search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூலாம்பட்டியில் கல்லகொண்டான் முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
    X

    பூலாம்பட்டி காவிரி கரையில் உள்ள கல்லகொண்டான் முனியப்ப சாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றபோது எடுத்த படம்.

    பூலாம்பட்டியில் கல்லகொண்டான் முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா

    • எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவேரி ஆற்றின் கரையோரப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கல்ல கொண்டான் முனியப்ப சாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை விமர்சையாக நடைபெற்றது.
    • காவிரி ஆற்றங்கரையிலிருந்து தீர்த்த குடம் சுமந்த பக்தர்கள், நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து யாக சாலையில் சேர்த்தனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவேரி ஆற்றின் கரையோரப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கல்ல கொண்டான் முனியப்ப சாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை விமர்சையாக நடைபெற்றது.

    பூலாம்பட்டி - மேட்டூர் பிரதான சாலையை ஒட்டிய காவிரி ஆற்றங்கரையோரம், கல்ல கொண்டான் முனி யப்பன் மற்றும் எல்லை முனியப்பன் பரிவார தெய்வங்கள் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோ வில் பகுதியில் இருந்து, அப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்காக தண்ணீர் பெற்று வருவதால் விவசாயி களின் காவல் தெய்வமாக அமைந்துள்ள கல்ல கொண்டான் முனியப்ப சாமி கோவில், சுற்று வட்டார பகுதி கிராம மக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது.

    இக்கோவிலின் புனரமைப்பு பணிகள் அண்மையில் நிறைவுற்ற நிலையில், கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றங்கரையிலிருந்து தீர்த்த குடம் சுமந்த பக்தர்கள், நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து யாக சாலையில் சேர்த்தனர்.

    கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, கும்ப பூஜை, நாடி சந்தானம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாக வேள்விகளை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற கோ பூஜையில் கன்றுடன் அழைத்து வரப்பட்ட பசு மாட்டின் முன், 7 சிறுமிகள் அலங்கரிக்கப்பட்டு அவர்களுக்கு பாத பூஜை செய்த பக்தர்கள் தெய்வமாக வழிபாடு செய்தனர்.

    இந்த விழாவில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாக குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா விற்கான ஏற்பாடுகளை கல்லகொண்டான் முனி யப்ப சாமி ஆலய நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×