என் மலர்
நீங்கள் தேடியது "idol relocation"
- வாழப்பாடி பஸ் நிலைய பழைய கட்டடங்கள் அகற்றப்பட்டு, ரூ.8.70 கோடி செலவில், நவீன ஈரடுக்கு பஸ் நிலையமாக தரம் உயர்த்தும் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
- நவீன ஈரடுக்கு பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல நுழைவு வாயில் அமைக்கப்பட்டு உள்ளது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பஸ் நிலைய பழைய கட்டடங்கள் அகற்றப்பட்டு, ரூ.8.70 கோடி செலவில், நவீன ஈரடுக்கு பஸ் நிலையமாக தரம் உயர்த்தும் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
எதிர்வரும் மே மாத இறுதிக்குள் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வாழப்பாடி பஸ் நிலையத்தின் நுழைவு வாயிலில் மறைந்த தேசிய தலைவர் அம்பேத்கர், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் ஆகியோரது முழு உருவ சிமெண்ட கான்கிரீட் சிலைகள் உள்ளன.
தலைவர்களின் சிலைகள் அமைந்துள்ள பகுதியில் தான், நவீன ஈரடுக்கு பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல நுழைவு வாயில் அமைக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த சிலைகளை அகற்றி வேறு இடத்தில் வைத்துக்கொள்ளு மாறு பேரூராட்சி நிர்வாகம், சிலைகளை அமைத்து பாராமரித்து வரும் அரசியல் கட்சியினரை கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் தலைமையில், நேற்று அமைதிக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், வருவாய் ஆய்வாளர் கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல், தி.மு.க ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத் தலைவர் அத்தனூர்பட்டி ராஜா, அ.தி.மு.க நிர்வாகிகள் செல்லையா, குமரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி முல்லை வாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தலைவர்கள் சிலைகளை அகற்றி, பேரூராட்சி மேல்நிலை குடிநீர் தொட்டி நீரேற்று நிலையம் அருகே அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது குறித்து நாளை மறுநாள் இடத்தை உறுதி செய்து, சிலைகளை மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.






