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.
- 3 பேரும் ஒரே மோட்டர் சைக்கிளில் குமரகிரி அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கல்லூரி பஸ்சை முந்தி செல்லும்போது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற சரக்கு ஆட்டோவின் பின் பகுதியில் மோதினர்.
- இதில் கீழே விழுந்த 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில் ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதமாக இறந்தார்.
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி பொன்னுசாமி தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவர் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது 20). இவர் உடையாப்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். ரஞ்சித்குமாருக்கு நேற்று பிறந்த நாள் ஆகும். அவர் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டார்.
ரஞ்சித்குமாரின் நண்பர்கள் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சுந்தர் (22), ஓமலூர் பாகல்பட்டியை சேர்ந்த கவுதம் (19). இவர்கள் இருவரும் ரஞ்சித்குமாரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று அவரை அழைத்து வந்தனர்.
3 பேரும் ஒரே மோட்டர் சைக்கிளில் குமரகிரி அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கல்லூரி பஸ்சை முந்தி செல்லும்போது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற சரக்கு ஆட்டோவின் பின் பகுதியில் மோதினர்.
இதில் கீழே விழுந்த 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில் ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதமாக இறந்தார். கவுதம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார். சுந்தர் அரியனூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட சென்றபோது விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சங்ககிரி மோரூர் பிட் 1 கிராமம், என்.ஜி.ஏ ஸ்டீல் நிறுவனத்தில் சங்ககிரி போலீசார் சார்பில், வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
- 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி மோரூர் பிட் 1 கிராமம், என்.ஜி.ஏ ஸ்டீல் நிறுவனத்தில் சங்ககிரி போலீசார் சார்பில், வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு சங்ககிரி டி.எஸ்.பி ஆரோக்யராஜ் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், சங்ககிரியில் பணியாற்றும் பீகார், ஒரிசா உள்ளிட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். தேவையான பாதுகாப்பு உதவிகள் செய்யப்பட்டு உள்ளது. அதனால் எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லாமல் பணி செய்யலாம் என்றார்.
இதில், சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, எஸ்.ஐ சுதாகரன், என்.ஜி.ஏ ஸ்டீல் நிறுவன சேர்மன் அன்பழகன், நிர்வாக இயக்குனர் ராஜராஜன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
- கால்நடை பரா மரிப்பு துறையில் அடங்கிய கால்நடை உதவி மருத்து வர்- 731 பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவையில் மருத்துவ உளவியலாளர் மற்றும் உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் - 33 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டது.
- மருத்துவ உளவியலாளர் மற்றும் உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் பணிக ளுக்கான தேர்வு வருகிற 14-ம் தேதியும் கணினி வழி தேர்வு நடத்தப்படுகிறது.
ேசலம்:
தமிழ்நாடு அரசு பணியா ளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு கால்நடை பரா மரிப்பு துறையில் அடங்கிய கால்நடை உதவி மருத்து வர்- 731 பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவையில் மருத்துவ உளவியலாளர் மற்றும் உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் - 33 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டது.
சேலம், நாமக்கல்
இதையடுத்து தமிழகம் முழுவதிலும் இருந்து கால்நடை உதவி மருத்துவர் பணிக்கு கால்நடை இள நிலை, முதுநிலை பட்டப்ப டிப்புகள், ஆராய்ச்சி படிப்பு படித்தவர்களும், உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் பணிக்கு இது தொடர்பான இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு படித்த வர்களும் விண்ணப்பித்த னர். குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.
இந்த நிலையில் தேர்வர்க ளுக்கான ஹால்டிக்கெட் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்கனவே அறிவித்தபடி கால்நடை உதவி மருத்துவர் பணிக ளுக்கான தேர்வு 15-ந்தேதி யும், மருத்துவ உளவியலாளர் மற்றும் உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் பணிக ளுக்கான தேர்வு வருகிற 14-ம் தேதியும் கணினி வழி தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வுகள் 2 தாள்கள் கொண்டதாகும். தாள்-1 தேர்வு காலையிலும், தாள் -2 தேர்வு பிற்பகலிலும் நடைபெறுகிறது. இரண்டு தேர்வுகளும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையத்தால் நடத்தப்படு கின்றன. தேர்வர்கள் தங்க ளின் ஒரு முறை பதிவேற்றம் வழியாக நுழைந்து ஹால்டிக் கெட் பதிவிறக்கலாம்.
- தாரமங்கலம் அருகே மனநல காப்பகத்தில் நேற்று திடீரென வலிப்பு ஏற்பட்டது.
- இதனால் மயங்கிய விழுந்த அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகி லுள்ள அழகுசமுத்திரம் கிராமம் களர்பட்டியை சேர்ந்த லட்சுமி மகள் ஸ்வேதாமேரி (வயது 17). இவர் தாரமங்கலம் எம்.ஜி.ஆர். காலனி பகுதியில் உள்ள மனநல காப்பகத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு நேற்று திடீரென வலிப்பு ஏற்பட்டது.
இதனால் மயங்கிய விழுந்த அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுபற்றி காப்பக இயக்குனர் லாரன்ஸ் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






